Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வில்லங்க சான்றிதழில் வில்லங்கம்? புதிய கட்டுப்பாடுகள் வருகிறதா? மீண்டும் தமிழக பதிவுத்துறை சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்துக்களை வாங்குவோர் அறிந்து கொள்ள உதவும் முக்கிய ஆவணமாக வில்லங்க சான்றிதழ் விளங்குகிறது.. இநத வில்லங்க சான்றிழை விண்ணப்பித்து பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால், http://www.tnreginet.net/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பதிவுத்துறை ஏற்படுத்தி தந்துள்ளது.. எனினும், வில்லங்க சான்றிதழை வழங்க காலதாமதம் ஆவதாக புகார்கள் கிளம்பியிருக்கின்றன.. இதற்குதான் தமிழக பதிவுத்துறை கடிவாளம் போட்டுள்ளது. இது தொடர்பான தகவல் ஒன்று வெளியாகி, பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.

ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தினை முழுமையாக அறிந்து கொள்ள உதவுவதுதான் வில்லங்க சான்றிதழ்.. குறிப்பாக, நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்குவோர், அந்த சொத்துக்களின் முந்தைய உரிமையாளர்கள் குறித்தும், அதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா? எனபது குறித்து தெரிந்து கொள்ளவும் வில்லங்க சான்றிதழை பெறுவார்கள்.

encumbrance certificate ec certificate Registration Department

ஒருவர் வாங்க போகும் சொத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்தான் வில்லங்க சான்றிதழ்.. சொத்து யாரிடமிருந்தது? யாரிடம் கைமாறி வந்தது? என்ற மொத்த விவரமும் அதில் அடங்கியிருக்கும்..

வில்லங்க சான்றிதழ் முக்கியத்துவம்

அத்துடன் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், ஒப்பந்த தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி உள்ளிட்ட விவரமும் அதில் அடங்கியிருக்கும்.

மேலும், Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரங்கள், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதி தருபவர் மற்றும் எழுதி பெறுவர் பெயர், பதிவு செய்யப்பட்ட வருடம், பதிவு எண் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். சொத்து அடமானம் வைக்கப்பட்டுள்ளதா? கடன் வாங்கப்பட்டுள்ளதா? சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதி தரப்பட்டுள்ளதா? போன்ற சகலமும் இந்த வில்லங்க சான்றிதழ் மூலம் நாம் கண்டுபிடித்துவிடலாம்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வில்லங்க சான்றிதழை விண்ணப்பித்து பெறுவதில் காலதாமதமாவதால், பதிவுத்துறையின் http://www.tnreginet.net/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஏற்படுத்தி தந்துள்ளது.. encumbrance certificate என்ற லிங்கை கிளிக் செய்து, வில்லங்க சான்றை பதிவிறக்கம் செய்யவும், பார்க்கவும் வசதி உள்ளது..

மீண்டும் பொதுமக்கள் அதிருப்தி?

எனினும், வில்லங்க சான்றிதழ் பெற நீண்ட நாட்கள் காத்திருப்பதாக பொதுமக்கள் தரப்பில் மீண்டும் அதிருப்தி கிளம்பியிருக்கிறது.. அதாவது, ஆன்லைன் முறையில், உரிய விவரங்களை உள்ளீடு செய்து கட்டணம் செலுத்தினால் போதும். அடுத்த 3 நாட்களுக்குள், வில்லங்க சான்றிதழ், விண்ணப்பதாரரின், இ - மெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.. ஆனால், பெரும்பாலான அலுவலகங்களில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், வில்லங்க சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லையாம்..

ஆவண எழுத்தர்கள் வாயிலாக விண்ணப்பித்தால் மட்டுமே, வில்லங்க சான்றிதழ் உடனே கிடைப்பதாக தெரிகிறது. எனவே, அதிருப்தியாளர்கள் இது தொடர்பான புகார்கள் பதிவுத்துறை தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தவண்ணம் இருந்தனர். இந்த புகார்களை உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்...

அம்பலமான உண்மை

ஒவ்வொரு விண்ணப்பமும், சார் - பதிவாளர் அலுவலக ஊழியர்களால் எவ்வாறு கையாளப்படுகிறது என்றும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போதுதான் சில இடங்களில், 2 நாட்களிலும், பல இடங்களில் 8 நாட்கள் வரையும் காலதாமதமாக வழங்கப்பட்டு அம்பலமானது.. எனவே , சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த தாமதத்துக்கு என்ன காரணம் என்று கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவாகியிருக்கிறதாம். இதனால், சான்றிதழ் வழங்க தாமதப்படுத்திய அதிகாரிகள் லேசான பீதியில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட 3 நாட்களுக்குள், அனைத்து விண்ணப்பங்களையும் முடிக்க, புதிய கட்டுப்பாடுகளை சார் பதிவாளர்களுக்கு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.. பதிவுத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையானது, பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+