தமிழ்நாடு முன்னேறுது.. சிஎம் சிறப்பாக செயல்படுகிறார்! விஜய்யை பாராட்டிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவி ஏற்று 5 மாதங்கள் கடந்து இருக்கிறது. சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு என பல்வேறு விவகாரங்களில் அரசு மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், வாக்குறுதிகளை நிறைவேற்றியது, தொழில் முதலீடுகள் ஈர்ப்பு என பாராட்டுகளும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தான் முதல்வர் விஜயின் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றமே பாராட்டி இருக்கிறது.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனாலும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதை அடுத்து விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறார்.

Supreme Court

ஆட்சி அமைத்து கிட்ட தட்ட 150 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விஜய் அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம் என தினமும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன எதிர்க்கட்சிகள்.

விஜய் அரசு

அதே நேரத்தில் லஞ்சம் ஒழிப்பு முதலீடுகள் ஈர்ப்பு, வாக்குறுதிகள் நிறைவேற்றம் என தமிழக வெற்றிக் கழக ஆட்சி சிறப்பாக இருப்பதாக தமிழக கட்சி கழகத்தினர் கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் தேசிய அளவிலும் விஜய் பிரபலமாகி இருக்கிறார் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக ஒன்றை சுட்டிக்காட்டுகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர் .

உச்சநீதிமன்ற நீதிபதிகள்

விஜய் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பாராட்டி உள்ளது. அதாவது மோசடி வழக்கு ஒன்று தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை கடந்த புதன்கிழமை நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, சஞ்சய் குமார் ஆகிய ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் கருணாகரன் ஆஜரானார்.

வழக்கு விசாரணை

இதே வழக்கில் மனுதாரர் தரப்பில் கருணாகரன் ஆஜராகி இருந்த நிலையில் தற்போது அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ளதால் வழக்கின் பொறுப்பை இன்னொரு அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க வேண்டிய இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதை ஏற்று நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

தமிழக முதல்வர் விஜய்

அப்போது விஜய் ஆட்சி குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது," தமிழகத்தில் இன்னும் சில விஷயங்களை சரி செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் தற்போதைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாகவே செயல்பட்டு வருவதாக கேள்விப்படுகிறோம். விஜயின் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருவது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்" என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, சஞ்சய் குமார் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றம் பாராட்டு

இது தொடர்பாக பேசியுள்ள வழக்கறிஞர் கருணாகரன்," நாட்டின் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தமிழக முதல்வரின் செயல்பாடுகளை பாராட்டி இருக்கிறார். அவரது செயல்பாடுகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை பார்க்கிறோம்" என கூறியுள்ளார். தற்போது இந்த தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டாடி வருகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+