"ஜனாதிபதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தது தீர்ப்பு அல்ல.. கருத்துதான்! எங்களுக்கே சாதகம்" - வில்சன்
டெல்லி: "குடியரசுத் தலைவர் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அளித்தது தீர்ப்போ, உத்தரவோ அல்ல. வழக்கில் தனது கருத்தைத்தான் கூறியுள்ளது. ஜனாதிபதிக்கு ஆலோசனைகளையே உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. ஆளுநர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கெனவே அளித்த தீர்ப்பை தற்போதைய கருத்து பாதிக்காது." என மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக கிடப்பில் போட்டதையடுத்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் மாதம், தமிழக ஆளுநரின் இந்த செயல் சட்டவிரோதம் என அறிவித்து அந்த 10 மசோதாக்களும் உடனடியாக சட்டமாக அமலுக்கு வந்துவி்ட்டதாக அறிவித்தனர்.

மேலும் சட்டப் பேரவையில் மறுநிறைவேற்றம் செய்து அனுப்பி வைக்கப்படும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவு எடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கடந்த மே 13 அன்று அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள அதிகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்துர்கர் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், "ஆளுநருக்கும் மாநில சட்டமன்றத்திற்கும் இடையே உரையாடலைத் தொடங்குவதற்கான பிரிவு 200 இன் முதல் விதி அவசியம். இது நிர்வாகத்தின் கூட்டாட்சி தன்மையையும், சமநிலையின் உணர்வையும் வெளிப்படுத்துகிறது. அதன்படி ஆளுநர் காரணம் சொல்லாமல் மசோதாக்களை திருப்பி அனுப்ப முடியாது.
மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், எந்த பதிலும் அளிக்காமலும் ஆளுநர்கள் கிடப்பில் போட அதிகாரம் இல்லை. மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தல், நிராகரித்தல் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்புதல் ஆகிய மூன்று விருப்பங்களில் ஒன்றை மட்டுமே ஆளுநர் தேர்ந்தெடுக்க விருப்புரிமை உள்ளது. மசோதாவை காலவரையின்றி நிறுத்திவைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இடையூறு அளிப்பதுபோல செயல்பட முடியாது. அதேநேரத்தில், மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது. அதேபோல, ஆளுநர்கள் உரிய காலக்கெடுவுக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க உத்தரவிட முடியாது.
ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல. ஆனால் ஆளுநர்கள் மசோதாக்களை முடிவில்லாமல் நிறுத்த முடியாது. ஆளுநர்கள் நியாயமான காலக்கெடுவிற்குள் செயல்பட வேண்டும். மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த 2 நீதிபதிகளின் தீர்ப்பு அரசியலமைப்புக்கு எதிரானது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், "குடியரசு தலைவர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தது தீர்ப்போ, உத்தரவோ அல்ல. வழக்கில் தனது கருத்தைத்தான் கூறியுள்ளது. ஜனாதிபதிக்கு ஆலோசனைகளையே உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. ஆளுநர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கெனவே அளித்த தீர்ப்பை தற்போதைய கருத்து பாதிக்காது. தமிழக அரசு பெற்ற தீர்ப்பை இது கட்டுப்படுத்தாது.
உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் எங்களுக்கே சாதகமாக உள்ளது. ஆளுநர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மசோதாக்களை ஆளுநர் காலதாமதம் செய்தால் மீண்டும் உச்சநீதிமன்றம் செல்வோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications