தாம்பரம் அடுத்த படப்பையில் உள்ள அசோக்குமார் வீட்டில் என்ன ஒரு ஆச்சரியம்.. நீங்களே பாருங்க
சென்னை: தாம்பரம் அடுத்த படப்பை அருகே ஆத்தனஞ்சேரி பகுதியில் வசிக்கும் அசோக்குமார் என்பவரது வீட்டில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. அவரது வீட்டில் செவ்வாழை மரம் வளர்க்கப்படுகிறது. செவ்வாழை ஒரு சீப்பும், பச்சை நிற வாழைப்பழம் ஒரு சீப்பும் காய்த்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்..
தமிழ்நாட்டில் இன்று வரை பல வீடுகளில் வாழை மரம் நடப்படுகிறது. ஏனெனில் வாழை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும். ஏதேனும் ஒரு வகையில் நமக்கு நல்லதாக உள்ளன. வாழை மரத்தில் உள்ள இலை, பழம், பூ, மற்றும் வாழை தண்டு என அனைத்து பாகங்களும் மருத்துவ ரீதியாக பயன்தருகின்றன.

குறிப்பாக வாழை இலையில் இதில் மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இருக்கின்றன. இதனால் வாழை இலையில் சூடான உணவை வைத்து உண்ணும்போது அதில் இருக்கும் சத்துக்கள் நம் உடலில் சேர்வதாக நம்பப்படுகிறது. . மேலும், வாழை இலையில் இருக்கும் பாலிஃபீனால் நாம் உண்ணும் உணவில் இயற்கையாகவே சுவையை கூட்டுவதாக சொல்கிறார்கள்.
வாழைப்பழத்தை பொறுத்தவரை அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் நிறைந்தது . நம்முடைய உடலுக்கு தேவையான சோடியம் உப்பை நீக்கி, உடல் சோர்ந்து போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது. மேலும், உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் செயல்படுகிறது. வாழைப்பூ மற்றும் வாழைக்காயும், வாழைத்தண்டும் பல்வேறு சிறப்புகளுடன் இருக்கிறது. இதன் காரணமாக பலரும் வீடுகளில் வளர்க்கிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்த 38 வயதாகும் அசோக் குமார் என்பவர் தனது வீட்டில் செவ்வாழை மரம் வளர்த்து வருகிறார். தற்போது அந்த வாழை மரத்தில் விடப்பட்டுள்ள வாழைக்குலையில் செவ்வாழை ஒரு சீப்பும், பச்சை நிற வாழைப்பழம் ஒரு சீப்பும் என மாறி மாறி காய்த்திருக்கிறது. இதை கண்டு அசோக் குமார் குடும்பத்தினர் திகைத்து போனார்கள். இந்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் அசோக் குமார் வீட்டுக்கு சென்று வாழை மரத்தை ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்து செல்கிறார்கள்.
இது வரை படப்பையில் உள்ள அசோக்குமாரின் வீட்டில் செவ்வாழை மட்டுமே காய்த்து வந்த நிலையில் தற்போது ஒரு வாழை மரத்தில் செவ்வாழையும் பச்சை வாழையும் காய்த்தது வினோதமாக பார்க்கப்படுகிறது. இதுபோல் காஞ்சீபுரம் சுற்றுவட்டாரத்தில் எங்குமே இப்படி வாழை மரங்கள் குலை விட்டதில்லை என்பதால் பெரிய ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எப்படி நடந்தது என்று வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications