ஸ்டாலினா? எடப்பாடியா? விஜய்யா? நகர்ப்புறங்களில் யாருக்கு வாக்கு அதிகம்! வெளியான கருத்துக்கணிப்பு
சென்னை: வரும் சட்டசபை தேர்தல் களம் அனல்பறக்க தொடங்கியுள்ள நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் (ஐபிடிஎஸ்) கருத்துக்கணிப்பில் திமுகவை நெருங்கும் நிலையில் தவெக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை 4 முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் சூழலில் கருத்துக்கணிப்பு முடிவுகளும் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

50 தொகுதிகளில் தவெக வெற்றி?
அந்த வகையில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு (ஐபிடிஎஸ்) நடத்திய கருத்துக் கணிப்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டும் வரும் நிலையில் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
இதன்படி, முதல்வர் ரேஸில் ஸ்டாலினை தொடும் தூரத்தில் விஜய் இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் சட்டசபை தேர்தலில் 50 தவெகவுக்கு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது.. 80 தொகுதிகளில் தவெக இரண்டாம் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தவெகவுக்கு தற்போதைய நிலவரப்படி 1 கோடியே 40 லட்சம் வாக்குகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இது இன்னும் உயரும் பட்சத்தில் திமுக அதிமுகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்..
நகர மக்கள் மத்தியில் யாருக்கு ஆதரவு
வரும் தேர்தலில் திமுக, அதிமுக, விசிக, நாதக, பாஜக என பல கட்சிகளின் வாக்குகளை விஜய் உடைப்பார் என்றும் தொங்கு சட்டசபை அமையே வாய்ப்பு இருப்பதாகவும் ஐடிபிஎஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளது. நகர்ப்புற பகுதியில் திமுகவுக்கு அடுத்த இடத்தில் விஜய் இருப்பார். பெண்கள், இளைஞர்கள் 78 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இதில் பெரும்பாலானோர் விஜய்யை தான் சொல்கிறார்கள்.
நகர்ப்புறங்களில் யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு திமுகவுக்கு என்று 24.77 சதவீதத்தினரும், தவெகவுக்கு என 23.46 சதவீதத்தினரும், அதிமுகவுக்கு என 20.55 சதவீதத்தினரும், நாதகவுக்கு என 6.7 சதவீதம், பாஜக 5.50 சதவீதம் பேரும், பாமகவுக்கு 2.90, காங்கிரஸ் 4.46 சதவீதம் தெரிவித்துள்ளனர்.
மகளிர் மத்தியில் ஆதரவு யாருக்கு?
திமுக 23.27 சதவீதம்
தவெக 21.23 சதவீதம்
அதிமுக 19.99 சதவீதம்
பாஜக 8.31 சதவீதம்
பாமக 7.98 சதவீதம்
நாதக 2.71 சதவீதம்
காங்கிரஸ் 4.83 சதவீதம்
விசிக 2.2 சதவீதம்'
மற்றவை 9.42 சதவீதம்
யாருக்கு வாக்கு?
தற்போதைய அரசியல் சூழலில் கட்சி ரீதியாக பார்க்கும் போது தவெக முதலிடம் பெருகிறது.
தவெக - 19.20 சதவீதம்
திமுக 17.70
அதிமுக 15.32
நாதக 6.00
காங்கிரஸ் 4.5
பாஜக 3.50
தேமுதிக 2.55
விசிக 2.00
பிற கட்சிகள் 9.41
தீர்மானிக்கவில்லை
2026 தேர்தலில் முதல்வர் யார்?
அரசு ரீதியாக கட்டமைப்பு ரீதியாக முதல்வர் ஸ்டாலின் பார்க்கப்பட்டாலும், முதலிடத்தில் அதிகமாக மக்கள் சொல்வதை வைத்து பார்க்கும் போது விஜய்யை சொல்கிறார்கள். கடந்த இரண்டு ஆய்வில் முதல்வர் ஸ்டாலினை சொன்னார்கள்.. ஆனால் இப்போது விஜய்யை சொல்கின்றனர். இந்த 3 ஆய்வினை ஒப்பிட்டு பார்க்கும் போது 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.
முதலிடம் - ஸ்டாலின் மற்றும் விஜய்
இரண்டாம் இடம் - எடப்பாடி பழனிசாமி
மூன்றாம் இடம் - அண்ணாமலை
நான்காம் இடம் - சீமான்
ஐந்தாம் இடம் - கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் என்று கணித்துள்ளது.
-
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம் -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
முடிவை மாற்றிய ராகவா லாரன்ஸ்.. விஜய்யா? அண்ணாமலையா? யாருடன் கைகோர்க்கிறார்? நாளை மறுநாள் அறிவிப்பு -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு!












Click it and Unblock the Notifications