விஜய்யை கவனிச்சீங்களா? தவெக பற்றி ரஜினி சொன்ன வார்த்தை.. "கையெடுத்து கும்பிட்டு".. சூப்பர் வாழ்த்து
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், தமிழக வெற்றிக் கழக மாநாடு வெற்றி பெற்றுள்ளதாக விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஜினி தந்திருக்கும் பேட்டி மிகுந்த கவனத்தையும் தமிழக மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கி, அக்கட்சியின் முதல் மாநாடு கடந்த 27ம் தேதி விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் விஜய் பேசியிருந்தது பெரும் பரபரப்பையும், கவனிப்பையும் தமிழக அரசியலில் இன்னமும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

தீபாவளி: இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.. வழக்கமாக தன்னுடைய பிறந்த நாள் மற்றும் தீபாவளி, பொங்கல், ஜனவரி 1 ஆகிய முக்கிய பண்டிகை நாட்களில், ரசிகர்களை சந்திப்பது ரஜினிகாந்தின் வழக்கமாகும்.. ரஜினியை சந்திப்பதற்காகவே ரசிகர்கள், முன்கூட்டியே ரஜினியின் வீட்டிற்கு திரண்டு வருவார்கள்.
இதையடுத்து, ரஜினியும் வெளியில் வந்து ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு, வாழ்த்து சொல்வார்.. அந்தவகையில், இன்று தீபாவளி பண்டிகையையொட்டி ரஜினிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று காலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டு உள்ளனர்
வாழ்த்துக்கள்: ரஜினியின் வீட்டுக்கு வெளியே போடப்பட்டுள்ள தடுப்புகளுக்கு முன்பு, ரஜினியை பார்ப்பதற்காக ரசிகர்கள் திரண்டு வந்துவிட்டனர்.. எனவே, வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினி, ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அதேபோல ரசிகர்களின் வாழ்த்துக்களையும் மனதார பெற்றுக் கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, விஜய்யின் தவெக மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்றும், அவருக்கு எனது வாழ்த்துகள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அப்போது ரஜினி பேசும்போது, ''அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்'' என்றார்.
மாநாடு: அப்பொழுது செய்தியாளர்கள், "நடிப்பு துறையிலிருந்து ஒருவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். மாநாடும் நடத்தி முடித்துள்ளார்.. அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்"? என்று கேட்டார்..
அதற்கு ரஜினி, ''விஜய்யின் தவெக மாநாடு கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடைந்து விட்டது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார்... உடனே செய்தியாளர்கள், "அவர் பேசிய விஷயங்களை எல்லாம் கவனித்தீர்களா?" என்ற கேள்விக்கு, 'ரொம்ப நன்றி' என கையெடுத்து கும்பிட்டுவிட்டு உள்ளே சென்றார்.
ரஜினி வாழ்த்து: விஜய்யின் மாநாட்டுக்கு பல்வேறு தரப்பில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.. அதேசமயம், பாஜகவிக்கு எதிரான நிலைப்பாட்டை விஜய் எடுத்து வருவதாக கூறி அவரது அரசியலுக்கு வரவேற்புகளை ஒருசாரார் தந்து வருகிறார்கள்.. மற்றொருபுறம் பாஜகவின் B டீமாக விஜய் செயல்படுவதாக கூறி, எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பி வருகின்றன.. இந்நிலையில், ரஜினியின் வாழ்த்து மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது.
முன்னதாக ரஜினியை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தலைவா தலைவா என்று உணர்ச்சி பெருக்கில் கூச்சலிட்டனர்.. இதனை கண்ட ரஜினி கைகளை அசைத்து ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். ரஜினி தற்போது "கூலி" படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஷுட்டிங் தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. நாகர்ஜுனா, சௌபின் சாகிர், உபேந்திரா உள்ளிட்ட பிற மொழி பிரபலங்களும் மற்றும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications