விஜய்க்கு அரசியல் தெரியல.. ஸ்டாலினுக்காக பிரச்சாரம் செய்ய போறேன்.. ஒரே போடாக போட்ட எஸ்.வி சேகர்
சென்னை: இனி எப்போதுமே அருமை நண்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னால் அணிவகுத்து நிற்பேன், அது எனது வாழ்நாள் கடமை, விஜய்க்கு அரசியல் தெரியவில்லை, திருச்சியில் வந்த கூட்டம் நாகையில் அவருக்கு வரவில்லை, சினிமாவில் கைத்தட்ட உதவும் வசனம்போல் மக்கள் மத்தியில் பேசுகிறார், வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வேன் என்று தலைமைச் செயலகத்தில் எஸ்வி சேகர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நாடக நடிகர், தமிழ்நாட்டின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் எஸ்.வி. வெங்கடராமன் வசித்து வந்த தெருவிற்கு அவரின் பெயர் இன்று வைக்கப்பட்டது. மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு எஸ்.வி. வெங்கடராமன் தெரு என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட சாலைகளின் பெயர் பலகைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் எஸ்.வி.வெங்கடராமன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின் உடன் நட்பு
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.வெங்கடராமன் மகனும், நடிகருமான எஸ்.வி.சேகர் பேசியதாவது, என்னுடைய நாடகத்திற்கு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமை சேர்ந்து எங்களை பாராட்டினார். அப்போது எனது தந்தையின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. எனது தந்தைக்கு முதல்வர் நெருங்கிய நண்பராக இருந்தார். மேலும் எனது தந்தை 86 ஆயிரம் யூனிட் ரத்தம் கொடுத்துள்ளார். பல சமூக சேவைகளை செய்துள்ளார். அதனால் எங்கள் தந்தை வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தோம் அதனை ஏற்று முதல்வர் அவர்கள் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
எங்கள் குடும்பத்திற்கு இது வாழ்நாள் கவுரவமாக உள்ளது. பொதுவாக கூறுவார்கள் திமுக குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது என பேசுவார்கள். ஆனால் அது அரசியலாக பேசப்படும் வார்த்தை எனவும் கூறினார். எல்லோருக்குமான முதலமைச்சர் என எப்போது கூற ஆரம்பித்தார்களோ அப்போது இருந்து அவர் அப்படித்தான் உள்ளார். அனைத்து சமூகத்தின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி எப்போதுமே அருமை நண்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னால் அணிவகுத்து நிற்பேன் அது எனது வாழ்நாள் கடமை என கூறினார். வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வேன்.
விஜய் மீது அட்டாக்
எம்ஜிஆர் கோடம்பாக்கத்தில் இருந்து நேரடியாக கோட்டை வரவில்லை எனவும் 20 ஆண்டுகள் திமுகவிலிருந்து திமுக வளர்ச்சிக்கு பாடுபட்டு திமுக ஆதரவளித்து அதற்கு பிறகு திமுகவில் சிறிய பிரச்சனையிலிருந்து வெளியே வந்து கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் ஆனார். சினிமாவில் பாட்டு பாடவிட்டு கட்சி ஆரம்பித்து முதலமைச்சரானார் அல்ல.
விஜய்க்கு அரசியல் தெரியவில்லை. சென்னை தீவுத்திடலில் கண்காட்சிக்கு வரக்கூடிய கூட்டத்தை விடவா விஜய்க்கு கூட்டம் வருகிறது. அவருக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது. திருச்சியில் வந்த கூட்டம் நாகப்பட்டினத்தில் வரவில்லை, மனப்பாடம் பண்ணி 3 நிமிடம் படிக்கிறார். அங்கிள் என்கிறார் இது எல்லாம் சினிமாவில் கைத்தட்ட உதவும் எனவும் விஜய்க்கு முதலில் மக்கள் தொடர்பு இருக்க வேண்டும், தொலைபேசி எண்ணை கொடுத்து மக்களுக்கு என்ன பிரச்சனை என கேட்க வேண்டும். எழுதிக் கொடுப்பவர் தவறாக எழுதி கொடுக்கிறார். விஜய் இன்னும் பக்குவப்பட வேண்டும் எனவும் விஜய்க்கு அரசியலில் வாய்ப்பு இருக்கிறது ஆனால் இன்னும் 15, 20 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.
சனிக்கிழமை மட்டும் வந்து பேசுவது சரியாக இருக்காது. அரசியலில் 24 மணி நேரமும் செய்யக்கூடிய ஒரு சேவை அதை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது தான் வெளியே வந்து நின்று பேசுகிறார். விஜய்யை தவறாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அரசியல் என்பதும் தேர்தல் என்பதும் என்ன என்பதை 2026 தேர்தல் விஜய்க்கு புரிய வைக்கும் என எஸ்.வி சேகர் தெரிவித்தார்.
-
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications