சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தாலியை கூட அனுமதிக்கலையே".. இது ஒரு சூர்யாவின் குரல் இல்லை.. ஒவ்வொரு வரியிலும் ஒரு தகப்பனின் வலி!

சூர்யாவின் கண்டன குரலுக்கு ஆதரவுகள் வலுத்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: "தாலியை கழட்டி வைத்துவிட்டு தேர்வு எழுத சொன்னாங்களே, அதெல்லாம் தப்பா தெரியலையா? சூர்யா பேசுனதுதான் தப்பா போச்சா? இது ஒரு நடிகரின் குரல் இல்லை... ஒவ்வொரு வரிகளிலும் ஒரு தகப்பனின் உணர்வு மிக்க வலியாகவே தெரிகிறது.. இதுக்கெல்லாம் ஒரு துணிச்சல் வேண்டும்" என்று நடிகர் சூர்யாவை சோஷியல் மீடியாவில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

Recommended Video

    சூர்யாவை அரசியலுக்கு அழைக்கிறாரா மூடர்கூடம் நவீன்?

    எப்போதுமே சிவக்குமார் வீட்டில் இருந்து அறிக்கை ஏதாவது வந்தாலே தமிழகமே பரபரப்பாகிவிடும்.. நிச்சயம் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாகவே அந்த அறிக்கை அமைந்துவிடுவது யதார்த்த சூழல்.. குறிப்பாக பிள்ளைகளின் கல்வி சமாச்சாரம் என்றால் இந்த குடும்பத்தினர் அவர்களின் துயரில் தாமாக வந்து பங்கெடுத்து கொள்கின்றனர்.

    அப்படித்தான் நேற்றும் சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டார்... "சாதாரண குடும்பத்துப் பிள்ளைகளின்‌ மருத்துவர்‌ கனவில்‌ தீ வைக்கற நீட் தேர்வு.. அனைவருக்கும்‌ சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம்‌, ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாகக் கொண்டு வருகிறது.

    நீட் தேர்வு விவகாரம்... தமிழக அரசு நாடகம் நடத்துகிறது... மு.க.ஸ்டாலின் பரபரப்பு புகார் நீட் தேர்வு விவகாரம்... தமிழக அரசு நாடகம் நடத்துகிறது... மு.க.ஸ்டாலின் பரபரப்பு புகார்

     மகாபாரதம்

    மகாபாரதம்

    மகாபாரத காலத்து துரோணர்கள்‌ ஏகலைவன்களிடம்‌ கட்டை விரலை மட்டுமே காணிக்கையாகக் கேட்டார்கள்‌. நவீனகால துரோணர்கள்‌ முன்னெச்சரிக்கையுடன்‌ ஆறாம்‌ வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும்‌ என்று கேட்‌கிறார்கள்" இதுதான் சூர்யா அறிக்கையின் சாராம்சம்.

     அறிக்கை

    அறிக்கை

    பாஜக அரசு, நீதித்துறையை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார் சூர்யா.. இந்த அறிக்கை மிகப் பெரும் தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த மக்களின் எண்ண ஓட்டத்தை சூர்யா பிரதிபலித்துள்ளதாக மக்கள் ஆரவாரிக்கிறார்கள். சூர்யாவுக்கு ஆதரவான ஹேஷ்டேக்குகள் சோஷியல் மீடியாவில் உருவானாலும், பல்வேறு விவாதங்களை கிளப்பி வருகிறது.

     சினிமா ஸ்டார்கள்

    சினிமா ஸ்டார்கள்

    இதை பற்றி ஒருசில கல்வியாளர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது, "சினிமா உலகின் பெரிய பெரிய சூப்பர் ஸ்டார்களே அந்தந்த மாநிலங்களில் மத்திய அதிகாரத்திற்கு பம்மி கொண்டிருக்கும்போது, சூர்யாவின் இந்த துணிச்சல் பாராட்டத்தக்கது என்பதை சொல்லியே ஆக வேண்டும். இது ஒரு தன்னெழுச்சியான தைரியம் மிக்க செயல்பாடு.. மக்களோடு மக்களாக தோள் கொடுத்து நிற்பவர்கள் யாரோ அவர்கள்தான் வரலாற்றில் அடுத்த அடிக்கு நகர்ந்து செல்கிறார்கள்.

     மாணவன்

    மாணவன்

    ஒவ்வொரு மாணவனையும் நீட் தேர்வில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அந்தந்த ஆசிரியர்களே முதலில் முடிவெடுக்க வேண்டும்.. அவர்கள் பிள்ளைகளுக்கு சிறந்த பயிற்சியை தந்தால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியம்.. இவங்க கேட்கலாம், நவோதய பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 84 சதவீதம் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

     சமச்சீர் கல்வி

    சமச்சீர் கல்வி

    ஜேஇஇ தேர்வுகளில் எத்தனையோ மாணவர்களுக்கு மேல் வெற்றி பெறுகிறார்கள்... கிராமப்புறத்தில் நடத்தப்படும் நவோதய பள்ளிகளால் சாதிக்க முடிந்ததை ஏன் தமிழக சமசீர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் சாதிக்க முடிவதில்லை என்று இவர்கள் கேட்கலாம்.. அதற்கான கட்டமைப்புகள் சரியாக உள்ளதா என்பதுதான் நம் கேள்வியே.

     துரோணர்கள்

    துரோணர்கள்

    ஆனால் சூர்யா துரோணர்களை ஏன் உதாரணம் காட்டினார் என்று தெரியவில்லை.. அந்த காலத்தில் கல்வி, ஒழுக்கம், அறநெறிக்கு என்று ஒரு ஆத்மார்த்தம் இருந்தது.. ஆனால் இன்னைக்கு அப்படி இல்லை.. துரோணச்சாரியார் ஏகவலைவனிடம் கட்டை விரலை தட்சிணையாக பெற்றதற்கு காரணம், வித்தையை பெற்று கொள்ள அல்ல.. திருடி கொள்ளத்தான்.. இதை சிந்தித்து பார்க்க வேண்டும்!

     அனுமதி?

    அனுமதி?

    உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சில் தீர்ப்பு சொல்லப்பட்டது என்பது சரியான வாதம்தான்.. நீதிமன்றத்தை யாரும் விமர்சிக்க முடியாது... விமர்சிக்கவும் கூடாது.. ஆனால், தீர்ப்பில் மட்டும் தேர்வை நடத்த அனுமதி தந்ததை எப்படி அணுகுவது? வேறு எப்படி பார்ப்பது?

    வேதனை

    வேதனை

    ஒரே நாளில் 3 குழந்தைகளை பறிகொடுத்துவிட்டு, பெற்றோர்கள் கதறி கொண்டு இருந்தாலும், அந்த கதறல் இப்போது வரை இவர்களுக்கு எட்டவில்லையே என்பதுதான் வேதனையாக இருக்கிறது.. மாணவர்களின் உயிர்களுக்கு என்னதான் மரியாதை? ஏன் தாலியையே கழட்டி வைத்துவிட்டு தேர்வு எழுதும் கொடுமை இவங்க கண்ணுக்கு தெரியலையா சூர்யா சொன்னதில் எந்ததப்பும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை என்கின்றனர் கல்வியாளர்கள்.

     ஆதரவு

    ஆதரவு

    எது எப்படி இருப்பினும் தமிழக மக்கள் பெரும்பாலானோரின் ஒரே கோரிக்கை நீட் ஒழிய வேண்டும், ஒழிக்கப் பட வேண்டும் என்பதே. அதைத்தான் சூர்யா பல்வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளார். அதில் வார்த்தைகளில் எங்காவது தவறாக சொல்லியிருக்கலாம்.. ஆனால் அவர் சொல்ல வந்து தெளிவு.. நீட் ஒழிய வேண்டும்.

    English summary
    Surya gets big support from TN people
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X