அந்த ஆளுனு பேசுவது நியாயமா? என் கட்சியிலேயே ஆள் செட் பண்ணி திட்டுறாங்க! கொட்டி தீர்த்த ஆதவ் ஆர்ஜுனா
சென்னை: தனக்கு எதிராக, தங்களுக்கு ஆதரவான பத்து பேரை வைத்து ஊடகங்களில் கருத்து சொல்ல வைப்பது, என் கட்சியிலேயே நான்கு ஐந்து பேரை வைத்து திட்ட விடுவதெல்லாம் நடக்கிறது என கூறியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா.
விசி கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே துணை பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டார். மேலும் கட்சி நிகழ்ச்சிகள், மாநாடுகள், சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளிட்டவை ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஜெயிக்க முடியாது என பேசியது திமுக தலைமையை கோபத்தில் ஆழ்த்தியது.
தொடர்ந்து திருமாவளவனின் சமூக வலைதள பக்கத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என வெளியாகி வீடியோ நீக்கப்பட்டதும், பின்பு சேர்க்கப்பட்டதும், மீண்டும் நீக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி எம்எல்ஏக்களே ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு திருமாவளவன் தலையிட்டு இந்த விவகாரத்தை முடித்து வைத்தார்.
இந்த நிலையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா மன்னராட்சி முறையை ஒழிக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என திமுக தலைமையை குறித்து பேசியது பிரச்சினையை பெரிதாக்கியது. இதனையடுத்து விசி கட்சியிலிருந்து அவர் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், என் கட்சியிலேயே நான்கு ஐந்து பேரை வைத்து திட்ட விடுவதெல்லாம் நடக்கிறது என கூறியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா. இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிடம் பேட்டியளித்துள்ள ஆதவ் அர்ஜுனா,"அவருக்கு அறிவு இருக்கா? அந்த ஆளுக்கு அறிவு இருக்கா? என பேசுகிறார்கள். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பதவி ஏற்றவர்கள் தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடலாமா?. குறிப்பாக அந்த பொறுப்பில் இருந்து கொண்டு அப்படி பதில் சொல்லலாமா? என்பது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
என்னுடைய கருத்தை சொன்னேன். அந்த கருத்தை கருத்தாக எதிர்கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆதரவான பத்து பேரை வைத்து ஊடகங்களில் கருத்து சொல்ல வைப்பது, என் கட்சியிலேயே நான்கு ஐந்து பேரை வைத்து திட்ட விடுவது இதெல்லாம் நடக்கிறது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே மதுவிலக்கு மாநாட்டை நடத்தினோம். அதில் எங்கள் தலைவர் திருமாவளவனின் பேச்சு சிறப்பாக இருந்தது. தலைவர் ஒரு நேரத்தில் மிகவும் அமைதியாக பேசினார்.
காரணம் கூட்டணி கட்சியிலிருந்து அதாவது திமுகவிலிருந்து நிர்வாகிகள் வந்திருந்த நிலையில் பேசிக் கொண்டிருந்தார். நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, திருமாவளவன் பேசிக் கொண்டிருக்கும் போது திமுகவின் இரண்டு தலைவர்கள் மேடையை விட்டு கிளம்பி விட்டார்கள். இதை பார்க்கும் போது எனக்கு கோபம் வருமா? வராதா? காஞ்சிபுரம் மாநாட்டில் முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போது திருமாவளவன் எழுந்து போனால் எப்படி இருக்கும்,
அப்போது எனக்கு எழுந்த உணர்வை திருமாவளவனிடம் சொன்னேன். அப்போது அவர் பொறுமையாக இரு என்று சொன்னார். அந்த பொறுமை என்னிடம் இல்லாததால் தான் நான் அன்று அப்படி பேசினேன். கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டும். ஒரு கருத்தியலை உருவாக்க வேண்டும். எல்லோரும் சமம் என்ற கொள்கையை, கொள்கை உருவாக்கத்தை உருவாக்க வேண்டும். அதுதான் என்னுடைய கொள்கை" என்றார்.
-
"அன்னைக்கு காரி துப்பினவங்க... இப்போ போட்டோ எடுக்க வர்றாங்க!" முதலமைச்சருக்காக வருத்தப்பட்ட பெப்சி விஜயன் -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை! -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
தமிழ்நாடுக்கு எச்சரிக்கை மணி! கடனை விட மோசமானது இது.. ஒவ்வொரு வருடமும் ரூ.78,324 கோடி! -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா?












Click it and Unblock the Notifications