ரூ.20 நோட்டு இருக்கா? பழைய 20 ரூபாய் நோட்டு இருந்தாலே.. ரூ.6 லட்சம் சம்பாதிக்கலாமே.. சூப்பர் சான்ஸ்
சென்னை: பழைய 20 ரூபாய் நோட்டுகள் இருந்தால் போதும்.. லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என்று சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவி ஆச்சரியத்தை கிளப்பி வருகின்றன. எப்படி தெரியுமா?
ரிசர்வ் வங்கி அவ்வப்போது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்து புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அதற்கேற்றவாறு, அரியவகை 10 ரூபாய்களுக்கு தற்போது பஞ்சமாகிவிட்டது. பழைய 10 ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை வைத்தே சம்பாதிக்கலாம்-

சீரியல் நம்பர்: காரணம், இந்த 10 பழைய ரூபாய் நோட்டில்தான், சீரியல் நம்பர் இருக்கும்.. இந்த சீரியல் நம்பர் ரொம்ப ஸ்பெஷலானது.. அதுவும் ஜீரோ நம்பர் அதிகமாக இருக்கும், இந்த நோட்டுகளுக்கு நிறையவே டிமாண்ட் இருக்கிறது..
அதைவிட முக்கியமாக, நம்பர் 9 அதிகம் கொண்ட 10 ரூபாய் நோட்டுகளுக்கு கூடுதல் டிமாண்ட் உள்ளது. பழைய 10 ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரில் 0 நம்பர் அதிகமாக இருந்தால் அந்த ரூபாய் நோட்டு அதிக விலைக்கு வாங்கப்படும்.. 10 ரூபாய் நோட்டுகளை தந்து, 10 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கலாம்.
நோட்டு விற்பனை: இதற்காகவே , https://coinbazzar.com என்ற வெப்சைட் உள்ளது.. இதில் உங்களிடமுள்ள 10 ரூபாய் நோட்டுகளை விற்கலாம். இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்புகூட செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், பழைய 20 ரூபாய் நோட்டை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று, சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவி வருகின்றன.. அதாவது, உங்களிடம் 20 ரூபாய் நோட்டு இருந்தால், அதை வைத்து பணம் ஈட்டலாம். ஆனால், எல்லாவகையான 20 ரூபாய் நோட்டுகளுக்கும் பணம் கிடைக்காது.. அந்த 20 ரூபாய் நோட்டில் "786" என்ற நம்பர் அச்சிடப்பட்டிருக்க வேண்டுமாம்..
விசேஷ நம்பர்: மேலும், நோட்டின் முன் பக்கத்தில் மகாத்மா காந்தியின் போட்டோவும் இருக்க வேண்டும்... இஸ்லாமிய மக்களிடையே 786 என்ற எண் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இவற்றை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குவதற்கும் மக்கள் தயாராக உள்ளதாக, சோஷியல் மீடியா தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த அரிய வகை 20 ரூபாய் நோட்டினை, ஆன்லைனில் OLX -ல் விற்பனை செய்யலாம்.. வெறும் 20 ரூபாய்க்கு, 6 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்க வாய்ப்புள்ளதாம்..
போட்டோ: இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, முதலில் OLX -ல் ஒரு விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.. பிறகு, இந்த 20 ரூபாய் நோட்டை தெளிவாக போட்டோ எடுத்து, அதை அப்லோடு செய்ய வேண்டும். இந்த 20 ரூபாய் போட்டோ விளம்பரத்தை பார்க்கும் நபர்கள், உங்களை தொடர்பு கொள்வார்கள்.
ஆன்லைனில் இந்த அரியவகை 20 ரூபாய் நோட்டுகளுக்கு இருக்கும் டிமாண்ட் + கஸ்டமர்களின் விருப்பத்தை பொறுத்தே பணம் கிடைக்குமாம்.. எனினும், இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க கவனமுடன் நீங்கள் மட்டுமே செயல்பட வேண்டும்.
கவனம் தேவை: காரணம், இந்த 20 ரூபாய் நோட்டின் விலை எவ்வளவு என்பது குறித்து OLX - ல் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் பதிவாகவில்லை.. அதேபோல, ஆன்லைன் மூலமாக ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் விற்பனை செய்வதையும், வாங்குவதையும் ரிசர்வ் வங்கியும் ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications