"காரித்துப்புறாங்க".. வாய் பெருசா இருக்கே.. பாஜக அனுபவிக்குது.. பிராமணர்களின் முதல் கல்: எஸ்.வி சேகர்
சென்னை: பிராமணர்களுக்காகவே தனிக்கட்சி ஒன்றை விரைவில் துவங்கப்படும் என்று எஸ்வி சேகர் அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார். இது தொடர்பான ஆடியோ ஒன்றும் இணையத்தை சுற்றி வருகிறது.
சமீபகாலமாகவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை, மறைமுகமாக விமர்சித்து வந்தார் பாஜகவின் தீவிர நிர்வாகியான எஸ்வி சேகர்.. இப்போது பொதுவெளியிலேயே வெளிப்படையாகவே விமர்சிக்க துவங்கிவிட்டார்.
நேற்றைய தினம் ஒரு பேட்டியில் பிராமணர்களுக்காகவே தனிக்கட்சி ஒன்றை துவங்க போவதாகவும் எஸ்வி சேகர் சொல்லி உள்ளார். தொடர்ந்து பேசும்போது, "தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்கும் ஏதோ ஒரு பெயரில் கட்சி உள்ளது. அரசியல் அங்கீகாரத்தை பெறும்போது தான். சமுதாயத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை உணர்ந்து இந்த கட்சிகள் எல்லாம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிராமணர்களுக்காக தமிழகத்தில் விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளது.
இது தொடர்பான அனைத்து வேலைகளும் முடிவடைந்து தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பெயர், கொடி எல்லாம் கிடைத்தவுடன் புதிய கட்சி ஆரம்பிக்கப்படும்.. பிராமணர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகவே இந்த புதிய கட்சி தொடங்கப்படுகிறது.

பிராமணர்கள்: சட்டசபையில் ஒரு பிராமணர் கூட எம்எல்ஏவாக இல்லை. பிராமணர்களின் புதிய கட்சி தொடங்கப்பட்ட பிறகு, அதில் பல்வேறு பிராமண சமுதாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இணைந்து செயல்பட உள்ளனர். அப்போதுதான் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பது தெரியவரும். அதே நேரத்தில் என்னை தலைமை தாங்குவதற்கு அழைத்தால் அதற்கு நான் தயாராகவே உள்ளேன்.
சமூகநீதி: பாராளுமன்ற தேர்தலில் பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தி பலத்தை காட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 45 லட்சம் பிராமணர்கள் உள்ளனர். இவர்களில் அனைவருமே வசதியான வாழ்க்கையை வாழவில்லை. பிராமணர்களிலும் தினக்கூலிகளாக உள்ளனர்.. இது போன்ற பிராமணர்களின் நலனுக்காகவே புதிய கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.. மேடான பகுதிகளையும், பள்ளத்தையும் சரி செய்து சமமாக்குவதே சமூக நீதியாகும். ஆனால் அது போன்ற சமூகநீதி இங்கு இல்லை.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பிராமணர்களின் வாக்குவங்கி என்ன? என்பதை நிரூபித்து காட்ட உள்ளோம். அதை வைத்து அடுத்த சட்ட மன்றதேர்தலில் பிராமணர்கள் கட்சி கூட்டணி அமைத்து குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்..
ஏற்கனவே தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல்கள் வெடித்துவரும் நிலையில், பிராமணர்களுக்காகவே தனிக்கட்சி என்று எஸ்வி சேகர் கூறியிருப்பது பெருத்த பரபரப்பை கமலாலயத்தில் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நேரடியாகவே சாடியிருக்கிறார்.. அதில், பல்வேறு குற்றச்சாட்டுகளையும் வரிசைப்படுத்தி உள்ளார் எஸ்வி சேகர்.. இந்த ஆடியோவும் ட்விட்டரில் வெளியாகி அதிர்வலையை தந்து வருகிறது.
எஸ்வி சேகர் அந்த ஆடியோ பேட்டியில், "சங்கத்திற்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்புமில்லாத ஒருத்தரை கொண்டு வந்திருக்காங்க.. குறைந்தபட்சம் 10 வருஷமாவது சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.. 10 வருஷமாவது கட்சியில் பணியாற்றியிருக்க வேண்டும்.. அப்படிப்பட்டவர்களையே தலைமை பதவியில் அமர வைக்க வேண்டும், என்பன போன்ற விதிகளை எல்லா உடைத்து கொண்டு, இவரை தலைமை பொறுப்பில் உட்கார வைத்திருக்கிறார்கள்.

கெட்டுப்போச்சு: அதன் விளைவுகளைதான், தமிழக பாஜக இன்று அனுபவிக்கிறது. அது இப்போ டெல்லி வரை போயிருக்கிறது.. தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு மொத்தமாக கெட்டுப்போயிடுமே என்ற பயத்தில்தான், அண்ணாமலையை இங்கிருந்து மாற்றி கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே போய் சும்மா இருக்கிறதில்லை..
பூக்கூடைகளை வாங்கி வைத்து கொள்வது, தான் வரும் வழியெல்லாம் பூக்களை போட சொல்ல வேண்டியது.
பிரியாணி தந்து ஆளை அழைத்து வருவது.. காசு தர வேண்டியது.. இவங்க எல்லாம் அண்ணன் வாழ்க என்று கத்த வேண்டியது.. என்ன இதெல்லாம்?
மேகதாது: பெங்களூருவில் போய், எந்த முட்டாளாவது இப்படி பேசுவாங்களா? மேகதாதுவை கட்ட விட மாட்டேன்னு சொல்லுவாங்களா? கர்நாடகா முழுக்க 1 கோடி தமிழர்கள் இருக்காங்க.. அவங்க தமிழ்நாட்டுக்கு வந்து தினமும் தண்ணி குடிச்சிட்டு போவாங்களா? பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சமாவது யோசிச்சு பேசவேணாமா? அந்த போனால், அந்த மாநில அரசியலை தானே பேசணும்? வாய் பெரிசா இருந்தால், எதை வேணும்னாலும் பேசுறதா.. வியாதிக்காரன் வாந்தி எடுத்த மாதிரி..
நாம எது செய்தாலும் அது, மோடி காதுக்கோ, அமித்ஷா காதுக்கோ, நட்டா காதுக்கோ போகவே போகாது என்று அண்ணாமலை நம்பிக் கொண்டிருக்கிறாரா? அன்று முதல்வராக இருந்த ஜெயலலிதா தண்ணீர் விவகாரம் குறித்து கேட்டதுமே, சதானந்த கவுடா, உடனே தண்ணீரை திறந்து விட்டார்.. எதுவுமே நாம நடந்து கொள்ளும் விதத்தில்தான் உள்ளது.. 2024-ல் இந்த பார்ட்டி ஒழியுதே என்ற கவலை வந்துவிட்டது..
அண்ணாமலை என்ற நபருக்கு நான் எதிரியில்லை.. இன்னும் சொல்லப்போனால், அண்ணாமலையெல்லாம் என் எதிரி என்பதற்கான தகுதியே கிடையாது. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? எதிரியாள் எல்லா முட்டாள்ன்னு நினைக்க கூடாது.. அண்ணன் போனால் திண்ணை காலியாகும் என்று நினைக்கக்கூடியவர்கள் நாங்கள் கிடையாது. பக்கத்து ஸ்டேட்ல இருந்து காரி துப்புறாங்க.. இதே பாஜகவில் காரி துப்பறாங்க.. வெட்கமா இல்லையா? பொதுஇடங்களில் எங்கியுமே இதுக்கு பதில் சொல்றதே கிடையாது.
பிராமணர்கள்: பிராமணர்கள் எல்லாம் அண்ணாமலையை ஒதுக்கிட்டாங்கன்னு சொல்றாங்க.. அது கிடையாது.. முக்குலத்தோர் சமுதாயத்திரையும் சேர்த்து இவர்தான் ஒதுக்குகிறார்.. "எங்களை அடையாளம் காணும்படி அண்ணாமலை செய்வதில்லை" என்று அவர்கள் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறார்கள். இப்படி எல்லா தரப்பிலுமே அதிருப்திகள் கிளம்பி உள்ளன. ஆனால், இதற்கான முதல் குரலை, பிராமணர்கள் இப்போது தந்திருக்கிறார்கள்.. அவ்வளவுதான்.. இனிமேல் மற்றவர்களும் எதிர்ப்புக்குரல் தருவார்கள்.. அப்போது புரியும்" என்றார் எஸ்வி சேகர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications