ரேஷன்தாரர்களுக்கு குட்நியூஸ்.. ரேஷன் கடைகளில் இனி "இதுவும்" விற்பனை.. எகிறியடிக்கும் கடவுளின் தேசம்
சென்னை: ரேஷன் கடைகளில், வெறும் 10 ரூபாய்க்கு குடிநீர் விற்பனையாவதுதான், தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கேரளா மாநிலத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அம்மா குடிநீர் என்று, அன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா தண்ணீர் பாட்டில் விற்பனை திட்டத்தை கொண்டு வந்தார்.. வெறும் 10 ரூபாய்க்கு, இந்த தண்ணீர் விற்கப்பட்டது.

பஸ் ஸ்டாண்டு: அரசு மருத்துவமனைகள், பஸ் ஸ்டாண்டுகள் என எங்கு திரும்பினாலும், இந்த 10 ரூபாய் தண்ணீர் பாட்டில்கள் விற்பனையில் முன்னணியில் திகழ்ந்தன.. இதற்காகவே அம்மா குடிநீர் என்ற பெயரில் குட்டி, குட்டி கடைகள் அமைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டது.. எளிய மக்களிடம் இந்த தண்ணீர் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதே பாணியைதான், இப்போது கேரளாவும் துவங்கி உள்ளது. ஒரு லிட்டர் தண்ணீர், 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களின் விலையை குறைக்க, கடந்த 2020ல் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த திலோத்தமன் வலியுறுத்தினார்.
ரேஷன் கடைகள்: ஆனால், தனியார் நிறுவனங்களோ, இந்த விலையை குறைக்க மறுத்துவிட்டன.. எனவே, ரேஷன் கடைகள் வாயிலாக சுத்தமான குடிநீரை லிட்டர், 11 ரூபாய்க்கு விற்பனை செய்ய 2020ல் திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் அப்போது நிறைவேற்றப்படவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், ரேஷன் கடைகளில், 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு "ஹில்லி அக்வா" என்று பெயரிடப்பட்டுள்ளது..
இதே குடிநீர் வெளிச்சந்தையில் 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.. கேரள நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான, கேரள நீர்ப்பாசன உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் இந்த குடிநீரை தயாரிக்கிறது.
ரேஷன் கடை ஊழியர்கள்: கடைகளுக்கு லிட்டருக்கு 8 ரூபாய்க்கு வினியோகம் செய்யப்படுகிறது.. ரேஷன் கடை ஊழியர்களுக்கு 2 ரூபாய் கமிஷன் கிடைக்கும்.. ஆக மொத்தம் 10 ரூபாய்க்கு குடிநீர் விற்பனை கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால், கோட்டயம், இடுக்கி, பத்தினம்திட்டா ரேஷன் கடைகளில் இந்த திட்டம் அமலாகி உள்ளது. இனிமேல்தான், இந்த குடிநீருக்கான வரவேற்பு எப்படி இருக்க போகிறது என்பது தெரியவரும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications