'தமிழன்டா எந்நாளும்!'... மாஸ் லுக்கில் சின்ன தல பதிவிட்ட வைரல் போட்டோ... 'தல' தோனி மட்டும் மிஸ்ஸிங்
சென்னை: இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், சுரேஷ் ரெய்னா சக சிஎஸ்கே வீரர்களுடன் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வைராலாகியுள்ளது.
இன்று, சித்திரை 1ஆம் தேதி, உலகெங்கும் உள்ள தமிழர்களால் தமிழ்ப் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று சார்வரி ஆண்டு நிறைவடைந்த நிலையில், இன்று பிலவ தமிழ்ப் புத்தாண்டு தொடங்கியுள்ளது.
தமிழ்ப் புத்தாண்டிற்கு அமெரிக்க அதிபர் பைடன் தொடங்கி பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நச் புகைப்படம்
கிரிக்கெட் வீரர்கள் பத்ரிநாத் உள்ளிட்டோரும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த லிஸ்டில் தற்போது சிஎஸ்கே அணியின் சுரேஷ் ரெய்னாவும் இணைந்துள்ளனர். சின்ன தல சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள புகைப்படம்தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புத்தாண்டு வாழ்த்து
சக ஜூனியர் சிஎஸ்கே வீரர்களான ஜெகதீசன், சாய் கிஷோர், ஹரி நிஷாந்த ஆகியோருடன் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்தவாறு ரெய்னா பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. இந்த புத்தாண்டு, இனிய துவக்கங்களும், புதிய முயற்சிகளும் நிறைந்த வருடமாக அமையட்டும். அனைவருக்கும் உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என ரெய்னா தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

தல தோனி மட்டும் மிஸ்ஸிங்
சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் ரெய்னாவின் ட்வீட்டை ரீட்வீட் செய்து வைரலாக்கி வருகின்றனர். இந்தப் புகைப்படத்தில் சின்ன தல ரெய்னா மட்டுமின்றி அவருடன் இருக்கும் அனைவரும் கெத்தாக இருப்பதாக ட்விட்டர்வாசிகள் கூறிவருகின்றனர். இருந்தாதலும்கூட தல தோனி இந்தப் புகைப்படத்தில் இல்லதையும் குறிப்பிடும் சிலர், அவர் மட்டும் இந்த போட்டோவில் இருந்திருந்தால் வேற லெவலில் இருக்கும் என்றும் பதிவிட்டு வருகின்றர்.

சிஎஸ்கே
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வழக்கம்போல தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியுள்ளது. தனது முதல் போட்டியில் டெல்லி அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இரண்டாவது போட்டியில் நாளை மறுதினம் பஞ்சாப் அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. கொரோனா பரவல் காரணமாகப் பார்வையாளர்கள் மைதானங்களில் அனுமதிக்கப்படுவதில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications