தெலுங்கில் பாகுபலி..தமிழில் கங்குவா! படத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என தெரியவில்லை! சுசீந்திரன் வேதனை
சென்னை: இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியான நிலையில் திரை ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் தெலுங்கில் 'பாகுபலி' என்றால் தமிழில் 'கங்குவா' என பாராட்டியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படம் கடந்த 14ஆம் தேதி சுமார் 10 ஆயிரம் திரைகளில் வெளியானது.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்த கங்குவா படத்தில் சூர்யா, பாபி தியோல், திசா பதாணி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நடராஜன், கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து இருந்தனர்.
சுமார் 300 கோடி பட்ஜெட்டில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்திருந்தார். இதுவரை தயாரான படங்களிலேயே அதிக பட்ஜெட் கொண்ட சூர்யாவின் படம் என்றால் அது கங்குவா தான். முன்னதாக அக்டோபர் மாதமே படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் ரிலீஸ் காரணமாக பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் சூர்யா ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் நவம்பர் 14ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளை ஞானவேல் ராஜா, சூர்யா மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக சூர்யா இந்தியா முழுவதும் பயணம் செய்து ரசிகர்களை சந்தித்து படத்துக்கு புரமோஷன் செய்தார். மேலும் இசை வெளியீட்டு விழாவில் ஞானவேல் ராஜா பேசும்போது 2000 கோடி ரூபாய் கலெக்ஷனை எதிர்பார்க்கிறோம். 2000 கோடி நிச்சயம் வசூல் செய்யும்.
டிசம்பர் மாதமே படத்துக்கான வெற்றி விழா நடக்கும். தற்போது வைத்திருக்கும் பாஸை நீங்கள் வெற்றி விழாவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என பேசி இருந்தார். இந்நிலையில் 3டி, ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படம் வெளியான நிலையில் முதல் நாளிலேயே படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்தது. படத்தில் லாஜிக்கலாக எதுவும் ஒர்க்அவுட் ஆகவில்லை, படத்தில் சத்தம் அதிகம் இருக்கிறது, காது கேட்கவில்லை, கத்திக் கொண்டே இருக்கிறார்கள் என பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
பல கட்சிகளும், குறிப்பிட்ட சில சமுதாய மக்களும் படத்தை கடுமையாக விமர்சித்த நிலையில், சிலர் படம் நன்றாக இருப்பதாகக் கூறி வருகின்றனர். பேண்டஸி திரைப்படம் குழந்தைகளுக்கும் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் என சில பாசிட்டிவ் விமர்சனங்கள் கூறப்படுகிறது. இந்த நிலையில் படம் தொடர்பாக வேண்டும் என்றே வன்மம் பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகாவும் வேதனையுடன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கங்குவா படத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என தெரியவில்லை எனக் கூறியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். இது தொடர்பாக வீடியோவில் பேசியுள்ள அவர்," நேற்று மாலை என் குழந்தைகளுடன் கங்குவா திரைப்படத்தை பார்த்தேன். தமிழ் சினிமாவின் மிக நேர்த்தியான பிரம்மாண்டமான திரைப்படம் கங்குவா. பாகுபலி எப்படி தெலுங்கில் பிரம்மாண்டமாக இருக்கிறதோ, அதேபோல தமிழில் கங்குவா படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
எதற்காக இந்த படம் குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. ரசிக்கும் படியான திரைக்கதை அமைத்துள்ள இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சூர்யாவின் நடிப்பும் உழைப்பும் என்னை பிரமிக்க வைக்கிறது. கேமரா, சிஜி என அனைத்தும் உலக தரத்திற்கு இருக்கிறது. தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் காலம் தாழ்த்தி இந்த படத்தை கொண்டாடி விடாதீர்கள். அனைவரும் குடும்பத்துடன் சென்று திரையரங்குகளில் பாருங்கள். கங்குவா உங்களை மகிழ்விப்பான்" என கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications