"கிரேட் சேஞ்ச்".. ஆதார் அட்டையில் உங்க போட்டோ புடிக்கலையா.. புது போட்டோ எப்படி மாற்றுவது தெரியுமா?
சென்னை: ஆதார் அட்டையில் நம்முடைய பழைய புகைப்படத்துக்கு பதிலாக புதிய புகைப்படத்தை மாற்றலாமா? எளிதாக மாற்றலாம் என்கிறார்கள்.. அது எப்படி மாற்றுவது என்பது குறித்த வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
நம் நாட்டிலுள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.. ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்று இப்போது ஆகிவிட்டது.

அப்படிப்பட்ட மிக முக்கியமான ஆதாரமான, அடையாள ஆவணமாக உள்ள ஆதார் கார்டில் உள்ள போட்டோ பெரும்பாலும் அவரவருக்கு பிடிக்காத ஒன்றாகவே இருக்கும்.
போட்டோக்கள்: காரணம், அந்த நேரத்தில் அவசர அவசரமாக போட்டோக்களை பலர் எடுக்க வேண்டி வந்தது.. எனவே அவர்களின் போட்டோக்கள் அவர்களுக்கே அடையாளம் தெரியாத வகையில் தெளிவில்லாமல் இருக்கும்.. சிலருக்கு சிறு வயதில் எடுத்த போட்டோ என்பதால் அடையாளமே தெரியாத அளவில் இருக்கும். இதை வைத்து நிறைய மீம்ஸ்களும் வெளியாகி உள்ளன.
வழிமுறைகள்: இதனால் நிறையப் பேர் தங்களது ஆதார் கார்டில் சமீபத்திய போட்டோவை அப்டேட் செய்யலாம் என்று நினைக்கக்கூடும்.. அது எளிதான காரியம்தான்... பொதுவாகவே, ஆதாரில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை ஆன்லைனிலேயே அப்டேட் செய்துவிடலாம். ஆனால், கைரேகை, புகைப்படம் போன்றவற்றை ஆதார் சேவை மையத்தில்தான் அப்டேட் செய்ய முடியும். ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமானால், அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
- UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (uidai.gov.in) பார்வையிடவும் அல்லது இந்த இணைப்பை (https://uidai.gov.in/) கிளிக் செய்யவும்.
- இப்போது 'Aadhaar Update' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- ஆதார் பதிவு படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை நிரப்பவும்.
- அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
- அங்கு இருக்கும், ஆதார் ஊழியர் அனைத்து விவரங்களையும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் சரிபார்ப்பார்.
- உங்கள் ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்படும் புதிய புகைப்படத்தை பணியாளர் உங்களை படம் எடுத்துக்கொள்வார்.
- இந்த சேவைக்காக 100 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.
- ஆதார் ஊழியர் உங்களுக்கு ஒப்புகை சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN - Update Request Number) வழங்குவார்.
- உங்கள் புகைப்படம் 90 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்.
ஆதார் அட்டை போட்டோ புதுப்பிப்பு: இதற்குப் பிறகு, உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனிலும் கண்காணிக்கலாம். UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் URN எண்ணைப் பயன்படுத்தி புதிய ஆதார் அட்டையின் நிலையைக் கண்காணிக்கலாம். நீங்கள் வழங்கிய விவரங்கள் ஆதார் போர்ட்டலில் புதுப்பிக்கப்பட 90 நாட்கள் ஆகும்.

நீங்கள் கொடுத்த விவரங்கள் மற்றும் போட்டோக்கள் புதுப்பிக்கப்பட்டதுமே, ஒரு புதிய நகலை பதிவிறக்கம் செய்து அதை அச்சிடவும் முடியும். இருந்தாலும், ஆதார் அட்டையில் போட்டோக்களை புதுப்பிக்கும் முழு செயல்முறையையும் ஆன்லைனில் செய்ய முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்... இதற்கு கண்டிப்பாக ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டுமாம்..!!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications