மிஞ்சி போன இட்லி மாவு.. CM வீட்ல பழைய மீன் குழம்பை ஃபிரிட்ஜில் வைத்த துர்கா.. அட தேன் பாட்டில்.. செம
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது. தன்னுடைய வீட்டு கிச்சன், சமையல்களை பற்றி விலாவரியாக துர்கா ஸ்டாலின் அதில் பேசியுள்ளார்.
சமீபகாலமாகவே, நாயகி என்ற யூடியூப் சேனல் மக்களிடம் பிரபலமாகி வருகிறது.. பத்திரிக்கையாளர் லோகநாயகி, துர்கா ஸ்டாலினை பேட்டி எடுத்து இதில் ஒளிபரப்பி வருகிறார்.

இந்த வீடியோ பேட்டிகளின்போது, துர்கா ஸ்டாலின் மனம்திறந்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.. குறிப்பாக, பூஜை அறை உட்பட அனைத்தையுமே துர்கா இதில் விரிவாக எடுத்து கூறியிருந்தார்.
எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், கோயில்களுக்கு தொடர்ந்து வழிபட சென்று வருபவர் துர்கா... தன்னுடைய வழிபாட்டை என்றுமே மறைத்ததும் இல்லை.. மறுத்ததும் இல்லை.
பூஜையறை துர்கா: பூஜையறையை போலவே, தன்னுடைய வீட்டின் கிச்சனையும் அந்த வீடியோவில் விலாவரியாக நேயர்களுக்கு காட்டினார் துர்கா.. அந்த கிச்சனை பார்த்தவர்கள் நிஜமாகவே ஆச்சரியப்பட்டு போனார்கள்.. காரணம், அந்த கிச்சன் இப்போது இருக்கும் மாடர்ன் கிச்சனை போல இல்லாமல், பழமை நிரம்பி காணப்பட்டது.. அடுக்களையில் மண்பானை, அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவைகள் நிரம்பியிருந்தன.. அப்போதுதான் துர்கா, தன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த மீன்குழம்பு சமைத்து கொண்டிருந்தார்..
அப்போது அவர் பேசும்போது, "எனக்கு கல்யாணம் முடித்து வந்தபோது, எதுவுமே சமைக்க தெரியாது.. என்னுடைய மாமியார், அண்ணியிடம் தான் சமைக்க கத்துக்கிட்டேன்.. அப்போவெல்லாம் அடிக்கடி விறகடுப்பில் சமைப்போம்.. வீட்டுல பெரும்பாலும் காரம் அதிகம் சேர்க்க மாட்டோம்.. மாமனார் அசைவம் நல்லா சாப்பிடுவாரு.. அவருக்கு காரம் பிடிக்காது. அதனால எப்போதும் அவருக்கு தனி சமையல் தான். எப்போதுமே ஒரே குழம்பை, 2 வகையாக வைப்போம்.. மாமனாருக்கு எப்பவுமே தனி சமையல்.. அதேபோல, குழம்பில் மிளகாய் தூளை குறைவாகத்தான் சேர்ப்போம்..
மிளகாய் தனியா: ஆனால், எப்போதும் மஞ்சள், சீரகம், மிளகாய் எல்லாம் வெயிலில் காய வைத்து அரைத்து, அந்த மசாலாவைதான் சமையலுக்கு யூஸ் பண்ணுவோம்... கிருத்திகா நல்லா சமைப்பாங்க.. காரமணி பிரியாணி, தாய்க்கறி சூப்பரா சமைப்பாங்க.. அது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் மருமக பிரியாணின்னா சாருக்கு ரொம்ப பிடிக்கும்.. தற்போது இந்த வீடியோவின் இரண்டாம் பகுதி வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
காரணம், துர்கா சமைக்கும்போது, தற்செயலாக அவரது மாப்பிள்ளை சபரீசனும் கிச்சனுக்கு வருகிறார்.. அப்போது உங்களுக்கு அத்தை சமையல்ல என்ன பிடிக்கும்? என்று தொகுப்பாளினி கேட்க, அதற்கு அவங்க செய்யிற வெஜிடேரியன் சமையல் எல்லாமே ரொம்ப பிடிக்கும்.. சாம்பார், அவுங்க பண்ற வெந்தய ரசம் எனக்கு பிடிக்கும் என்று யதார்த்தமாக பேசினார்..
ஸ்டோர் ரூம் : இப்படித்தான் ஒரு வீடியோவில், தன்னுடைய ஸ்டோர் ரூமை அறிமுகப்படுத்தியிருந்தார் துர்கா.. அங்கே சாப்பாட்டு அரிசி, இட்லி அரிசி எல்லாம் ஒவ்வொன்றாக காண்பித்தார்.. மளிகை சாமான் எல்லாம் மாதம் ஒருமுறை வாங்கி வச்சுக்குவோம்... மிளகாய்தூள் எல்லாம் நாங்களே வீட்டுல அரைச்சுக்குவோம்... வரகு, சாமை, குதிரைவாலி, திணை எல்லாமே யூஸ் பண்ணுவோம் என்றெல்லாம் இயல்பாக பேசியிருந்ததும் இல்லத்தரசிகளை கவர்ந்து வருகிறது..
மீன்குழம்பு: இப்போது விஷயம் என்னவென்றால், முதல்வர் ஸ்டாலின் வீட்டு கிச்சன் படுசிம்பிளாக இருந்து மக்களை கவர்ந்தது போலவே, அவர் வீட்டு ஃப்ரிட்ஜ்ஜூம் இணையவாசிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.. அதாவது, தன் மாமனாருக்கும், கணவருக்கும் மீன்குழம்பு பிடிக்கும் என்பதால், அடிக்கடி அதை செய்வதாக துர்கா சொல்லியிருந்த நிலையில், அந்த குழம்பு மீதமாகிவிட்டால், அதை ப்ரிட்ஜில் எடுத்து வைத்துவிடுவாராம்.. இதை பார்த்ததுமே இணையவாசிகள், "முதல்வர் வீட்டிலும் பழைய மீன் குழம்பு பிரிட்ஜில் வைக்கிறாங்களே என்று ஆச்சரியப்பட்டு போயுள்ளனர்.
அதேபோல, தேன் வாங்கிய பாட்டிலை பிற விஷயத்திற்கு யூஸ் பண்றாங்களே" என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். அத்துடன், இவையாவும், இணையவாசிகளையும் தாண்டி, பெண்களிடம் நிறைய ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறது.. அடடா, மிஞ்சி போன இட்லி மாவையும் use பண்றாங்களே.. சி.எம் வீட்ல கூட மத்தியானம் மிச்சமான குழம்ப நைட்டுக்கு வெச்சிக்குறாங்களே".. என்று ட்வீட்களை பதிவிட்டு, அதை ஷேர் செய்தும் வருகிறார்கள்... மொத்தத்தில் துர்கா வீட்டு கிச்சனும், அவரது எளிமையான பேச்சும் இல்லத்தரசிகளிடம் பெருத்த மாற்றத்தையும், வரவேற்பையும் பெற துவங்கிவிட்டது..!!
-
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்.. காங்கிரஸ் பாணியில் விசிகவின் வியூகம் கைகொடுக்குமா -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications