சென்னை வேளச்சேரி கல்லூரியில் பட்டாசு வெடி வீசி மோதல்.. 18 மாணவர்கள் நீக்கம்.. நிர்வாகம் நடவடிக்கை
சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மோதலில் ஈடுபட்ட 18 மாணவர்களை நீக்கம் செய்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை கிண்டி - வேளச்சேரியில் அமைந்துள்ளது குருநானக் கல்லூரி. சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்தக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த விவரம் வருமாறு:

குருநானக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்கள் சிலருக்குள் யார் பெரியவரக்ள் என்ற ரீதியில் மோதல் நீடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அடிக்கடி இரு வேறு பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே இந்த சண்டை நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் இன்று கல்லூரியில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஒரு தரப்பு மாணவர்கள் பட்டாசு வெடியை வெடிக்க செய்ததாக சொல்லப்படுகிறது. பலத்த சத்தத்துடன் வெடித்ததால் கல்லூரியில் மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தது. இந்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டா அல்லது தீபாவளி பட்டாசா என ஆய்வுக்காக அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மேலும் இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மோதலில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்கள் 18 பேரை நீக்கம் செய்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications