கொரோனா இரண்டாம் அலை...அன்றே சொன்ன ரஜினி...டிரெண்டிங் ஆகும் கடிதம்
சென்னை : இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை அசுர வேகத்தில் தீவிரமடைந்து வருகிறது. தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலர் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
ஊரடங்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மருத்துவமனை படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இருந்தாலும் கொரோனா பரவலை தடுக்க வீட்டிலேயே இருப்பது, மாஸ்க் அணிவது, கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மிக அவசியம் என அறிவுறுத்தி வருகின்றனர்.

அன்றே சொன்ன ரஜினி
இந்நிலையில் அன்றே சொன்ன ரஜினி என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. ரஜினி ரசிகர்களுக்கு எழுதி கடிதத்துடன் இந்த ஹேஷ்டாக் டிரெண்டிங் ஆகி உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் உடல்நிலை காரணமாக தான் புதிய அரசியல் கட்சியை துவக்க போவதில்லை எனவும், அரசியலில் நுழையும் திட்டத்தை கைவிட போவதாகவும் ரஜினி அறிவித்தார். அது தொடர்பாக ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் தான் கொரோனா பற்றிய எச்சரிக்கையை ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

பலிகடா ஆக்க விரும்பவில்லை
அதில், இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை என குறிப்பிட்டுள்ளார் ரஜினி.

ஐகோர்ட் சொன்ன கருத்து
இதனை குறிப்பிட்டு கொரோனா இரண்டாம் பற்றி தலைவர், 2 மாதங்களுக்கு முன்பே எச்சரித்தார் என குறிப்பிட்டு ரஜினி ரசிகர்கள் இந்த அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அதிலும், கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததற்கு தேர்தல் அதிகாரிகள் தான் காரணம். தேர்தல் பிரசாரத்தால் தான் கொரோனா அதிகம் பரவியது என ஐகோர்ட்டே கண்டித்துள்ளது. இந்த சமயத்தில் ரஜினியின் அறிக்கை டிரெண்டிங் ஆகி உள்ளது.

ரஜினியின் முடிவிற்கு வரவேற்பு
இதற்கிடையில் ரஜினியின் நெருங்கிய நண்பரான தமிழருவி மணியன், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த தனக்கு ரஜினி தான் டாக்டர் மூலம் உதவியதாகவும், தான் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறி, அரசியலுக்கு வர போவதில்லை என்ற ரஜினியின் முடிவை பாராட்டி உள்ளார்.

ரஜினிக்கு குவியும் பாராட்டுக்கள்
மற்ற அரசியல் தலைவர்கள் மக்களை பற்றி சிந்திக்காமல், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், மக்களின் நிலையை பற்றி முன்பே யோசித்து, அரசியல் முடிவை கைவிட்ட ரஜினியின் செயலை பலரும் பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர். அரசியலுக்கு வர போவதில்லை என்ற ரஜினியின் முடிவை முன்பு விமர்சித்தவர்கள், தற்போது பாராட்டி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications