"மாஸ்டர் மைண்ட்".. நம்ம வானதியா இது.. ஒரே டான்ஸ்தான்.. ஞான் + நன்னி.. அப்ப தாமரை மலர்ந்துடுமோ..!
மலையாள புடவையுடன், ஓணம் வாழ்த்து சொல்லி வீடியோ பதிவிட்டுள்ளார் வானதி
சென்னை: வானதி சீனிவாசன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்... அதில் மலையாள புடவையை கட்டிக் கொண்டு, மலையாளத்திலேயே வாழ்த்து சொல்லி உள்ளார்..!
தமிழக பாஜகவில் தவிர்க்க முடியாத முக்கிய தலைவராக உருவெடுத்திருப்பவர் வானதி சீனிவாசன்.. தமிழிசையை போலவே மிக தீவிரமான கட்சிப் பணியை ஆற்றி வருபவர்.. சிறந்த அறிவாளி..
எதையும் நாசூக்காகவும், அதேசமயம் புள்ளி விவர தரவுகளுடனும் மிக பொறுமையாக பேசுவது இவரது சுபாவம். தமிழிசை சவுந்தராஜன் இருக்கும்போதும் சரி, இல்லாதபோதும் சரி, பாஜகவின் கொள்கைகளை எல்லா இடங்களிலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் பரவ செய்தவர்..

டீ கிளாஸ்
தமிழிசையை போலவே எதிர்க்கட்சிகளின் மீது நாகரீகமான வார்த்தைகளையும், கண்ணியம் மிகுந்த விமர்சனத்தையும் எடுத்துரைப்பவர்... கோவை தெற்கின் எம்எல்ஏ ஆனபிறகு, தொகுதி மக்களுடன் எந்நேரமும் நெருங்கியே இருந்து வருகிறார் வானதி.. அவருக்கான பொறுப்புகளும் அங்கு கூடிவிட்டன. வழக்கமாக, விடிகாலையிலேயே தன்னுடைய தொகுதி பணியை ஆரம்பித்துவிடுவார் வானதி.. இவரை தெருவில் பொதுமக்கள் பார்த்தவுடனேயே கையில் டீ கிளாசுடன் வந்துவிடுவார்கள்..
அப்படி ஒருபாசமழையை தொகுதி மக்கள் வானதி மீது பொழிந்துள்ளனர்.. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு கோயில் திருவிழாவின் கும்பாபிஷேகம் நடந்தது..

வளையல் மாட்டிக் கொண்ட வானதி
இந்த திருவிழாவுக்கு வானதியும் வந்திருந்தார். கோவிலுக்கு வெளியே சில பெண்கள், வளையல் கடை போட்டிருந்தனர்.. அவர்கள் வானதியை பார்த்ததுமே தங்கள் கடைக்கு வருமாறு அழைத்தனர். வானதியும் வளையல் கடைக்கு சென்றார்.. "ஏம்மா.. கோவிலுக்கு வந்துட்டு வளையல் போடாம போகலாமா? வாங்க கண்ணு?" என்று அவரது கையை பிடித்து செல்லமாக இழுத்தனர்.. வானதி அப்போது வெட்கப்பட்டுக் கொண்டே நிற்க, சில வளையல்களையும் எடுத்த அந்த பெண்கள், வானதிக்கு கையோடு மாட்டியும் விட்டனர்..

சேச்சிமார்கள்
அந்த அளவுக்கு தொகுதி மக்களின் அன்பிலும், உரிமையான பாசத்திலும் கரைந்து கொண்டிருப்பவர் வானதி.. இந்நிலையில், வீடியோவுடன் கூடிய ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அந்த வீடியோவில் வானதி, ஓனம் புடவை கட்டி உள்ளார்.. "நமஸ்தே.. எல்லா மலையாளி சேட்டன் சேச்சிமார்க்கும் என்ட திருவோண விசுக்கள்.. எல்லார்க்கும் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்ட ஞான் பிரார்த்திக்கணும்.. நன்னி" என்று மலையாளத்திலேயே வாழ்த்து சொல்லி உள்ளார்.

ஓணம் + டான்ஸ்
கோவையில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள், ஓணம் பண்டிகையினை உற்சாகமாக நேற்றில் இருந்து கொண்டாடி வருகின்றனர்... அந்தவகையில், கோவை ராம்நகரில் பாஜகவைச் சேர்ந்த மலையாள மொழி பேசும் நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பங்கேற்றார்.. அவர்களுடன் சேர்ந்து வானதியும் ஓணம் டான்ஸ் ஆடினார்... இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், மலையாளத்தில் வானதி வாழ்த்து சொன்ன இன்னொரு வீடியோவும் கோவையில் உள்ள கேரள மக்களை திரும்பி பார்க்க வைத்துவருகிறது.

மலையாளிகள்
இதில் இன்னொரு சமாச்சாரமும் ஒளிந்துள்ளது.. கோவையை பொறுத்தவரை, ஏராளமான மலையாளிகள் வசிக்கும் பகுதியாகும்.. பக்கத்திலேயே கேரள மாநிலம் உள்ளதால், ஏராளமான மலையாள மக்கள், இங்கு குடியேறி உள்ளனர்.. பல நிறுவனங்களின் ஓனர்கள் மலையாளிகள்தான்.. நிறைய கடைகளில் வேலை பார்ப்பவர்களும் மலையாளிகள்தான்.. அதனால், குறிப்பிட்ட சதவீதம் பேர் குடும்பத்துடன் கோவை பகுதியில் வசித்து வருகின்றனர்.. அதனால்தான், ஓணம் பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.. இந்த மக்களின் வாக்கு வங்கிகளை ஈர்க்க பல தலைவர்கள் ஒவ்வொரு தேர்தலின்போதும் முயல்வார்கள்.. அந்தவகையில், வானதியின் ஓணம் டான்சும் சரி, ஓணம் வாழ்த்தும்சரி, நாளை வாக்குகளாக மாறினாலும் வியப்பில்லை..!
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications