என்னா நடிப்பு.. இழந்துட்டோமே.. சுஷாந்த் சிங் கடைசி படம் 'தில் பெச்சாரா' பார்த்து உருகும் ரசிகர்கள்
சென்னை: "இப்படிப்பட்ட அருமையான நடிகரை இழந்துவிட்டோமே.." என்பதுதான், தில் பெச்சாரா (dil bechara) படத்தை பார்த்த ரசிகர்களின் வாயிலிருந்து வெளி வரும் வார்த்தையாக.. இல்லை, இல்லை.. குமுறலாக இருக்கிறது.
தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படம்தான் இது. இந்த படத்தில், அவரது நடிப்பை பார்த்துவிட்டு, மனம் உருகிப் போயுள்ளனர் ரசிகர்கள்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியானது. உலகம் முழுக்க உள்ள சுஷாந்த் ரசிகர்கள் இதற்காக காத்துக் கிடந்தனர்.
Dil Bechara Review: சிரித்துக் கொண்டே அழ வேண்டுமா.. சுஷாந்த் சிங்கின் இந்த இறுதி படத்தை பாருங்க!

கடைசி திரைப்படம்
முகேஷ் சப்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி, சைஃப் அலி கான் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். எம்.எஸ். தோனி பயோபிக்கில் நடித்து 200 கோடிக்கும் மேல் வசூலை குவித்த சுஷாந்த் சிங்கின் கடைசி படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசையமைத்ததை போன்ற யதேர்ச்சையான கவுரவம், வேறு, இருக்க முடியாததுதான்.

உருக்கம்
இத்திரைப்படம் குறித்து, ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் உருக்கமாக பதிவிட்டு வருகிறார்கள். வாங்க பார்க்கலாம்: தில் பெச்சாரா படத்தை செல்போனில் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும் என்கிறார் ஒரு நெட்டிசன். தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்த் தனது மகள் கதாப்பாத்திரம் அனுப்பிய வீடியோவை பார்த்து உடைந்து போகும் காட்சியை நினைவுபடுத்துகிறதாம், சுஷாந்த் சிங் ராஜ்புத்தை பார்க்கும்போது. இப்படத்தில், ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகராக நடித்துள்ளார் சுஷாந்த். எனவே, இந்த மீம் சரியாக பொருந்திப்போகிறது.

மிஸ் செய்கிறோம்
என்னை மிஸ் செய்வியா.. என்று தில் பெச்சாரா படத்தில் சுஷாந்த் கேட்பது போல வரும் காட்சியை குறிப்பிட்டு, ஆமா, மிஸ் செய்கிறோம் என மனமுடைந்து கூறியுள்ளார், இந்த நெட்டிசன்.

விசில் அடித்த ஜெனிலியா
சுஷாந்த்தை திரையில் பார்த்ததும், வேறு வழியே தெரியவில்லை.. விசில் அடித்துவிட்டேன்.. என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார், நடிகை ஜெனிலியா.

நெட்டிசன்கள்
சுஷாந்த் சிங் ராஜ்புத்தை ரொம்பவே மிஸ் செய்கிறோம். தில் பெச்சாரா படத்தை பார்த்த பிறகு, சுஷாந்த் குடும்பத்தினர் எவ்வளவு சோகத்தில் இருப்பார்கள் என்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. நீங்கள்தான் இந்த படத்தின் உயிர். ஆனால், இந்த வாழ்க்கையில் நீங்கள் இல்லையே. இவ்வாறு ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார், இந்த நெட்டிசன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications