வேட்டி சட்டை.. நம்மூர் மாரியப்பன் மாதிரியே.. சுரேஷ் ரெய்னா வேற மாறி.. நிஜமா "வாத்தி கம்மிங்" பாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேஷ்டி சட்டை அணிந்து, அச்சு அசல், நம்ம ஊர் மாரியப்பன் மாதிரியே இருக்கிறார் சுரேஷ் ரெய்னா.

அடுத்த மாதம் துவங்க உள்ள ஐபிஎல் போட்டியில், சென்னை அணிக்காக விளையாடபோகும் நிலையில் அவர் இப்படி கெட்டப் மாற்றி சுற்றிக் கொண்டிருக்கிறார்.

மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாட்டுக்கு வேட்டியை கட்டியபடி அவர் போடும் ஆட்டம் இப்போது வைரலாகிவிட்டது.

என்னதான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்திருந்தாலும் தோனி சென்னையில் பிறந்து வளர்ந்தவராகத்தான் பார்க்கிறார்கள் நமது ரசிகர்கள். "தல" என்று அவரை அன்புடன் அழைப்பது போலத்தான் சுரேஷ் ரெய்னாவை சின்ன தல என்று கூப்பிட்டு குஷியாகிறார்கள் சிஎஸ்கே ஃபேன்ஸ்.

சின்ன தல

சின்ன தல

அன்பால் கொடுக்கப்பட்ட பட்டம் மட்டும் கிடையாது. சுரேஷ் ரெய்னா திறமைக்கும் சேர்த்து வழங்கிய சர்டிபிகேட் தான் சின்னத் தல பட்டம். 2008ஆம் ஆண்டு முதல், அதாவது ஐபிஎல் துவங்கியது முதல், சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் சுரேஷ் ரெய்னா. ஏகப்பட்ட சிக்சர்கள், ரன் குவிக்கும் இயந்திரம் என கலக்கி வருபவர்.

ஐபிஎல் கிங்

ஐபிஎல் கிங்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சொதப்பினாலும் எந்த ஒரு ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்கு ரன் குவிக்க அவர் தவறியது கிடையாது. ஆனால், யாரு கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை, கடந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில்தான் அவர் பங்கேற்க முடியவில்லை . சொந்த காரணம் என்று சொல்லி லீவு போட்டுவிட்டார். ஆனால் அந்த காரணம் என்ன என்பதில்தான் ஏகப்பட்ட சர்ச்சைகள் சுற்றி வந்தன.

ரெய்னாதான் முதுகெலும்பு

ரெய்னாதான் முதுகெலும்பு

வழக்கத்துக்கு மாறாக ஒரு சீசன் முழுக்க சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை . வழக்கத்துக்கு மாறாக மோசமாக தோற்று வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் டீம். ஆனால் இப்போது அப்படி அல்ல.. மீண்டும் பழைய பார்முக்கு வந்துவிட்டார் சுரேஷ்ரெய்னா. வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வாத்தி கம்மிங் பாட்டுக்கு அவர் போடும் ஆட்டம் மாஸ்.

பக்கத்து வீட்டு பையன்

சுரேஷ் ரெய்னாவைப் பார்த்தாலும் வேறு மாநிலத்துக்காரர் மாதிரி இல்லை. நம்ம ஊரு பையன் வேட்டி கட்டிக்கொண்டு வந்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒருமுகம். இயல்பாகவே சிரித்த புன்முறுவல் முகத்தோடு இருப்பவர் சுரேஷ் ரெய்னா. வேட்டியை கட்டிக் கொண்டு அவர் சிரிக்கும் போது, இது நம்ம பக்கத்து வீட்டு மாரியப்பன் மாதிரி இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. நீங்களே பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+