Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகளுக்கு ஹேப்பி.. மத்திய அரசின் கிசான் கிரெடிட் கார்டு வேணுமா? சூப்பர் கடனுதவி திட்டம் இருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் கிசான் ரின் போர்ட்டல் என்றால் என்ன? கிசான் கிரெடிட் கார்டுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா?

இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான்.. அதனால்தான், விவசாயிகளின் நலனில் மத்திய அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஏராளமான நலத்திட்டங்களையும், கடனுதவியையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது.

Super Loan assistance Scheme for the farmers by Central Government and Do you know about Kisan Credit Card Kisan Rin portal

அந்தவரிசையில், பிஎம் கிசான் எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டமும் ஒன்றாகும்.. விவசாயிகளுக்கு பண உதவிகளை, ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு வருடத்துக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்கிறது மத்திய அரசு.

கடனுதவி: இதுபோலவே விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட திட்டம்தான் கிசான் கிரெடிட் கார்டு திட்டமாகும்.. ஆனால், எளிமையான முறையில் இந்த திட்டத்தின்கீழ் விவசாயிகளால் கடன்களை பெற முடிவதில்லை.

இதன்காரணமாகவே, "கிசான் ரின்" என்ற போர்ட்டலை அறிமுகப்படுத்தியிருந்தது மத்திய அரசு.. அதாவது, விவசாயிகளுக்கு விரைவாக கடன் வழங்குவதற்காகவே, இந்த வெப்சைட் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசு துறைகள் பலவற்றுடன் சேர்ந்து உருவாக்கப்பட்ட இந்த வெப்சைட்டில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதிச்சேவைகள், கடன் வழங்குதல், வட்டி மானிய கோரிக்கைகள் மற்றும் பயன்பாடு பற்றிய விரிவான தரவுகள் கிடைக்கும்.. இந்த "கிசான் ரின் வெப்சைட்" மூலமாக, தொழில் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமல்ல, வணிகத் துறையில் முதலீடு செய்யவும், விவசாய உற்பத்தி திறனை அதிகரிக்கவும் இந்த வெப்சைட் பேருதவியாக இருக்கும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.

லோன் போர்ட்டல்: அத்துடன், கிசான் லோன் போர்ட்டல் மூலம் கிசான் கிரெடிட் கார்டுகளையும் எளிதாக பெறலாம். வீடு வீடாக சென்று பதிவு செய்து கிசான் கிரெடிட் கார்டுகளை விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும்நிலையில், இந்த இணையதளம் மூலம் விவசாயிகள் விவசாய கடன்களை பெற்றுக் கொள்ளலாம்.

விவசாயிகள் கடன் தொடர்பான ஆலோசகர்களை, இந்த வெப்சைட் மூலமாக தொடர்புகொள்ளலாம்.. கிசான் கிரெடிட் கார்டு குறித்த பயன்பாடுகளையும நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்.. கிசான் கிரெடிட் கார்டு (KCC) மூலம் கடன் பெற்ற விவசாயிகளும், தங்களுக்கு என்ன விவரம் வேண்டுமோ அதனை இந்த வெப்சைட்டில் தெரிந்து கொள்ளலாம்.

கடன் வசதிகள்: இந்த "கிசான் ரின் வெப்சைட்"டின் பலன்கள் கிடைக்க வேண்டுமானால், ஆதார் கார்டு உதவியுடன் விவசாயிகள் ரிஜிஸ்டர் செய்தாலே, போதும்.. தேவையான விவரங்களை நேரடியாகவே பெறலாம். மொத்தத்தில், மிக குறைந்த நேரத்தில், எளிதாக விவசாய கடனை பெறுவதற்கு இந்த வெப்சைட் பேருதவி செய்து கொண்டிருக்கிறது.

கிசான் கிரெடிட் கார்டுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா? விவசாயம், மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு என விவசாயம் தொடர்பாக ஏதாவது தொழிலை செய்ய விரும்பினால், இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் கடனை பெறலாம்... குறுகிய கால கடன் திட்டம் என்பதால், விவசாயிகளுக்கு 2 சதவீதம் முதல் 4 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்திலேயே கடன் வழங்கப்படுகிறது..

குறைந்த வட்டி: மலிவான வட்டி விகிதம் என்பதுடன், இந்த கடனை திரும்ப செலுத்த விவசாயிகளுக்கு அதிகமான கால அவகாசமும் தரப்படுகிறது.. இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கு சென்று, கிசான் கிரெடிட் கார்டுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த படிவத்துடன் முகவரி சான்றிதழ், வருமான சான்றிதழ், அடையாள சான்று போன்ற ஆவணங்களையும் இணைத்து, படிவத்துடன் சேர்த்து வங்கியில் சமர்ப்பித்தால் போதும். உங்கள் படிவம் சரிபார்க்கப்பட்டு, விரைவில் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+