பென்ஷன்தாரர்களே.. வீட்டுக்கே வர்றாங்களாம்.. இருந்த இடத்திலிருந்தே உயிர்ச்சான்றிதழ்.. மத்திய அரசு செம
சென்னை: உயிர்ச்சான்றிதழ் குறித்து மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.. இது மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் (இ.பி.எப்.ஓ.) என்பது இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.

தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டம் 1995-ன் விதிகளுக்கு இணங்க ஒவ்வொரு ஓய்வூதியதாரரும், மத்திய அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஒவ்வொரு வருடத்துக்கு ஒருமுறை உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
புதுப்பிப்பது எப்படி: இந்த உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பித்த நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். உயிர்வாழ் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், தங்கள் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை அருகிலுள்ள இ-சேவை மையம், வங்கி கிளை, அஞ்சல் அலுவலகம் போன்றவற்றின் மூலம் புதுப்பிக்கலாம்...
ஒருவேளை, ஒரு வருடத்திற்கும் மேலாக உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லையானால், உயிர்வாழ் சான்றிதழை மேலும் புதுப்பிக்கும் வரை மாதாந்திர ஓய்வூதியம் நிறுத்தப்படும்... ஓய்வூதியம் பெறுபவர்கள் ஏதேனும் மரணம் அடைந்தால் அத்தகைய ஓய்வூதியதாரரின் குடும்ப உறுப்பினர் இறப்பு சான்றிதழின் நகலை இந்த அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதெல்லாம் இந்த திட்டத்தின் விதிமுறையாக உள்ளது.
உயிர் சான்றிதழ்: இந்நிலையில், இந்த திட்டம் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இதில், நாடு முழுவதும் மொத்தம் 69.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் இருப்பதால், அவர்கள் வீட்டிலிருந்தே முக அங்கீகார தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான எண்ம உயிர் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
அதுமட்டுமல்லாமல், மத்திய அரசு நடமாட முடியாத ஓய்வூதியதாரர்களிடம் உயிர் சான்றிதழை பெற அவர்களின் வீட்டிற்கு சென்று பெறும் வகையில் ஊழியர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.. இதன்மூலம் அறிதிறன் பேசியை பயன்படுத்தியும், வங்கி கிளைக்கு நேரில் சென்றும் உயிர் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்..

இது குறித்து மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவில், முக அங்கீகார தொழில்நுட்பம் மூலமாக உயிர் சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்த விழிப்புணர்வை ஓய்வூதியதாரர்களிடம் வங்கிகள் ஏற்படுத்த வேண்டும்..
ஓய்வூதியதாரர்கள் நிம்மதி: நடமாட முடியாமல் படுக்கையில் இருக்கும் அல்லது மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அவர்கள் இடத்துக்கே சென்று உயிர் சான்றிதழை பெற ஊழியர் ஒருவரை வங்கிகள் நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவானது, ஓய்வூதியதாரர்களுக்கு மிகுந்த நிம்மதியை தந்து வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications