ஜனநாயகன்: ரேஷனில் அரிசி, பருப்பையா நிறுத்திட்டாங்க.. இப்போ இல்லாட்டி அடுத்த மாதம்.. எஸ்வி சேகர்
சென்னை: எந்த இடத்தில் தவறு உள்ளது என்பதை படக்குழு தான் யோசிக்க வேண்டும் எனவும், ஒரு இரண்டு மாதத்திற்கு முன்பே சென்சாருக்கு படத்தை அனுப்பியிருந்தால் ஒரு பிரச்சினையும் இருந்திருக்காது என்றும் ஜனநாயகன் பட வழக்கு குறித்து எஸ்வி சேகர் கூறியுள்ளார். மேலும் ரேஷனில் அரிசி பருப்பையா நிறுத்திட்டாங்க.. இப்போ இல்லாட்டி அடுத்த மாதம் படத்தை பார்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வரவில்லை. இதனால் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் உண்டானது. இதையடுத்து கேவிஎன் புரோடெக்ஷன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் உடனடியாக வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

தள்ளிப்போகும் ஜனநாயகன்
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜனநாயகன் படத்திற்கு யூ ஏ 16+ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதனை எதிர்த்து உடனடியாக தணிக்கை குழு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் வேண்டும் என்றால் மீண்டும் ஜனநாயகன் பட வழக்கை தனி நீதிபதி விசாரிக்கவும், சென்சாருக்கு பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
இதனால் ஜனநாயகன் படக்குழுவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அமேசான் நிறுவனம் விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் தாமதம் ஆனால் இழப்பீடு கேட்டும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் படக்குழுவுக்கு அடுத்தடுத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நடிகர் எஸ்.வி சேகர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். எஸ்.வி சேகர் கூறியதாவது:-
படக்குழு செய்த தவறு
ஹோம் மினிஸ்டரியில் என்.ஓசி வாங்கவில்லை என்று சொல்கிறார்கள். அதைவிடுத்து எப்படி ரீ சென்சார் பண்ண முடியும். கோர்ட்டே சொன்னால் கூட அதை செய்யனும் என்று அவசியமில்லை. பார்மாலிட்டிகளை முடிக்காமல் எப்படி ரீ சென்சார் செய்ய முடியும். எந்த எடத்தில் தவறு உள்ளது என்பதை படக்குழு தான் யோசிக்க வேண்டும்.
ஒரு இரண்டு மாதத்திற்கு முன்பே சென்சாருக்கு படத்தை அனுப்பியிருந்தால் ஒரு பிரச்சினையும் இருந்திருக்காது.. ரிலீஸ் டேட்டை அறிவித்துவிட்டு படத்தை ஏன் சென்சாருக்கு அனுப்ப வேண்டும். சென்சாருக்கு அனுப்பும் முன்பே ஏன் அவர் ரிலீஸ் டேட்டை அறிவித்தார். ரிலீஸ் டேட்டை சென்சாருக்கு அனுப்புவதற்கு முன்பு அறிவிப்பது குற்றம் ஆகும். அந்த குற்றத்தை தான் படக்குழு செய்துள்ளது.
அடுத்த மாதம் பார்க்கலாம்
நம்ம மேல் ஒரு அனுதாபம் தேடக்கூடிய வகையிலும் அரசியல் ரீதியாகவும் செயல்பட்டால் இப்படித்தான் ஆகும். இது என்ன ரேஷனில் அரிசி, பருப்பையா நிறுத்திவிட்டாங்க.. இப்போ இல்லாட்டி அடுத்த மாதம் படத்தை பார்க்கலாமே..
ஒரு படத்திற்கு ரீ சென்சாருக்கு போக வேண்டும் என்றால், அவர்கள் முதலில் அந்த படத்தை ரீ சென்சாருக்கு அப்ளை செய்ய வேண்டும். அப்போது அவர்கள் இந்த படத்திற்கு யூ சான்றிதழுக்கு நிராகரிக்கின்றோம் என்று சொல்லி தான் அப்ளை செய்ய முடியும். அப்போது தமிழ்நாட்டில் போர்ட் மெம்பர் இருக்கிறார்களா என்று பார்ப்பாங்க..
கால தாமதம் ஆகத்தான் செய்யும்
அவங்க அந்த நேரத்தில் இருந்தால் தான் உடனே கொடுக்க முடியும். இல்லையென்றால் கால தாமதம் ஆகத்தான் செய்யும். ஒரு படத்தை ரீ சென்சாருக்கு அப்ளை செய்யும் போது அங்கு ஏற்கனவே 10 முதல் 15 படங்கள் இருந்தால், 16 வது படமாகத்தான் இதை எடுப்பாங்க.
சென்சார் குழுவில் இருப்பவர்கள் ரெகுலராக அவர்கள் பணியை செய்கிறார்கள். யாரோ ஒருவர் தவறாக செயல்பட்டிருந்தால் எல்லாரும் அப்படி என சொல்லிவிட முடியாது. கபாலி படத்தில் உலகம் முழுக்க ஏ சான்று ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் யூ சான்றிதழ்.. எங்கேயாவது சில விலை போகக்கூடிய அதிகாரிகள் இருக்கலாம். ஆனால் அதற்காக எல்லா படத்திற்கும் அப்படி வாங்கிவிடலாம் என நினைக்க முடியுமா.. இவ்வாறு அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா? -
விஜய் காரை மறித்த அஜிதாவுக்கு சீட் இல்லை.. நடிகர் ஸ்ரீநாத்திற்கு தூத்துக்குடியில் போட்டியிட சான்ஸ்! -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டிருக்கிறேன்.. தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் உருக்கம் -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்! -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications