சர்வேயர்கள்.. கட்டிட அனுமதி பெற பொறியாளர்கள் விண்ணப்பிக்க முடியாதா? தமிழக அரசுக்கு பெயிரா வேண்டுகோள்
சென்னை: கட்டிட வடிவமைப்பாளர், பதிவு பெற்ற கட்டிட பொறியாளர்கள், உரிமம் பெற்ற கட்டிட அளவையர்கள் ஆகியோர்களின் பதிவினை ( CMDA / DTCP / CORPORATION / MUNICIPALITY / TOWN PANCHAYAT / RURAL PANCHAYAT -BDO ) மேற்கண்ட ஏதாவது ஒரு துறையில் பதிவு செய்யும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருக்கு பெயிரா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, கட்டுமான பொறியாளர்கள் பதிவு சம்பந்தமாக கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.. அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளதாவது:

"தமிழகத்தில் தற்பொழுது மனைப் பிரிவு, மனை உட்பிரிவு, கட்டட அனுமதி, நில மறுவகைபாடு மாற்றம் உள்ளிட்ட அனுமதிகளை பெறுவதற்கு பொதுமக்கள், கட்டிட வடிவமைப்பாளர் (ARCHITECT), பதிவு பெற்ற கட்டிட பொறியாளர்கள் (REGISTERED ENGINEERS), உரிமம் பெற்ற கட்டிட அளவையர்கள் (LBS) உள்ளிட்டோரை அணுகி இவர்களின் உதவியுடன், அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, திட்ட அனுமதிக்கான வரைபடங்களை தயாரித்து, சம்பந்தப்பட்ட (CMDA-DTCP) அனுமதி வழங்கும் அதிகாரம் பெற்ற துறையின் இணையதளம் வாயிலாக (Online Portal) ஒற்றை சாளர முறையில் (SINGLE WINDOW SYSTEM) இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அனுமதி பெற்று தருகின்றனர்.
வீட்டுவசதி + நகர்ப்புற வளர்ச்சி துறை
தமிழகத்தை பொறுத்த வரைக்கும் அனுமதி பெற தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டட விதிகள் TNCDBR-2019 இன் படி மாநிலம் முழுமைக்கும் ஒரே மாதிரியான விதிகளையும், மற்றும் மாநிலம் முழுவதிலும் இருந்து அனுமதி கோரி எளிதில் எங்கிருந்தும் எந்நேரத்திலும் ஒற்றை சாளர முறையில் இணையத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறும் வகையிலும், மேலும் கூடுதலாக உடனடி அனுமதி (Instant Approval) பெறும் வகையிலும், பல சிறப்பான திட்டங்களை தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது.
இந்த நடைமுறையானது, பொதுமக்கள் மற்றும் கட்டுனர்கள் - மனை அபிவிருத்தியாளர்கள் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் தமிழக அளவில் மேற்கண்ட அனுமதிகளை பெறுவதற்கு திட்டம் தயாரித்து விண்ணப்பிக்கக் கூடிய அதிகாரம் பெற்ற, கட்டிட வடிவமைப்பாளர் (ARCHITECT), பதிவு பெற்ற கட்டிட பொறியாளர்கள் (REGISTERED ENGINEERS), உரிமம் பெற்ற கட்டிட அளவையர்கள் (LBS) சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA), நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP), மாநகராட்சி (CORPORATION), நகராட்சி (MUNICIPALITY), பேரூராட்சி (TOWN PANCHAYAT) மற்றும் ஊராட்சிகள் (RURAL PANCHAYAT) என தனித்தனியே பதிவினை செய்ய வேண்டியுள்ளது.
கட்டிட அளவையர்கள்
இதன் காரணமாக கட்டிட வடிவமைப்பாளர் (ARCHITECT), பதிவு பெற்ற கட்டிட பொறியாளர்கள் (REGISTERED ENGINEERS), உரிமம் பெற்ற கட்டிட அளவையர்கள் (LBS) மேற்கண்ட துறைகளில் தனித்தனியே பதிவினை செய்வதற்கு பல சங்கடங்களுக்கும் மிகுந்த சிரமத்திற்கும் ஆளாகின்றனர்.
ஆகவே தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, தற்பொழுது நடைமுறையில் உள்ள கட்டிட வடிவமைப்பாளர் (ARCHITECT), பதிவு பெற்ற கட்டிட பொறியாளர்கள் (REGISTERED ENGINEERS), உரிமம் பெற்ற கட்டிட அளவையர்கள் (LBS) மேற்கண்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்களில் பதிவு செய்யும் நடைமுறையினை மாற்றியமைக்க வேண்டும்.
எங்கிருந்தும், எந்நேரத்திலும்...
மேற்கண்ட ஏதேனும் ஒரு துறை சார்ந்த அலுவலகத்தில் மட்டும் பதிவு செய்திருந்தாலும் அதன் அடிப்படையில் மாநிலம் முழுமைக்கும் ஒற்றை சாளர முறையிலேயே எங்கிருந்தும் எந்நேரத்திலும் எளிதில் கட்டிட வடிவமைப்பாளர் (ARCHITECT), பதிவு பெற்ற கட்டிட பொறியாளர்கள் (REGISTERED ENGINEERS), உரிமம் பெற்ற கட்டிட அளவையர்கள் (LBS) போன்றவர்கள் மனை பிரிவு, மனை உட்பிரிவு, கட்டட திட்ட அனுமதி, நில வகைபாடு மாற்றம் உள்ளிட்ட அனுமதிக்கான திட்டங்களை தயாரித்து விண்ணப்பிக்கும் வகையில் வழிவகை செய்திட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications