சூப்பர் ஹெவி ரெய்ன்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?

தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் அதி தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Super Heavy rain will lash few parts of Tamilnadu tomorrow says Tamilnadu Weather Man.

    சென்னை: தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் அதி தீவிர கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்து இருக்கிறார்.

    தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை இந்த மழை தீவிரம் அடைந்தது. நேற்று நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு முழுக்க மழை பெய்தது.

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் போக போக தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழக வானிலை குறித்து தற்போது தமிழ்நாடு வெதர்மேன் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

    என்ன போஸ்ட்

    என்ன போஸ்ட்

    தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில், காற்றழுத்த தாழ்வு நிலை கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னை கடல் பகுதிக்கு அருகே இது நகர்ந்து செல்கிறது. இதனால் காற்று சென்னையில் வடமேற்கு திசையில் வீசும். இதனால் பகல் பொழுதில் சென்னையில் லேசான மழை பெய்யவே வாய்ப்புள்ளது.

    காற்றின் திசை

    காற்றின் திசை

    அதே சமயம் காற்றின் திசை மாறினால் நல்ல கனமழை இன்று பெய்யும். காற்றை பொறுத்து காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையில் இன்று மழை பெய்யும். நேற்று காற்று திசை மாறியதால் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையில் நல்ல மழை பெய்தது.

    நாளை கேரளா

    நாளை கேரளாவில் சூப்பர் ஹெவி ரெய்ன் (அதி தீவிர மழை) பெய்யும். அரபிக்கடலில் இதனால் மழை அதிகமாக பெய்யும். ஆகவே ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரியில் அதி தீவிர மழை பெய்யும். கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.

    இரவு நேரம்

    இரவு நேரம்

    ராமநாதபுரத்தில் நேற்று அதிகமாக மழை பெய்தது. இரவு முழுக்க கனமழை பெய்தது. பாம்பனில் 188 மிமீ மழை பெய்தது. அதேபோல் மண்டபம் பகுதியில் 177 மிமீ மழை பெய்தது. தங்கச்சி மடத்தில் 168 மிமீ மழை பெய்தது, என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+