வாஷிங் மெஷின் இருக்கா? மிக்ஸி ஓடுதா? ஈஸியா மிக்ஸி ஜார் கிளீன் பண்றது எப்படி தெரியுமா? இனிமேல் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கமாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் மிக்ஸியை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் தெரியுமா? இதோ சில ஈஸி டிப்ஸ்கள்.

திடீரென மிக்ஸி ஓடாமல் நின்றுவிட்டால், உடனே ரிப்பேர் செய்ய கடைக்கு எடுத்துக் கொண்டு ஓடுகிறோம்.. ஆனால், சிறிய ரிப்பேர் என்றால், அதை நாமே ஒருமுறை சரிசெய்ய பார்க்கலாம்.

Super simple ways clean your mixer grinder and Do you know How to clean Washing Machine in Easy Method

மிக்ஸி: பொதுவாக, மிக்ஸியில் ஒரேடியாக, ஒரே நேரத்தில் பொருட்களை போட்டு ஓடவிடுவதே பெரும்பாலான ரிப்பேர்களுக்கு காரணமாகும்.. நிறைய பொருளை போட்டு அரைத்தால், மிக்ஸியை பாதித்துவிடும்..

நீங்கள் நிறைய பொருளை போட்டு அரைக்கும்போது, மிக்ஸி தானாகவே நின்றுவிடும்.. இதற்காகத்தான், மிக்ஸியின் பின்புறம் சிகப்பு கலர் பட்டன் தரப்பட்டுள்ளது.. எனவே, மிக்ஸி நின்றுவிட்டால், பின்புறத்திலிருக்கும் சிகப்பு நிற பட்டனை அழுத்தி விடலாம்.. இதனால் மிக்ஸி மீண்டும் இயங்க துவங்கும்.. அல்லது 10 நிமிடம் கழித்து, மிக்ஸி ஓரளவு சூடு குறைந்ததும், மறுபடியும் சிவப்பு பட்டனை அழுத்தலாம். அப்போதும் மிக்ஸி இயங்கவில்லையானால், ரிப்பேர் என்றே அர்த்தம்.

தேங்காய் எண்ணெய்: ஒருவேளை மிக்ஸி ஜார் பிளேடு, தடைபட்டு நின்றுவிட்டால், இதை நாமே எளிதாக சரிசெய்யலாம்.. 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை அடுப்பில் வைத்து நன்றாக சூடுசெய்ய வேண்டும். அந்த எண்ணெயை, மிக்ஸி ஜாரில் பொருத்தப்பட்டுள்ள பிளேடுக்கு நடுவே ஊற்றி ஊறவிட வேண்டும்.. பிறகு மிக்ஸிக்கு தகுந்தாற்போல், பல்ஸ்மோடில் அல்லது ரிவர்ஸில் சுழற்றிவிட வேண்டும். இப்படி நான்கைந்து முறை செய்து, பிறகு வழக்கம்போல் ஓட்டி விட்டால் மிக்ஸி பிளைடுகள் ஷார்ப் ஆகிவிடும்..

அதேபோல, வெள்ளை வினிகரில் தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜார்களை சுத்தம் செய்யலாம்.. மிக்ஸியில் ஏதாவது கறை இருந்தாலும், நீங்கிவிடும்.. அல்லது துணி துவைக்க பயன்படுத்தும் லிக்குவிட் சோப்பு கரைசலை பயன்படுத்தியும் மிக்ஸியை சுத்தம் செய்யலாம்.

பேக்கிங் சோடா: அல்லது சுத்தம் செய்தபிறகும் மிக்ஸிக்குள் துர்நாற்றம் இருந்தால், எலுமிச்சம் பழ தோலை கொண்டு நன்றாக அழுத்தி தேய்த்து 20 நிமிடம் ஊறவைத்து கழுவினால் போதும்.. அல்லது எலுமிச்சம் பழச்சாறில், பேக்கிங் சோடா கலந்து, மிக்ஸியின் அடிப்பாகத்தை சுத்தம் செய்யலாம். பேக்கிங் பவுடரை தண்ணீருடன் கலந்தும் சுத்தம் செய்யலாம்.. இந்த பேக்கிங் பவுடரை கொண்டு, மிக்ஸியின் அடிபுறத்தையும் சுத்தம் செய்யலாம்.

சிலர் ஆல்கஹாலுடன் தண்ணீரை கலந்தும் மிக்ஸியை துடைப்பார்கள்.. இந்த கலவையை மிக்ஸியில் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து, பிறகு சுத்தமான தண்ணீரில் அலசினால், கறை, அழுக்குகள் நீங்கிவிடும்.

வாஷிங் மெஷின்: கிட்டத்தட்ட இதே கிச்சன் பொருட்களை கொண்டே, வீட்டிலிருக்கும் வாஷிங் மெஷினை நாம் சுத்தம் செய்யலாம். எலுமிச்சம் பழம் மிகச்சிறந்த கிருமி நாசினி என்பதால், அப்பழத்தை வெட்டி, வாஷிங் மெஷின் டிரம்மில் வைத்துவிட்டால் போதும்.. அந்த மிஷினில் படிந்திருக்கும் கிருமிகள் அழிந்துவிடும்..

வினிகர், பேக்கிங் சோடா இரண்டையும் பயன்படுத்தியும் வாஷிங் மெஷினை கிளீன் செய்யலாம்.. இதனால், மிஷினில் படிந்திருக்கும் அழுக்குகள் நீங்கி, வாசனையும் வீடுமுழுவதும் பரவும்.

பளிச் தட்டுகள்: அல்லது ஒரு லிட்டர் வெந்நீரில் 3 ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து கொள்ள வேண்டும்.. அழுக்குகள், கறைகள் உள்ள இடத்தில் இதை வைத்து துடைக்கலாம். அதேபோல, ஒரு கப்பில் டூத் பேஸ்ட்டும், தண்ணீரும் சேர்த்து கரைத்து, ஒரு பிரஷ்ஷை கொண்டு வாஷிங் மெஷினின் தட்டு சுத்தம் செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+