Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மழைக்குப் பின்னர் பயிர் பாதிப்புகளை கணக்கிட்டு நிவாரணம்.. விவசாயிகளுக்கு உறுதி கொடுத்த அமைச்சர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கனமழையால் பாதித்த பயிர்கள் குறித்து கணக்கெடுத்து விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையால், டெல்டா மாவட்டங்களில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த பல்லவராயன்பேட்டை கிராமத்தில் மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்களை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

tamil nadu rains farmers mrk panneerselvam

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மழை காரணமாக விளைநிலங்களில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மழை விட்ட ஓரிரு நாளில் கணக்கெடுத்து விரைவில் நிவாரணம் வழங்கப்படும். பயிர்கள் பாதிப்பு 33 சதவீதத்திற்கு மேல் இருந்தால் கணக்கீடு செய்யப்பட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் இயல்பான மழையளவு 920 மி.மீ. இதில் 441.8 மி.மீ (48%) மழையளவு இயல்பாக வடகிழக்கு பருவமழையில் கிடைக்கிறது. வடகிழக்கு பருவமழையின் போது வெப்பமண்டல சூறாவளி மற்றும் அதனுடன் தொடர்புடைய புயல்கள் காரணமாக மாநிலம் அதிகபட்ச பேரிடர்களை சந்திக்கிறது.

வடகிழக்கு பருவமழை இயல்பாக அக்டோபர் 1 முதல் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு 16.10.2024 அன்று துவங்கி பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் குறைந்தபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 57 மி.மீ மழையும், அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 148 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இதனால் சுமார் 31,853 ஏக்கர் பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் நீர் சூழ்ந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18,972 ஏக்கர் பரப்பிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 8,151 ஏக்கர் பரப்பிலும், திருவாரூர் மாவட்டத்தில் 2,391 ஏக்கர் பரப்பிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,339 ஏக்கர் பரப்பிலும் நீர் சூழ்ந்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை / தோட்டக்கலை அலுவலர்கள் 1963 நபர்கள் மற்றும் உதவி வேளாண்மை/ தோட்டக்கலை அலுவலர்கள் 3945 நபர்கள் ஆகமொத்தம் 5908 நபர்கள் களப்பணியில் உள்ளனர். அவர்கள் விவசாயிகளுக்கு நீரினை வடிப்பது தொடர்பாகவும் அதன் பின் எடுக்க வேண்டிய ஆலோசனைகளையும் கீழ்க்கண்டவாறு வழங்கி வருகிறார்கள்.

1. விளை நிலங்களில் உள்ள சிறுசிறு பாசன மற்றும் வடிநீர் வாய்க்கால்களில் உள்ள, செடி கொடிகளை அகற்றிட வேண்டும்.

2. வடகிழக்கு பருவமழையின் போது வெள்ள மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றிட வேண்டும்.

3. வெள்ள மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்.

4. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நீர் வடிந்தவுடன் மேலுரமாக 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் ஆகியவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு இரவு வைத்திருந்து 17 கிலோ பொட்டாஷ் உரத்துடன் கலந்து இட வேண்டும்.

5. தழைச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு (மஞ்சள் நோய் ) காணப்பட்டால் 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ ஜிங்க் சல்பேட் கலந்து 200 லிட்டர் நீருடன் கைத்தெளிப்பான் கொண்டு இலைவழியூட்டமாக தெளிக்க வேண்டும்.

மேலும், இப்பருவத்திற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான யூரியா 1,82,063 மெ.டன், டிஏபி 39,558 மெ.டன், பொட்டாஷ் 46,268 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 1,18,106 மெ.டன் இரசாயன உரங்கள் தனியார் கடைகளிலும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவ்வப்போது ஏற்படும் பயிர் பாதிப்பு நிலவரங்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்கள் கண்காணித்து வருவாய் துறையுடன் இணைந்து 33 சதவீதத்திற்கு மேல் பயிர் பாதிப்பை கணக்கீடு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+