அமமுக கூட்டணிக்கு ஆதரவு… இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணிக்கு ஆதரவளிப்பது என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

Support for AMMK Alliance; Indian Thowheed Jamaath Announcement

அதன் அடிப்படையில் இன்று(17.03.19)அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை,இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர்,துணைத் தலைவர் முஹம்மது முனீர்,பொதுச்செயலாளர் முஹம்மது சித்திக்,துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி,பொருளாளர் பிர்தவ்ஸ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் என்று கூறப்பட்டுள்ளது

இதற்கிடையே, அமமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாகவி அறிவிக்கப்பட்டுள்ளார்.

Support for AMMK Alliance; Indian Thowheed Jamaath Announcement

மீதமுள்ள 39 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+