Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநருக்கு காலக்கெடு இல்லை.. ஆனால் கோர்ட் தலையிடும்.. உச்ச நீதிமன்றம் உத்தரவு யாருக்கு சாதகம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநருக்கு மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுங்கள் என உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது வேண்டுமென்றால் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தல் வேண்டுமானால் கொடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில் யாருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.. இனி மசோதாக்கள் மீது எப்படி முடிவெடுக்கப்படும் என்று இங்கே பார்க்கலாம்.

என்ன வழக்கு இது?

சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த 2023ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்தீர்ப்பில், மாநில அரசின் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் குறித்து மூன்று மாதங்களுக்குள் அவர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, மசோதா விவகாரத்தில் ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என 14 கேள்விகளை எழுப்பி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கோரினார்.

Supreme Court order no timeline for Governor s Assent on bill Who won the case

இன்று உத்தரவு

இதையடுத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது இன்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல்.S.சந்தூர்கர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதை விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

தீர்ப்பில் ஆளுநருக்கு சாதகமான அம்சங்கள்

ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கோ அல்லது மறுபரிசீலனைக்காக நிறுத்தி வைத்துத் திருப்பி அனுப்புவதற்கோ ஆளுநர் விருப்புரிமையைப் (discretion) பயன்படுத்தலாம். அதிகாரப் பிரிவினை (Separation of powers) என்பது அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பாகும் (basic structure).

ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு 'அனுமதிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஒப்புதலை' நீதிமன்றங்கள் வழங்க முடியாது. ஒரு மசோதா நிலுவையில் இருந்தால் அதை கோர்ட்டே ஒப்புதல் அளிக்க முடியாது.

ஆளுநருக்கு மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுங்கள் என உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது வேண்டுமென்றால் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தல் வேண்டுமானால் கொடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இவ்வாறு கால வரம்பை நிர்ணயித்திருந்தது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.


தீர்ப்பில் மாநில அரசுகளுக்கு சாதகமான அம்சங்கள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் மாநிலத்தை முழுமையாக செலுத்தக்கூடிய அதிகார அமைப்பாக இருக்க வேண்டும் ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை ஏற்க முடியாது.

ஆளுநரின் அதிகாரம் (பிரிவு 200): பிரிவு 200-இன் கீழ், ஆளுநருக்கு ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது (Assent), மசோதாவை நிறுத்தி வைத்துத் திருப்பி அனுப்புவது (Withhold and return) அல்லது மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது (Refer the Bill to the President) ஆகிய மூன்று விருப்பங்கள் மட்டுமே உள்ளன. பிரிவு 200-இன் கீழ் ஆளுநருக்கு நான்காவது விருப்பம் எதுவும் இல்லை.

பிரிவு 200-இன் கீழ் ஆளுநரின் செயல்பாட்டைக் குறித்து நீதிமன்றம் விசாரிக்க முடியாது (cannot be justiciable). ஆனால் சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதோ அல்லது நீண்ட கால தாமதம் செய்வதோ நீதிமன்ற ஆய்வுக்கு (judicial scrutiny) உட்படுத்தப்படும்.

ஆளுநரின் அலுவலகத்தில் ஒரு மசோதா குறித்து அளவுக்கு அதிகமான தாமதம் (inordinate delay) இருந்தால், அரசியலமைப்பு நீதிமன்றம் ஆளுநருக்கு அந்த மசோதாவின் மீது நடவடிக்கை எடுக்க வழிகாட்டுதல்களை (directions) வழங்க முடியும். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட வழியில் (a particular way) செயல்படுமாறு நீதிமன்றம் வழிகாட்டலை வழங்க முடியாது, என்று உத்தரவில் கூறி உள்ளது.

மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால் அதற்கான காரணங்களை மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+