ஸ்டைலா.. கெத்தா.. துபாயில் கோட் சூட்டில் கலக்குறது யாரு தெரியுதா.. நம்ம முதல்வர்தான் இது.. வேற மாறி!
துபாயில் முதல்வர் ஸ்டாலினின் கோட் - சூட் அணிந்த வீடியோவை பலரும் ரசித்து வருகிறார்கள்
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கோட் - சூட் அணிந்த துபாய் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..!
Recommended Video
பொதுவாகவே கருணாநிதி குடும்பத்துக்கு என்று ஒரு ஜீன் உள்ளது... அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு யாருக்குமே வயது அவ்வளவாக தெரியாது.
இதில் அநியாயம் ஸ்டாலின்தான்... வயசு 68 ஆகிறது... ஆனாலும் இன்னும் யூத்ஃபுல்லாக இருக்கிறார் மனுஷர்! "ஸ்டாலினுக்கு 68 வயது ஆகிறது என்று என் அம்மாவிடம் சொன்னதற்கு, அவர் நம்பவே இல்லை' என்று சமீபத்திய முதல்வரின் சுயசரிதை புத்தக விழாவில் ராகுல் காந்தியே பூரித்து போய் சொல்லி இருந்தார்.

கலர்புல்
இப்போது மட்டுமல்ல, ஸ்டாலின் 40 வயதை கடந்து நீண்ட காலம் ஆகியும் திமுக இளைஞர் அணி தலைவராகவே இருந்தார்... அதற்கேற்றவாறு, அவரது தோற்றமும் பெரிதும் கைகொடுத்தது. ஆனால் இதெல்லாம் சும்மா வந்து விடவில்லை. உடற்பயிற்சி செய்வதற்காகவே வீட்டில் தனியாக 'ஜிம்' வைத்திருக்கிறார் ஸ்டாலின்... அதேபோல, வாக்கிங், சைக்கிளிங் செய்வதிலும் பேரார்வம் கொண்டவர்... இப்போது முதல்வரான போதுகூட, இந்த பழக்கத்தை தொடர்ந்து வருகிறார்..

ஜாக்கிங்
ஸ்டாலின் எப்போது சைக்கிள் ஓட்டினாலும் அவரது சைக்கிளும், உடையும் மக்களால் கூர்ந்து கவனிப்பட்டு வருகிறது.. அதேபோல, சைக்கிளிங், ஜாக்கிங் முதல், வெளிநாட்டு பயணம் வரை ஸ்டாலினின் உடைகளும் ஈர்க்கப்பட்டு வருகின்றன.. முதல்முறையாக பொறுப்பேற்றதும் டெல்லி சென்றிருந்தபோது, லுங்கியுடன் காட்சியளித்த போட்டோக்கள்கூட வைரலாகின.

தலைவர்கள்
இப்போதும் அவரது துபாய் போட்டோக்கள் கலர்புல்லாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.. அதில் கோட்-சூட் அணிந்து காணப்படுகிறார்.. நம் தமிழகத்து தலைவர்கள் எப்போது வெளிநாட்டுக்கு சென்றாலும், கோட்-சூட் அணிந்து கொள்வது வழக்கம்.. இப்படித்தான் அதிமுக ஆட்சியின்போது, அரசுமுறை பயணமாக அமைச்சர்கள் ஒவ்வொருத்தராக வெளிநாட்டுக்கு சென்றார்கள்..

ஜெயக்குமார்
டாக்டர் விஜயபாஸ்கர் கோட் அணிந்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.. ஆனால், விவசாயிகளின் தோழன் எடப்பாடி பழனிசாமியும் கோட் அணிந்திருந்தது ஆச்சரியமாக அப்போது பார்க்கப்பட்டது.. அதைவிட, எப்போதுமே குங்கும பொட்டுடன் மங்களகரமான காட்சி அளிக்கும் ஓபிஎஸ் கூட கோட் சூட் அணிந்திருந்தார்.. ஆனால், ஒருவர் மட்டும் வெள்ளை கலர் வேடி -சட்டையிலேயே வெளிநாட்டில் நடமாடி கொண்டிருந்தார்.. அது நம்ம ஜெயக்குமார்தான்..

தலைவர்கள்
தலைவர்கள் இப்படி வெளிநாடுகளில் மார்டன் டிரஸ்ஸில் காட்சி தருவது இயல்பு என்றாலும், ஸ்டாலினுக்கு கன கச்சிதமாக பொருந்துகிறது இந்த கோட் - சூட்.. 20 வருடங்களுக்கு முன்பு ஸ்டாலின் இப்படித்தான் இருந்தார். ஒல்லியான தோற்றத்துடன், முன்பக்க நெற்றியில் கற்றைமுடி புரள, கலர் கலர் சட்டையில் இருப்பார். இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்...

தொண்டர்கள்
எப்பவுமே வெள்ளை வேட்டி சட்டையில் பார்த்து பார்த்து சலித்துவிட்ட திமுக தொண்டர்களுக்கு, தங்கள் தலைவரை இன்று கலர்ஃபுல்லாக பார்க்கவும் சந்தோஷம் தாங்க முடியவில்லை... சோஷியல் மீடியா முழுவதும் இந்த வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்கள்.. இன்னொரு பக்கம், கலர் கலராக டிரஸ்களுடன் வலம் வருவதை பார்த்து, வயசு பையன்களின் காதில் புகைச்சலும் வந்து கொண்டிருக்கிறது..!












Click it and Unblock the Notifications