பட்டா மாறுதலில் சூப்பர் வசதி! ஆனாலும் ஆன்லைனில் வந்த சிக்கல்? நம்பர் மாறுதா? ஹோப் தந்த வருவாய்த்துறை
சென்னை: தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்க தமிழக அரசு ஏற்கனவே ஒப்புதல் தந்திருந்த நிலையில், வீட்டு வசதி வாரியத்திடமிருந்து வாங்கிய சொத்திற்கு பட்டா பெறவும் சிறப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.. அதேபோல, பட்டா மாறுதலும் பொதுமக்கள் வசதிக்காக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.. எனினும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பவர்கள் புதுவிதமான சிக்கலை சந்திப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கையை வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பும் மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.
கடந்த 2000 ஆம் ஆண்டில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, நில வரன்முறை நடவடிக்கைகள் ஆரம்பமாகின.. அதனடிப்படையில் தகுதி வாய்ந்த மக்களுக்கு நிலத்துக்கான பட்டா வழங்கப்பட்டு வருகின்றன. வெவ்வேறு திட்டங்கள் வாயிலாக, அனைத்து பிரிவு மக்களுக்கும், வீட்டுமனை பட்டா வழங்கப்படுகின்றன.

இலக்கு நிர்ணயம்
இந்த வருடம் மட்டும் 6.29 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. இதில், 3.55 லட்சம் பட்டா வழங்கப்பட்டு விட்டன. மிச்சமுள்ள பட்டாக்களை மாதத்துக்கு, 50,000 வீதம் வரும் டிசம்பருக்குள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது..
வருடத்துக்கு 1.11 கோடி பட்டா பெயர் மாறுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பகுதிகளில், வீடு வாங்கிய மக்களுக்கு நேரடியாக பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதால், விடுபட்டவர்களுக்கும் விரைந்து பட்டா வழங்கப்பட உள்ளன.
பெல்ட் ஏரியா பட்டா
அதேபோல, சென்னையை சுற்றியுள்ள, பெல்ட் ஏரியா பகுதியியிலும் பட்டா வழங்கும் பணி ஆரம்பமாகியிருக்கின்றன.. இதற்கான விதிமுறைகளில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் கோரி, இ-சேவை மையங்கள் வாயிலாக வரும் விண்ணப்பங்களை விரைந்து முடிக்க சமீபத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது..
அத்துடன், நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு, உரிய காரணங்களை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். பட்டா விநியோகம், பட்டா மாறுதல் உள்ளிட்டவைகளில் விறுவிறு பணிகளை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகிறார்கள்.. அதேபோல தானியங்கி பட்டா மாறுதல் பணிகளும் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றன..
சர்வேயர், விஏஓ
இப்படிப்பட்ட சூழலில், பட்டா மாறுதலில் குறிப்பாக, உட்பிரிவு உருவாக்க வேண்டிய பட்டா மாறுதலில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, சொத்து வாங்குவோர், அசல் பத்திரங்கள் மற்றும் வில்லங்க சான்றிதழுடன் இ-சேவை மையங்களில் கட்டணம் உரிய செலுத்தி விண்ணப்பிக்கும்போது, ஆதார் , செல்போன் எண்கள் உள்ளிட்ட விபரங்களை பதிவிடுகிறார்கள்.. இந்த விவரங்கள் சர்வேயர் அல்லது விஏஓவுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், தமிழ் நிலம் என்ற சாப்ட்வேர் வாயிலாக விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால், இ சேவை மையங்களில், பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தால், விண்ணப்பதாரர்களின் செல்போன் நம்பர் உள்ளிட்ட விபரங்கள், https://tamilnilam.tn.gov.in/citizen/ அதாவது தமிழ் நிலம் சாப்ட்வேர் ஆய்வின்போது மாறிவிடுகிறதாம்.. சம்பந்தப்பட்ட எண்ணுக்கு அழைத்தால் விண்ணப்பதாரர் கிடைப்பதில்லை என்று சர்வேயர், விஏஓக்களும் கூறுகிறார்களாம்.
கோரிக்கை - பரிசீலிப்பு
இசேவை மையங்களில் தாங்கள் சரியாக தரப்படும் செல்போன் எண், எப்படி திடீரென மாறும்? தொழில்நுட்ப கோளாறு ஏதாவது உள்ளதா? என தெரியவில்லை.. இதுகுறித்து உயரதிகாரிகள்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செல்போன் நம்பர் தானாக மாற வாய்ப்பில்லை என்றாலும், பொதுமக்களின் புகார் குறித்து விரைந்து ஆய்வு செய்து, கோளாறு இருந்தால் அவை சரிசெய்யப்படும் என்றும் வருவாய் துறை அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தரப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications