சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் - ஜூன் 21ஆம் தேதி என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது

கிரகண நேரத்தில் தானம் கொடுப்பது சிறப்பானது. இது ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் என்பதால் ராகுவிற்கு பிடித்தமான உளுந்து தானம் கொடுக்கலாம். அமைதியாக வீட்டிற்குள் அமர்ந்து மனதில் இறைவனின் நாமத்தை உச்சரிக்கலாம

Google Oneindia Tamil News

சென்னை: சார்வரி வருடம் ஆனி மாதம் 7ஆம் தேதி ஜூன் 21ஆம் தேதி ஞாயிறு கிழமை காலை 9.15 மணிக்கு தொடங்கி பகல் 3.03 மணிவரை மிருகஷீரிடம் திருவாதிரை நட்சத்திரங்களில் இந்த சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த ராகு கிரஹஸ்த பகுதி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும். கிரகணம் நிகழும் நேரங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது யாரெல்லாம் பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

கிரகணம் வந்தாலே பலருக்கும் பயம்தான், சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ அது வானியல் நிகழ்வுதான். சூரிய கிரகணம் அமாவாசை நாளில் பகலிலும், சந்திர கிரகணம் பவுர்ணமி நாளில் இரவிலும் நிகழ்கிறது. இந்த கிரகணங்களை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரித்தாலும் யாரும் அதை கேட்பதாக இல்லை.

இன்னும் சில நாட்களில் சூரிய கிரகணம் நிகழவிருக்கிறது. இந்த சூரிய கிரகணம் பற்றி சாஸ்திரங்களில் என்ன சொல்லியிருக்கிறது. கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

கிரகண தோஷம்

கிரகண தோஷம்

கிரகண நேரத்தில் உறங்க கூடாது. கிரகணம் நிகழும் முன்பு தண்ணீர், வேக வைக்காத உணவுப்பொருட்கள், அரிசி போன்றவைகளில் தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும். இதன்மூலம் கிரகண தோஷம் ஏற்படாது.

கிரகண தோஷம்

கிரகண தோஷம்

கிரகண நேரத்தில் உறங்க கூடாது. கிரகணம் நிகழும் முன்பு தண்ணீர், வேக வைக்காத உணவுப்பொருட்கள், அரிசி போன்றவைகளில் தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும். இதன்மூலம் கிரகண தோஷம் ஏற்படாது.

தோஷங்கள் நீங்கும்

தோஷங்கள் நீங்கும்

கிரகணம் நிகழும் நேரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பானது. தகப்பனார் இல்லாதவர்கள் இந்த நேரத்தில் தர்ப்பணம் செய்யலாம் இதன் மூலம் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.

தானம் கொடுங்க

தானம் கொடுங்க

கிரகண நேரங்களில் பூஜை அறையில் அமர்ந்து இறைவன் நாமத்தை ஜபம் போல சொல்லுங்க. அமைதியாக மனசுக்குள் சொல்வது சிறப்பு. கர்ப்பிணிகள் தனிமையில் அமர்ந்து உங்களுக்கு பிடித்த கடவுளின் பெயரை உச்சரிக்கலாம். இதன் மூலம் கருவில் உள்ள குழந்தைக்கு ரொம்ப நல்லது. கிரகண நேரத்தில் தானம் கொடுப்பது சிறப்பானது. இது ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் என்பதால் ராகுவிற்கு பிடித்தமான உளுந்து தானம் கொடுக்கலாம்.

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்

சூரிய கிரகணம் நிகழும் நாளில் ரோகிணி, மிருகஷீரிடம், திருவாதிரை, புனர்பூசம், சித்திரை, சுவாதி, அவிட்டம், சதயம் ஆகிய கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ளவும்.

கேது கிரகஸ்த சூரிய கிரகணம்

கேது கிரகஸ்த சூரிய கிரகணம்

சார்வரி வருடம் கார்த்திகை மாதம் 29ஆம் தேதி டிசம்பர் 12, 2020ஆம் ஆண்டு திங்கட்கிழமை இரவு 7.03 மணி முதல் இரவு 12.22 மணிவரை கேட்டை, மூலம் நட்சத்திரங்களில் நிகழும் கேது கிரகஸ்த முழு சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது.

English summary
Solar Eclipse 2020 Annular solar eclipse to take place on 21 June, from 9.15 am IST, will be visible from parts of north India.Do's and Dont for Surya grahanam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X