சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக.. 4 மாவட்ட நீதிபதிகளை பரிந்துரைத்தது உச்ச நீதிமன்ற கொலிஜியம்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நான்கு மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நான்கு மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆர் சக்திவேல், பி தனபால், சின்னசாமி கும்பாரப்பன் மற்றும் கே ராஜசேகர் ஆகிய நான்கு மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 6 பேரை கடந்த 2022ஆம் ஆண்டு பரிந்துரை செய்திருந்தது. அதில் 4 பேரை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, எஸ்.செளந்தர் மற்றும் ஜான் சத்யன் ஆகியோரை நிராகரித்தது.
இந்த நிராகரிப்புக்குக் காரணமாக சில தகவல்கள் அப்போது வெளியாகின. பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் கட்டுரையை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாகவும், மருத்துவ மாணவி "அனிதா உயிரிழப்பு இந்தியாவிற்கான அவமானம், அரசியல் துரோகம்" எனக் குறிப்பிட்டதாக உளவுத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்குரைஞர் ஜான் சத்யனின் பெயர் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் சென்னை உயர்நீதிமன்றத்திற் 4 மாவட்ட நீதிபதிகள் பெயர்களை பரிந்துரைத்துள்ளது. அவர்களின் விவரம் பின்வருமாறு: 1. ஆர்.சக்திவேல் 2. பி.தனபால் 3. சின்னசாமி குமரப்பன் 4. கே.ராஜசேகர்.
சென்னை உயர் நீதிமன்ற கொலிஜியம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர் மற்றும் தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன் இந்த நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் தற்போது 52 நீதிபதிகள் இருக்கிறார்கள். இந்நிலையில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்றால் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக உயரும் என்று தெரிகிறது.
-
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications