"மூஞ்சி".. கீரை விக்கிற ஆயா.. அதைவிடுங்க.. "பிராமணர்கள் ஓட்டு போட்டால் போதும்"..கமலாலயத்தில் சூறாவளி
சென்னை: தமிழ்நாட்டில் பிராமணர்களுக்காக தொடங்கப்படும் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்றம், பிராமண வேட்பாளர்களுக்கு பிராமணர்கள் மட்டுமே ஓட்டுப்போட்டால் போதும் என்றும் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாகவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை, மறைமுகமாக விமர்சித்து வந்தார் பாஜகவின் தீவிர நிர்வாகியான எஸ்வி சேகர்.. பிறகு பொதுவெளியிலேயே வெளிப்படையாகவே விமர்சிக்க துவங்கிவிட்டார்.

ஒருமுறை யூடியூப் ஒன்றுக்கு எஸ்வி சேகர் தந்த பேட்டியில், "அண்ணாமலை ஒரு பிராமண விரோதி. கட்சியில் உள்ள பிராமணர்களுக்கு எதிராக அவர் செயல்பட்டு வருகிறார்" என்று கூறியிருந்தார்.
டெல்லி போங்க: இதற்கு அண்ணாமலையும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.. "இந்த அண்ணாமலை எவனுக்கும் அடங்கி போக மாட்டான். பழைய பஞ்சாங்கத்தை வைத்து என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. என்னை பற்றி புகார் கொடுக்கணும்னா தாராளமா டெல்லிக்கு போங்க. நானே டிக்கெட் வாங்கி தாரேன்.
எங்க அப்பா அவரு. எங்க தாத்தா இவரு. நான் 40 வருஷமா அப்படி இருந்தேன் என்ற பேச்செல்லாம் என்னிடம் செல்லுபடியாகாது. இதெல்லாம் உங்க வீட்டுல வெச்சுக்கணும். இதை எஸ்வி சேகருக்கு மட்டுமல்ல. அவர் கூட இருக்குற எல்லோருக்கும் சொல்றேன். எனக்கு கொஞ்சம் திமிரு ஜாஸ்தி" என்று அண்ணாமலை காட்டமாகவே கூறியிருந்தார்.
முட்டாள்தனம்: இந்நிலையில், எஸ்வி சேகர் இன்னொரு வீடியோவை பதிவிட்டு, "அரசியலில் வெற்றி பெற வேண்டுமானால் ஒன்று முக வசீகரம் இருக்க வேண்டும். இல்லையென்றால் பேச்சு திறமை இருக்க வேண்டும். அண்ணாமலையை நான் விமர்சிச்சா, ஏதோ கடவுளையே திட்டுன மாதிரி பேசுறதுலாம் முட்டாள்தனம். கேட்டால் சிங்கம் சிங்கம்னு சொல்ல வேண்டியது. கர்நாடகாவில் அசிஸ்டென்ட் கமிஷனரா ஒரே ரேங்கில் இருந்திருக்கிறார். இதுல என்ன அவரு சிங்கம்னு எனக்கு தெரியல.
நல்லக்கண்ணு: ரஜினிகாந்த் நடித்த படம் அண்ணாமலை. அந்த படத்தின் பெயரை வெச்சிருக்குறதால தமிழ்நாட்டில் இவர் பெயர் பிரபலமாகிவிட்டது. இல்லைனா யாருக்கு தெரியும் இந்த ஆள? வன்னியர்ல கல்யாண ராமன் இருக்காரு. தேவேந்திர குல வேளாளர்ல நல்லக்கண்ணுனு ஒருத்தர் இருக்காரு. அவங்கள எல்லாம் பாஜக தலைவராக ஆக்கலாமே.
ஒரு எம்எல்ஏ சீட்டு கூட ஜெயிக்க முடியாதவர்தான் அண்ணாமலை. இத்தனை பணபலம், ஆள்பலம் கொடுத்தும் அவரால் ஜெயிக்க முடியலைனா என்ன காரணம்.. அதுதான் முகராசி. இந்த மூஞ்சியை பார்த்ததும் எதுக்குடா இதுக்குலாம் ஓட்டு போடணும்னு மக்களுக்கு தோணும். அண்ணாமலையோட மூஞ்சி நம்பிக்கை கொடுக்குற மூஞ்சியா.. இல்லையே" என்றார்.
அங்கீகாரம்: இன்னொரு பேட்டியில், எஸ்வி சேகர் பேசும்போது, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்கும் ஏதோ ஒரு பெயரில் கட்சி உள்ளது. அந்த வகையில் பிராமணர்களுக்காக தமிழகத்தில் விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெயர், கொடி எல்லாம் கிடைத்தவுடன் புதிய கட்சி ஆரம்பிக்கப்படும்.. பிராமணர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகவே இந்த புதிய கட்சி தொடங்கப்படுகிறது.
பிராமணர்கள்: சட்டசபையில் ஒரு பிராமணர் கூட எம்எல்ஏவாக இல்லை. பிராமணர்களின் புதிய கட்சி தொடங்கப்பட்ட பிறகு, அதில் பல்வேறு பிராமண சமுதாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இணைந்து செயல்பட உள்ளனர். அப்போதுதான் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பது தெரியவரும். அதே நேரத்தில் என்னை தலைமை தாங்குவதற்கு அழைத்தால் அதற்கு நான் தயாராகவே உள்ளேன்.
சமூகநீதி: பாராளுமன்ற தேர்தலில் பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தி பலத்தை காட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 45 லட்சம் பிராமணர்கள் உள்ளனர். இவர்களில் அனைவருமே வசதியான வாழ்க்கையை வாழவில்லை. பிராமணர்களிலும் தினக்கூலிகளாக உள்ளனர்.. இது போன்ற பிராமணர்களின் நலனுக்காகவே புதிய கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.. மேடான பகுதிகளையும், பள்ளத்தையும் சரி செய்து சமமாக்குவதே சமூக நீதியாகும். ஆனால் அது போன்ற சமூகநீதி இங்கு இல்லை
40க்கு 33 தொகுதிகளில் பிராமண வேட்பாளர்கள் போட்டியிட போகிறார்கள். பிராமண வேட்பாளர்களுக்கு பிராமணர்கள் மட்டும் ஓட்டுப்போட்டால் போதும். அண்டை மாநிலங்களில் எல்லாம் பிராமணர்களுக்கு என ஒரு நல வாரியம் செயல்படுகிறது' என்றார்.
ஆக, அண்ணாமலை மீதான அதிருப்தியும், பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்து கிளம்பியதும், தமிழக மக்களின் கவனத்தை பெற்றிருந்தன.. இந்நிலையில், பிராமணர்களுக்கென தொடங்கப்போகும் கட்சிக்கு, அங்கீகாரம் கிடைத்துவிட்டது. தேர்தலுக்கும் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.
நேர்மையான அரசியல்வாதி: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்விசேகர், காமராஜர், கக்கனுக்கு பிறகு நேர்மையான அரசியல்வாதி எவரும் இல்லை. ஓட்டுக்கு மக்கள் பணம் வாங்குவதும் ஊழல். அதனால், மக்கள் ஊழலை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அண்ணாமலை பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார் நல்ல மாற்றம் வரும். ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தவறாக விமர்சித்துள்ளார். காரணம் அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது.
கட்சி அலுவலகத்தை போலீஸ் ஸ்டேஷன் போல வைத்திருக்கிறார்.. முன்பெல்லாம் பாஜகவில் நேர்மையான, ஒழுக்கமான நபர்கள் இருந்தார்கள்.. இப்போது குண்டர்கள், சந்தன மரம் கடத்தல்காரர்கள், குற்றவாளிகளே பாஜகவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
அண்ணாமலை: நேத்து பெய்த மழையில் இன்னைக்கு முளைத்த காளான் என்பது அண்ணாமலைக்கு பொருந்தும்.. பாஜகவில் இருந்து பிராமணர்களை ஒழித்துக்கட்டுவேன் என அண்ணாமலை தீர்மானம் எடுத்திருக்கிறார்.. அவர் சார்ந்த சமூகத்தை தவிர வேறு யாரும் பாஜகவில் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் அண்ணாமலை நடந்துகொள்கிறார். அதனுடைய பலன் 2024-ல் தெரியும். ஆனால் அப்போது அண்ணாமலை தமிழக பாஜகவில் இருப்பாரா? என்பது தெரியாது என எஸ்வி சேகர் ஆருடம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுகவுடன் கருத்து மோதல் ஏற்பட்டு, கூட்டணியில் பாஜக இல்லை என்ற அளவுக்கு போய்விட்டது.. இதற்கெல்லாம் காரணம் அண்ணாமலையே என்று கூறி, இந்த முடிவை நேற்று மாஜி அமைச்சர் ஜெயக்குமாரும் அறிவித்துவிட்டார்..
இப்போது, எஸ்வி சேகரும் அண்ணாமலையை வெளிப்படையாக குற்றஞ்சொல்லி உள்ளதால், பாஜகவுக்குள்ளேயே மிகப்பெரிய புயலை கிளப்பி விட்டு வருகிறது.. இதற்கு தமிழக பாஜக தலைவர் என்ன எதிர்வினையாற்ற போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
-
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications