மூணாறு நிலச்சரிவு.. தமிழர்களின் துயர மரணத்திற்கு நடிகர் சூர்யா இரங்கல்
கேரளா கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களை நடிகர் சூர்யா மறந்து விட்டதாக
சென்னை: கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். விபத்தின் போது உதவி செய்த மலப்புரம் மக்களுக்கும் சல்யூட் என்றும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தமிழக ரசிகர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளானது. இதனையடுத்து இயற்கை விபத்தில் உயிரிழந்தவர்களின் துயரத்தில் பங்கெடுப்பதாக பதிவிட்டுள்ளார் சூர்யா.
கேரளாவில் மூணாறு அருகே ராஜமாலா தேயிலை தோட்டத்தில் கடந்த வியாழக்கிழமையன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 80கும் மேற்பட்டோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். இந்த விபத்திற்கு முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு விமான விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்த நிலையில் 150க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் பிரதமர், ஜனாதிபதி என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

சூர்யாவின் ட்விட்டர் பதிவு
இந்த நிலையில் ஐந்து நாட்களுக்குப் பிறகு நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் சல்யூட் என்றும் கூறியுள்ள நடிகர் சூர்யா. விமானிகளுக்கும் எனது மரியாதையை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் விமர்சனம்
சூர்யாவின் இந்த ட்விட்டர் பதிவுக்கு தமிழக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மூணாறு தேயிலைத் தோட்ட தமிழர்களின் மரணத்திற்கு எந்தவித இரங்கலும் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏழையின் உயிருக்கு மதிப்பில்லை
மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் அனைவருமே ஏழை தொழிலாளர்கள். 80 பேர்வரை மண்ணோடு மண்ணாக புதையுண்டு போனார்கள். இதில் 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் மரணத்திற்கு ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
Recommended Video

இரண்டு பேருக்கும் சொல்லியிருக்கலாம்
முதலில் நடந்த விபத்து மூணாறு தேயிலை தோட்டத்தில்தான். அந்த விபத்தில்தான் அதிக உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. தமிழக தொழிலாளர்களின் மரணத்திற்கு இரங்கல் கூறாமல் விமான விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்ததுதான் தற்போது விமர்சனத்திற்கு ஆளானது.

தாங்க முடியாத துயர நிகழ்வு
ட்விட்டரில் விமர்சனம் எழுந்ததை அடுத்து மூணாறு நிலச்சரிவு மரணத்திற்கும் இரங்கல் தெரிவித்துள்ளார் சூர்யா. இடுக்கி மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது வேதனை தருகிறது. குடும்பத்திற்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் பிறந்த மண்ணை விட்டு பிரிந்து சென்று வேலை செய்தவர்கள் உயிரோடு மண்ணில் புதைந்து இறந்து போனது வேதனை தரும் நிகழ்வு. நெஞ்சை உலுக்கும் இந்த இயற்கை விபத்தில் உயிரிழந்தவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் சூர்யா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications