சோசியல் மீடியாவில் முட்டாளுக்கு பதில் சொல்லாதீங்க.. அவர்களை திருத்த முடியாது! சூர்யா சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோசியல் மீடியாவில் ஒரு முட்டாள் போட்ட பதவுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால், நாமும் முட்டாள் ஆகிவிடுவோம் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். அவர்களிடம் உங்கள் ஆற்றலை வீணடிக்க வேண்டாம் என்று கூறியுள்ள சூர்யா, நாம் சொல்வது சில பேருக்கு புரியும், பலருக்கு புரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின், அவரின் ரசிகர்கள் தவெகவில் இணைந்துவிட்டனர். ரசிகர் மன்ற கட்டமைப்பு அப்படியே அரசியல் கட்டமைப்பாக மாற்றப்பட்டது. அதேபோல் சோசியல் மீடியாவில் விஜய்க்கு ஆதரவாக பதிவிட்ட நபர்கள், அப்படியே தவெகவுக்கு ஆதரவாக பதிவிட தொடங்கினர். தற்போது முதல்வராக விஜய் பொறுப்பேற்ற போதும் கூட, சோசியல் மீடியாவில் அந்த ஆதரவு தொடர்ந்து வருகிறது.

Suriya

அதேபோல் தவெகவினரை எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக தற்குறி என்று விமர்சித்து வருகின்றனர். அடிப்படை புரிதல் இல்லாமல் விஜய் சொல்வதை அப்படியே நம்பி, அதுதான் உண்மை என்றும் தவெகவினர் தொடர்ச்சியாக சோசியல் மீடியாவில் பேசுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் தவெக சொல்வதை Fact Check செய்வது பலருக்கும் புதிய பொழுதுபோக்காக மாறி இருக்கிறது.

அதேபோல் விஜய் பெயரை குறிப்பிடாமலேயே விஜய் சேதுபதி பொதுவாக ஒரு கருத்தை தலைமைப் பண்பு குறித்து பேசினார். அதற்கு விஜய் டிவியும், விஜய் சேதுபதியும் விளக்கம் அளிக்க வேண்டிய சூழலுக்கு தவெகவினர் தள்ளிவிட்டனர். இதனால் சோசியல் மீடியாவில் தவெக ஒரு கல்ட் கூட்டமாக மாறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தரப்பில் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் சூர்யா பேசுகையில், சோசியல் மீடியாவில் ஒரு முட்டாள் ஒரு பதிவு போட்டதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால், நாமும் முட்டாள் ஆகிவிடுவோம். அவர்களுக்கு புரிய வைக்கணும், மாத்தணும் என்று நினைத்தால், அது ரொம்ப கஷ்டம். அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்.

நாம் நாமாகவே இருப்போம். நாம் சொல்வது சில பேருக்கு புரியும்,. பலருக்கு புரியாது. உங்கள் ஆற்றலை அவர்களிடம் வீணடிக்க வேண்டாம். உங்களுக்கு பிடித்ததை மட்டும் செய்யுங்கள். உலகம் வேறு மாதிரி மாறி கொண்டிருக்கிறது. ஏஐ வளர்ச்சி அடைந்து வருகிறது. அதனால் தினமும் உங்களுக்கு பிடித்ததை முழு முயற்சியுடன் செய்தால், நிச்சயமாக வெற்றி பெற முடியும்.

உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு அன்பை மட்டும் கொடுங்கள் என்று பேசியுள்ளார். தற்போது நடிகர் சூர்யாவின் பேச்சு தவெகவினரை குறி வைத்து அமைந்துள்ளதாக விஜய் ஆதரவாளர்கள் கொந்தளித்து வருகின்றனர். இத்தனைக்கும் சூர்யா யாரின் பெயரையும் குறிப்பிடவில்லை. இதனால் எந்த விமர்சனம் வைக்கப்பட்டாலும், அது விஜய் மீதுதான் என்று தவெகவினராகவே முடிவு செய்து சோசியல் மீடியாவில் சூர்யாவை வசைபாட தொடங்கி இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+