சரோஜாதேவியின் அசரடித்த உறுதி.. உடம்பு நிறைய துணியை போட்டு வர்ற "நடிகை".. யார் பாருங்க.. சபாஷ் சரோஜா
சென்னை: அரசியல் வாய்ப்புக்காக, என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் பெரும்பாலானோருக்கு மத்தியில், சரோஜாதேவியின் நேர்மையும், உறுதிப்பிடிப்பும் பலரையும் வியப்புக்குள்ளாக்கி வருகிறது.
அதேபோல், மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கமும் எழுபதுகளிலேயே கட்சியில் சேரும்படி அழைப்புமேல் அழைப்பு விடுத்தது. இங்கே, எம்ஜிஆருக்கும் கைகொடுக்கவில்லை. கைச்சின்னம் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கும் கைகொடுக்கவில்லை சரோஜாதேவி.
பரிதாபம்: சரோஜாதேவியின் கணவர் இறந்த அதே நாளில்தான், இரவு 8 மணிக்கு, சென்னையில் நடிகை வைஜெயந்திமாலாவின் கணவரும் இறந்துவிட்டார்.. அவர் டாக்டர் பாலி.. 60-வது வயதில் பாலி மரணம் அடைந்தார்.

மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அதற்கான ஆபரேஷன்கள் நடந்தும்கூட, அவரை காப்பாற்ற முடியவில்லை.. ஒரே நாளில் 2 நடிகைகளின் கணவர்களும் இறந்தது அவரவர் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தன.
வைஜெயந்தி மாலா: சரோஜாதேவி கணவர் ஸ்ரீஹர்ஷா, மாரடைப்பால் காலமானார்.. அவரது உடல், கொடி கனஹள்ளி என்ற இடத்தில் உள்ள சரோஜாதேவிக்கு சொந்தமான தோட்டத்தில் மறுநாளே அடக்கம் செய்யப்பட்டது. சரோஜாதேவிக்கு உலக நாடுகளில் வாழும் பல்வேறு மக்கள் அனுதாப செய்திகளை அனுப்பியவண்ணம் இருந்தனர். அதில் பலரும், "சிறுவயதிலேயே கணவரை இழந்துவிட்டீர்கள், மறுமணம் செய்து கொள்ளுங்கள்" என்றெல்லாம் கண்ணீர் வடித்து எழுதியிருந்தார்களாம்..
இன்னொருபக்கம் சில தொழில் அதிபர்களும், பெரிய பெரிய பணக்காரர்களும் சரோஜாதேவியை மறுமணம் செய்து கொள்ள முன்வந்தார்களாம்.

"கோடிக்கணக்கில் எனக்கு சொத்து இருக்கிறது, எஸ்டேட் இருக்கிறது, உங்களிடம் எனக்கு இனியும் பணம் தேவையில்லை.. ஆனால், தனிமை மிகக்கொடுமையானது.. என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றுகூட, கரிசனமும், அன்பையும் காட்டி கடிதங்களை எழுதினார்களாம்.. எனினும், தன் கணவர் மீதான அன்பை அபரிமிதமாக வைத்திருந்த சரோஜாதேவி, இன்னொரு மணம் குறித்து சிந்திக்கவேயில்லை.
பாசக்கார மகள்: கணவர் மீதான அன்பை போலவே, தன்னுடைய தந்தை மீதும் மிகுந்த பாசத்தை வைத்திருந்தார் சரோஜாதேவி.. அரசியலுக்கு வரமுடியாமல் போக, இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.
கணவர் இழந்த மீளா துயரத்தில் இருந்து நீ வெளிவரவேண்டும். இல்லாவிட்டால் இதையே நினைத்துக் கொண்டே இருந்தால் மனதில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்று எம்ஜிஆர் சொன்னாராம்.. சரோஜாதேவிக்கு எம்பி பதவி தருமாறு ராஜீவ் காந்தியிடம் சிபாரிசு செய்கிறேன் என்றும் சொன்னாராம். சரோஜாதேவியை டெல்லிக்கு அழைத்த ராஜீவ் காந்தியும், மைசூரில் மண்டியா என்ற பகுதியில் போட்டியிட சொன்னாராம். எனினும் அதை மறுத்துள்ளார்.
விளக்கம்: ஒருமுறை சேனல் ஒன்றுக்கு சரோஜாதேவி பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில், அரசியலில் தான் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்தும் விளக்கமாக கூறியிருந்தார்.

"நேர்மையாக வாழ்வதற்குத்தான் என் அப்பா சொல்லித்தந்திருக்கிறார். அதன்படியே வாழ்ந்துகொண்டும் இருக்கிறேன். அரசியலில் நேர்மையை கடைப்பிடிக்கமுடியுமா என்று தெரியவில்லை. அரசியல் ஒரு தரப்பினருக்கு நல்லவராக இருக்கும் இன்னொரு தரப்பினருக்கு கெட்டவராக இருக்கும். ஆனால் நான் ஒரு பொதுவான ஆள் எனக்கு அரசியல் வேண்டாம். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று நாகரீகமாகவும், மென்மையாகவும் சொல்லி மறுத்துள்ளார்.
சத்தியம் செய்த சரோஜாதேவி: ஆனாலும் ராஜீவ் காந்தி, "அப்படியானால், நீங்கள் வேறு எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யக்கூடாது. எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள்" என்று கேட்டாராம். அதற்கு சரோஜாதேவியும் சத்தியம் செய்து தந்துள்ளார்.. இப்போதுவரை அந்த சத்தியத்தை சரோஜாதேவி மீறாமலும் உள்ளார்.
ஏதேனும் விசேஷம், விழா என்றால் சரோஜாதேவியின் வீடுகளில் நடிகர்கள் பங்கேற்பது வழக்கம்.. அந்தவகையில், நடிகவேள் எம்ஆர் ராதாவும் கலந்து கொள்வாராம்.. சரோஜாதேவி வீட்டிற்குள் நுழையும்போதே, "அம்மா சரோஜா" என்று அன்பாக கூப்பிடுவாராம்.. உடனே அவரிடம் ஓடிச்சென்று, காலில் விழுந்து ஆசி வாங்குவாராம் சரோஜாதேவி.
சரோ: சரோஜாதேவியின் அம்மாவிடம், உம் பொண்ணை நல்லா வளர்த்து வெச்சிருக்கே... உடம்பு நிறைய துணி போட்டு வர்ற நடிகை யாருன்னா, அது நம்ம சரோஜாதான்.. என்னா அழகு.. ரொம்ப சந்தோஷம் என்று மனமார வாழ்த்துவாராம்.. யாரிடம் சரோஜாதேவி பற்றி பேசினாலும், "சரோ நல்ல பொண்ணு" என்று சொல்லுவாராம் எம்ஆர் ராதா.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications