லதா "அதை" சொன்னதுமே.. டக்குனு முகம் மாறிய ரஜினிகாந்த்.. "எதுக்கு இப்படி?" விசாகனும் கிளம்பிட்டாராமே
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ்கார்டன் வீட்டில், ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், அதுகுறித்த பிரத்யேகமான செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு வருடமும், தங்களது வீட்டில் நவராத்திரியின்போது கொலு வைத்து, அதனை மிகப்பெரிய விழாவாக சிறப்பித்து கொண்டாடுவது வழக்கம்.

இதற்கான ஏற்பாடுகளை, லதா ரஜினிகாந்த் எப்போதுமே பிரத்யேகமாக செய்வார். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், ரஜினியின் வீட்டில் கோலாகலமாக ஆரம்பமானது...
சிறப்பு பூஜைகள்: இந்த பூஜைக்கான ஏற்பாடுகளையெல்லாம், லதா ரஜினியுடன், மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோரும் இணைந்து செய்திருந்தனர். எனவே, இந்த பூஜையில் பங்கேற்க வேண்டும் என்று, திரைத்துறையையை சேர்ந்த முக்கிய நபர்களுக்கு முன்கூட்டியே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.. அதன்படியே, பழம்பெரும் நடிகை லதா, நடிகை மீனா, நடிகர் விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர், என பலரும் கலந்து கொண்டனர்.
அதைவிட முக்கியமாக, "விவிஐபிக்களான" முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி செல்வி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை போன்றோரும் இந்த பூஜைக்காக வருகை தந்திருந்தனர். அதுவும், துர்கா ஸ்டாலினும், தமிழிசையும் ஒருவருக்கொருவர் பேசி சிரித்து போட்டோக்களை எடுத்துக் கொண்டதெல்லாம், தற்போது இணையத்தில் வெளியாகி காண்போரை ஈர்த்துவருகிறது.
இந்த விழா பெண்கள் சம்மந்தப்பட்டது என்பதால், இப்படி பெண் பிரபலங்கள் கலந்து கொண்டதில் ஆச்சரியமில்லை.. ஆனால், இந்த விழாவில் ஓபிஎஸ் கலந்து கொண்டதுதான் பலருக்கும் ஆச்சரியத்தை தந்து வருகிறது..
ஓ.பன்னீர்செல்வம்: ஓபிஎஸ்ஸை பார்த்ததுமே, அங்கிருந்த பெண் பிரபலங்கள், அவருக்கு "வணக்கம்" தெரிவித்து, நலம் விசாரித்திருக்கிறார்கள். அதேபோல, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், குடும்பத்தினருடன் இந்த பூஜையில் பங்கேற்றிருக்கிறார். ஆக, அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் ஒரேநாளில் திடீரென குவிந்துவிட்டதால், ரஜினிகாந்த் வீடே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டுள்ளது.
எனினும், ரஜினிகாந்த் குடும்பத்தினர்கள் அத்தனை பேருமே கலந்து கொண்ட நிலையில், ரஜினியும், அவரது இரண்டாவது மகளின் கணவர் விசாகன் மட்டும் பூஜையில் கலந்து கொள்ளவில்லையாம்.
காரணம், இந்த விழாவுக்கு விஐபிக்களை அழைக்கவிருக்கிறேன் என்று ரஜினியிடம் சொன்னாராம் அவரது மனைவி லதா. அதைக்கேட்ட ரஜினி, "நவராத்திரி விழா கொண்டாடுவதாக இருந்தால் குடும்பத்தினரை அழைத்து கொண்டாடு... எதுக்காக, விவிஐபிக்கள் எல்லாம்? இதில் எனக்கு உடன்பாடில்லை" என்று சொல்லிவிட்டு, பூஜையின்போது வீட்டில் இருக்காமல் வெளியே கிளம்பி போய்விட்டாராம்.
செளந்தர்யா: அதேபோல, "பெண்கள் கலந்து கொள்ளும் விழாவில் கலந்துகொள்வதில் எனக்கு எனக்கு விருப்பமில்லை" என்று தன்னுடைய மனைவியான செளந்தர்யாவிடம் சொல்லி, விழாவை தவிர்த்து விட்டாராம் விசாகன். எனினும், ஓபிஎஸ் இந்த விழாவில் பங்கேற்றிருப்பது, ரஜினியுடனான இணக்கத்தையும், நெருக்கத்தையும் மேலும் வெளிப்படுத்துவதாக அமைந்து வருகிறது.
இயல்பாகவே, ரஜினி மீது நிறைய மதிப்பு வைத்திருப்பவர் ஓபிஎஸ்.. பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் ஓபிஎஸ், சமீபத்தில், ரஜினியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசியிருந்தார்.. அரசியல் ரீதியாகவே இவர்கள் பேசியதாக தெரிகிறது.
திடீர் சந்திப்பு: ரஜினியிடம் ஓபிஎஸ், "பாஜகவுக்கு தப்பு தப்பான தகவல்களை தந்து, எனக்கு எதிராக பாஜகவை நம்ப வைத்திருக்கிறார்கள்.. எடப்பாடியின் அரசியல் கேவலமான அரசியலாக இருக்கிறது. அவரை நம்பினால் பாஜகவுக்கு மோசமான அனுபவம் தான் கிடைக்கும். வாய்ப்பிருந்தால் இதனை அவர்களுக்கு (பாஜக) பாஸ் பண்ணுங்கள். இது ரெக்யூஸ்ட் தான். கட்டாயம் இல்லை. நான் அரசியல் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். உங்களின் ஆதரவு எனக்கு வேண்டும் " என்று ஓப்பனாகவே ஓபிஎஸ் கேட்டாராம்.
இதற்கு ரஜினி, "உங்களின் பயணம் வெற்றி பெறட்டும். வாழ்த்துகள் " என்று மட்டும் சொன்னாராம்.. இதைத்தவிர வேறு எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லையாம்.
மிகுந்த குஷி:இதையெல்லாம் ஏற்கனவே, நாம் நம்முடைய "ஒன் இந்தியாவில்" ஸ்பெஷல் செய்திகளாக வெளியிட்டிருக்கிறோம் என்றாலும், ரஜினி குடும்பத்துடன், ஓபிஎஸ் இன்றுவரை நெருங்கியிருப்பது, ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு மட்டுமல்லாமல், பாஜகவினருக்கும் மகிழ்ச்சியை தந்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications