செல்லாது செல்லாது.. வெளிய போங்க! கங்குவாவை விரட்டி விட்ட ஆஸ்கர்! சூர்யா ரசிகர்கள் செம அப்செட்..!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான கங்குவா ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் கங்குவா இடம்பெற்ற நிலையில் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் சூர்யாவின் கங்குவா படம் இடம்பெறவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி சுமார் 10 ஆயிரம் திரைகளில் வெளியானது.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்த கங்குவா படத்தில் சூர்யா, பாபி தியோல், திசா பதாணி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நடராஜன், கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து இருந்தனர்.
சுமார் 300 கோடி பட்ஜெட்டில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்திருந்தார். இதுவரை தயாரான படங்களிலேயே அதிக பட்ஜெட் கொண்ட சூர்யாவின் படம் என்றால் அது கங்குவா தான். முன்னதாக அக்டோபர் மாதமே படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் ரிலீஸ் காரணமாக பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் சூர்யா ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் நவம்பர் 14ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளை ஞானவேல் ராஜா, சூர்யா மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக சூர்யா இந்தியா முழுவதும் பயணம் செய்து ரசிகர்களை சந்தித்து படத்துக்கு புரமோஷன் செய்தார். மேலும் இசை வெளியீட்டு விழாவில் ஞானவேல் ராஜா பேசும்போது 2000 கோடி ரூபாய் கலெக்ஷனை எதிர்பார்க்கிறோம். 2000 கோடி நிச்சயம் வசூல் செய்யும். டிசம்பர் மாதமே படத்துக்கான வெற்றி விழா நடக்கும். தற்போது வைத்திருக்கும் பாஸை நீங்கள் வெற்றி விழாவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என பேசி இருந்தார்.
இந்நிலையில் 3டி, ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படம் வெளியான நிலையில் முதல் நாளிலேயே படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்தது. படத்தில் லாஜிக்கலாக எதுவும் ஒர்க்அவுட் ஆகவில்லை, படத்தில் சத்தம் அதிகம் இருக்கிறது, காது கேட்கவில்லை, கத்திக் கொண்டே இருக்கிறார்கள் என பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். தொடர்ந்து ஓடிடியில் வெளியான போதும் கங்குவா நல்ல பெயரை எடுக்கவில்லை. ஒரு சிலர் படத்தில் தொழில்நுட்பம் நன்றாக இருக்கிறது என கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் கங்குவா 97வது ஆஸ்கர் விருதுக்கான முதற்கட்ட பட்டியலில் தேர்வாகி இருந்தது. கடுமையான விமர்சனங்களை சந்தித்த கங்குவா ஆஸ்கர் விருது பட்டியல் வரை சென்றது எப்படி? என பலரும் அதனை ட்ரோல் செய்தனர். ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் படங்கள் மட்டுமில்லாமல் பட குழுவினர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தங்கள் படங்களை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற நிலையில், நிர்ணய கட்டணத்தை செலுத்தி, ஆஸ்கருக்கான முதற்கட்ட தேர்வு பட்டியலில் 324 திரைப்படங்களில் ஒன்றாக கங்குவா படம் இடம்பெற்றது.
இந்த நிலையில் 97வது ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் கங்குவா திரைப்படம் வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும் நடிகர் பிரித்திவிராஜின் ஆடு ஜிவிதம், சவார்கர், ஆல் வி இமாஜின் அஸ் லைக், கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ், சந்தோஷ் ஆகிய திரைப்படங்களும் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில் இறுதி பட்டியலில் இடம் பெறவில்லை. இதன் மூலம் சூர்யாவின் கங்குவா உள்ளிட்ட 9 இந்திய படங்கள் ஆஸ்கார் ரேஸில் இருந்து வெளியேறி உள்ளன.
அதே நேரத்தில் அனுஜா என்ற படம், சிறந்த லைவ் ஆக்சன் குறும்படத்திற்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தை ஆடம் ஜே கிராக்ஸ் இயக்கியுள்ள நிலையில் பிரியங்கா சோப்ரா தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைக்கு இந்த படம் ஒன்றுதான் ஆஸ்கர் நம்பிக்கையை லேசாக ஒட்ட வைத்துள்ளது. மற்ற அனைத்து இந்திய படங்களும் ரசிகர்களை ஏமாற்றி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications