சூரியனை அறிவோம் என்ற பெயரில் சூரிய பொங்கல்! தமிழ்நாடு வானியல் அறிவியல் சொசைட்டி புதிய முயற்சி!
சென்னை: சூரியனை அறிவோம் என்ற பெயரில் சூரிய பொங்கல் விழாவை முன்னெடுத்துள்ளது தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் நட்சத்திர திருவிழா என்ற பெயரில் நூற்றுக்கணக்கான இடங்களில் நட்சத்திரங்களை தொலைநோக்கு கருவி மூலம் மாணவர்களும், பொதுமக்களும் பார்வையிடும் வண்ணம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதனிடையே அதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் மத்திய அரசின் விஞ்ஞன் பிரசார், அறிவியல் பலகை ஆகியவற்றுடன் இணைந்து சூரிய பொங்கல் விழாவை முன்னெடுத்துள்ளது.

அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி
மாணவர்களிடையேயும், பொதுமக்கள் இடையேயும் அறிவியல் ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சூரியன், நட்சத்திரங்கள் பற்றி அறிந்துகொள்ளும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி முன்னெடுத்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் காப்புரிமை பெற்ற புதுமையான ஆராய்ச்சிகளுக்கு மாசிலா விருதையும் வழங்கி வருகிறது. அதன்படி அதிக தாக்கத்தை ஏற்படுத்திய அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளுக்கு ரூ.50,000 ரொக்கத்துடன் விருதும் அளித்து வருகிறது.

அறிவியல் விருது
இதேபோல் அறிவியலை பிரபலப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட சேவைக்காக குழு அல்லது தனி நபருக்கு ரூ.25,000 ரொக்கமும் விருதும் தந்து வருகிறது. இந்தாண்டுக்கான விருது பெற விரும்புபவர்கள் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்ற முகவரியில் வரும் 23ஆம் தேதி வரை இதற்காக விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டுள்ளது. இதனிடையே வெறுமனே சூரிய பொங்கல் என்று மட்டும் கொண்டாடாமல் சூரியனை பற்றி மக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் அது குறித்த குறிப்பையும் வெளியிட்டுள்ளது.

சூரியனின் சிறப்புகள்
அதன் படி சூரியனை பொறுத்தவரை 5,000 டிகிரி முதல் 5,700 டிகிரி வரையிலான வெப்பநிலையை கொண்டது என்ற தகவலையும் ஹீலியம் மற்றும் நைட்ரஜன் அணுக்களால் ஆன கோள வடிவிலானது சூரியன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சூரியனின் வயது 4,603 பில்லியன் ஆண்டுகள் என்று குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, சூரியனின் ஒளியை பூமி அடைய 8.3 நிமிடங்கள் ஆகும் எனவும் அறிவியல் குறிப்பு வரைந்துள்ளது.

சூரியப் பொங்கல்
பூமியை விட்டத்தை போன்று 109 மடங்கு அதிக விட்டம் உடையது சூரியன் என்றும் சூரியனின் ஈர்ப்பு சக்தியானது பூமியை விட 28 மடங்கு அதிகமானது எனவும் கூறியுள்ளது. மேலும், எல்லாவற்றையும் விட சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு 15 கோடி கிலோ மீட்டர் என தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி தெரிவித்துள்ளது. சூரியனை பற்றி இப்படி பல்வேறு சிறப்புகள் அடங்கிய இந்த சூரிய பொங்கல் வாழ்த்து அட்டையை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் நந்தகுமார் வெளியிட தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியை சேர்ந்த ஸ்ரீகுமார் உள்ளிட்ட குழுவினர் பெற்றுக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications