"எல்லாம் நேர்மையாக இருக்கணும்.." கரூர் சம்பவம்.. தமிழக அரசு கோரிக்கைக்கு ஒரே வரியில் நீதிபதி சொன்ன பதில்
டெல்லி: கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாட்டைச் சேராத நபர்கள் இருக்க வேண்டும் என்ற உத்தரவை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தனது முந்தைய உத்தரவை மாற்றியமைக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
கரூரில் கடந்த அக்டோபர் 27ம் தேதி விஜய் பிரச்சாரத்திற்குச் சென்ற போது மிக மோசமான ஒரு சம்பவம் நடந்தது. எதிர்பாராத வகையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40+ பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் சமீப ஆண்டுகளில் நடந்த மிக மோசமான ஒரு சம்பவமாக இது இருக்கிறது. இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேல்முறையீடு
இதற்கிடையே சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அருணா ஜெகதீசன் ஆணைய செயல்பாடுகளைத் தொடர அனுமதி கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மறுப்பு
முன்னதாக சிபிஐ வழக்கை விசாரிக்க உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், அதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றையும் அமைத்தது. இந்த கண்காணிப்புக் குழுவில் தமிழ்நாட்டைச் சேராத அதிகாரிகளே இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டைச் சேராத நபர்கள் இருக்க வேண்டும் என்ற உத்தரவை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் தனது முந்தைய உத்தரவை மாற்றியமைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்த போது, "எல்லாம் நியாயமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று சொன்ன நீதிபதி மகேஷ்வரி, முந்தைய உத்தரவை மாற்ற மறுத்துவிட்டார்.
முந்தைய உத்தரவு
முன்னதாக கரூர் சம்பவம் குறித்த வழக்கைக் கடந்த அக்டோபர் 13ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது விசாரணையின் பாரபட்சமற்ற தன்மையை உறுதி செய்யும் நோக்கில், 3 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி நியமிக்கப்பட்டார். மேலும், இக்குழுவின் மற்ற இரு உறுப்பினர்களாக, தமிழக கேடரில் உள்ள, அதேநேரம் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டிராத இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க நீதிபதி ரஸ்தோகிக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஏதோ தவறு
இந்த விவகாரத்தில் முந்தைய உத்தரவுகளில் மாற்றம் செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை ஒரேயடியாக விசாரித்து முடிக்க விரும்புவதாகத் தெரிவித்தது. மேலும், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் ஏதோ தவறு இருப்பதாகவும் கூறினர். இது தொடர்பாக நீதிபதிகள் மேலும் கூறுகையில், "கரூர் விவகாரத்தை சென்னை ஐகோர்ட் விசாரித்ததில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இது குறித்து ஏற்கனவே சென்னை ஐகோர்ட் பதிவாளரிடம் விளக்கம் கேட்டிருந்தோம். இப்போது மீண்டும் அறிக்கை கேட்கிறோம்.
சென்னை ஐகோர்ட் இந்த வழக்கை விசாரித்தது சரியான நடைமுறை தானா என்பது பற்றி முதலில் விசாரிக்கலாம்.. அதன் பிறகு பிரதான வழக்கிற்குப் போகலாம் என நினைக்கிறோம்" என்று கருத்து கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு












Click it and Unblock the Notifications