Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மூஞ்சி".. நல்லகண்ணுனு ஒருத்தர்.. "பிராமணர்களுக்கு" தனிக்கட்சி.. கமலாலயத்தில் எஸ்வி சேகர் வீசிய வெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிராமணர்களுக்காகவே தனிக்கட்சி ஒன்றை விரைவில் துவங்கப்படும் என்று எஸ்வி சேகர் அறிவித்துள்ளது, தமிழக பாஜகவில் சூறாவளியை கிளப்பி விட்டுள்ளது..!!
சமீபகாலமாகவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை, மறைமுகமாக விமர்சித்து வந்தார் பாஜகவின் தீவிர நிர்வாகியான எஸ்வி சேகர்.. இப்போது பொதுவெளியிலேயே வெளிப்படையாகவே விமர்சிக்க துவங்கிவிட்டார்.

ஏற்கனவே ஒரு யூடியூப் சேனலுக்கு எஸ்வி சேகர் தந்த பேட்டியில், "அண்ணாமலை ஒரு பிராமண விரோதி. கட்சியில் உள்ள பிராமணர்களுக்கு எதிராக அவர் செயல்பட்டு வருகிறார்" என்று கூறியிருந்தார்.

sve shekar criticizes tamilnadu bjp leadeer and brahmins in tamilnadu decided to show strength in single party

டெல்லி போங்க: இதற்கு அண்ணாமலையும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.. "இந்த அண்ணாமலை எவனுக்கும் அடங்கி போக மாட்டான். பழைய பஞ்சாங்கத்தை வைத்து என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. என்னை பற்றி புகார் கொடுக்கணும்னா தாராளமா டெல்லிக்கு போங்க. நானே டிக்கெட் வாங்கி தாரேன்.

எங்க அப்பா அவரு. எங்க தாத்தா இவரு. நான் 40 வருஷமா அப்படி இருந்தேன் என்ற பேச்செல்லாம் என்னிடம் செல்லுபடியாகாது. இதெல்லாம் உங்க வீட்டுல வெச்சுக்கணும். இதை எஸ்வி சேகருக்கு மட்டுமல்ல. அவர் கூட இருக்குற எல்லோருக்கும் சொல்றேன். எனக்கு கொஞ்சம் திமிரு ஜாஸ்தி" என்று அண்ணாமலை காட்டமாகவே கூறியிருந்தார்.

முட்டாள்தனம்: இந்நிலையில், எஸ்வி சேகர் இன்னொரு வீடியோவில் அண்ணாமலையை விமர்சித்துள்ளார். அதில் "அரசியலில் வெற்றி பெற வேண்டுமானால் ஒன்று முக வசீகரம் இருக்க வேண்டும். இல்லையென்றால் பேச்சு திறமை இருக்க வேண்டும். அண்ணாமலையை நான் விமர்சிச்சா, ஏதோ கடவுளையே திட்டுன மாதிரி பேசுறதுலாம் முட்டாள்தனம். கேட்டால் சிங்கம் சிங்கம்னு சொல்ல வேண்டியது. கர்நாடகாவில் அசிஸ்டென்ட் கமிஷனரா ஒரே ரேங்கில் இருந்திருக்கிறார். இதுல என்ன அவரு சிங்கம்னு எனக்கு தெரியல.

நல்லக்கண்ணு: ரஜினிகாந்த் நடித்த படம் அண்ணாமலை. அந்த படத்தின் பெயரை வெச்சிருக்குறதால தமிழ்நாட்டில் இவர் பெயர் பிரபலமாகிவிட்டது. இல்லைனா யாருக்கு தெரியும் இந்த ஆள? வன்னியர்ல கல்யாண ராமன் இருக்காரு. தேவேந்திர குல வேளாளர்ல நல்லக்கண்ணுனு ஒருத்தர் இருக்காரு. அவங்கள எல்லாம் பாஜக தலைவராக ஆக்கலாமே.

ஒரு எம்எல்ஏ சீட்டு கூட ஜெயிக்க முடியாதவர்தான் அண்ணாமலை. இத்தனை பணபலம், ஆள்பலம் கொடுத்தும் அவரால் ஜெயிக்க முடியலைனா என்ன காரணம்.. அதுதான் முகராசி. இந்த மூஞ்சியை பார்த்ததும் எதுக்குடா இதுக்குலாம் ஓட்டு போடணும்னு மக்களுக்கு தோணும். அண்ணாமலையோட மூஞ்சி நம்பிக்கை கொடுக்குற மூஞ்சியா.. இல்லையே" என்று பேசியிருக்கிறார்.

அங்கீகாரம்: இதனிடையே இன்னொரு பேட்டியை எஸ்வி சேகர் தந்துள்ளார். அதில், தனிக்கட்சியை துவங்க போவதாகவும் சொல்லி உள்ளார்.. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்கும் ஏதோ ஒரு பெயரில் கட்சி உள்ளது. அரசியல் அங்கீகாரத்தை பெறும்போது தான். சமுதாயத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை உணர்ந்து இந்த கட்சிகள் எல்லாம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிராமணர்களுக்காக தமிழகத்தில் விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான அனைத்து வேலைகளும் முடிவடைந்து தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பெயர், கொடி எல்லாம் கிடைத்தவுடன் புதிய கட்சி ஆரம்பிக்கப்படும்.. பிராமணர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகவே இந்த புதிய கட்சி தொடங்கப்படுகிறது.

பிராமணர்கள்: சட்டசபையில் ஒரு பிராமணர் கூட எம்எல்ஏவாக இல்லை. பிராமணர்களின் புதிய கட்சி தொடங்கப்பட்ட பிறகு, அதில் பல்வேறு பிராமண சமுதாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இணைந்து செயல்பட உள்ளனர். அப்போதுதான் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பது தெரியவரும். அதே நேரத்தில் என்னை தலைமை தாங்குவதற்கு அழைத்தால் அதற்கு நான் தயாராகவே உள்ளேன்.

சமூகநீதி: பாராளுமன்ற தேர்தலில் பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தி பலத்தை காட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 45 லட்சம் பிராமணர்கள் உள்ளனர். இவர்களில் அனைவருமே வசதியான வாழ்க்கையை வாழவில்லை. பிராமணர்களிலும் தினக்கூலிகளாக உள்ளனர்.. இது போன்ற பிராமணர்களின் நலனுக்காகவே புதிய கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.. மேடான பகுதிகளையும், பள்ளத்தையும் சரி செய்து சமமாக்குவதே சமூக நீதியாகும். ஆனால் அது போன்ற சமூகநீதி இங்கு இல்லை.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பிராமணர்களின் வாக்குவங்கி என்ன? என்பதை நிரூபித்து காட்ட உள்ளோம். அதை வைத்து அடுத்த சட்ட மன்றதேர்தலில் பிராமணர்கள் கட்சி கூட்டணி அமைத்து குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளது.

வீண் விளம்பரங்கள்: பிராமணர்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்றும் நேரத்தில் பிரதமர் மோடியிடம் அது பற்றி எடுத்துச் சொல்லி விட்டு அதன் பிறகே பாஜகவில் இருந்து வெளியேறுவேன். தமிழகத்தில் பாஜக, மோடியின் புகழை உயர்த்தி பிடித்து, கட்சியை வளர்க்க முற்படாமல் வீண் விளம்பரங்களை தான் செய்து கொண்டு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்..

sve shekar criticizes tamilnadu bjp leadeer and brahmins in tamilnadu decided to show strength in single party

ஆக, பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்து கிளம்பி உள்ளது.. ஏற்கனவே, தமிழக பாஜக தலைமை பொறுப்பு மீது எஸ்வி சேகர் தன் விருப்பத்தை பலமுறை வெளிப்படுத்தியிருந்தார்..

சவால்: "தமிழக பாஜக தலைவர் பதவியை தனக்கு கொடுத்தால், அதனை ஏற்கத்தயாராக இருக்கிறேன்" என்று தமிழிசை சவுந்தரராஜன் மாநில தலைமை பொறுப்பில் இருந்தபோதே கூறியிருந்தார்.. அதேபோல, ஆர்கே நகர் தேர்தல் நோட்டாவுக்கு பிறகு, தடுமாறி கொண்டிருந்தது தமிழக பாஜக.. அந்த சமயத்திலும் எஸ்வி சேகர் ஒரு பேட்டி தந்திருந்தார்.

அப்போது, "தமிழகத்தில் பாஜகவின் இப்போதுள்ள ஓட்டு வங்கியை என்னால் அதிகமாக்கி காட்ட முடியும்" என்றும் சவால் விட்டிருந்தார்.
இதற்கு காரணம், எஸ்வி சேகரை பொறுத்தவரை, பிரதமர் மோடி மீது அதிக பாசமும், வெறித்தனமான பக்தியையும் வைத்திருப்பவர் பாஜகவிற்கு வந்ததே மோடிக்காகத்தான் என்பதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வார்.. அவ்வளவு எதற்கு? அன்று வாரணாசிக்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டதும்கூட பிரதமர் மீதான அபிமானத்திற்காகத்தான்.. அதேபோல பிரதமருக்கும் எஸ்.வி.சேகர் மீது எப்பவுமே ஒரு பிடிப்பு இருந்து வருவதாகவே தெரிகிறது..

சூறாவளி: இந்நிலையில், தனிக்கட்சி துவங்குவதாக எஸ்வி சேகர் அறிவித்துள்ளதும், அந்த கட்சிக்கு தலைவராக தன்னை நியமித்தால் அதை ஏற்பேன் என்று தெரிவித்துள்ளதும், பாஜகவுக்குள்ளேயே மிகப்பெரிய புயலை கிளப்பி விட்டு வருகிறது.. இதற்கு தமிழக பாஜக தலைவர் என்ன எதிர்வினையாற்ற போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+