சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சக்ஸஸ்.. சக்ஸஸ்.. எஸ்.வி.சேகர் ரொம்ப நாளா தேடிட்டிருந்த வீடியோ சிக்கி விட்டதாம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    எஸ்.வி.சேகர் ரொம்ப நாளா தேடிட்டிருந்த வீடியோ

    சென்னை: ரொம்ப நாளா எஸ்வி சேகர் ஒரு வீடியோ தேடிட்டு இருந்தாராம்.. அது இப்போதுதான் கிடைத்திருக்காம். அதை பதிவிட்ட பிறகுதான் நிம்மதியே ஆயிருக்கார்!

    தமிழக வளங்கள் பல்வேறு துறையினராலும் கொள்ளை அடிக்கப்பட்டு வருவது தெரிந்த சமாச்சாரமே. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், 8 வழிச்சாலை போன்ற பெயர்கள் நிறையவே அடிபட்டு வருகிறது.

    இதற்கெல்லாம் பாஜகதான் காரணம் என்று எதிர்க்கட்சிகளும், நாங்கள் மக்களுக்கு நல்லதுதான் செய்கிறோம் என்று பாஜக தரப்பும் சொல்லி வருகிறது.

    தனியார் பால் விலை உயர்வை தொடர்ந்து ஆவின் பாலின் விலையும் உயர்கிறது.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் விலை உயர்வை தொடர்ந்து ஆவின் பாலின் விலையும் உயர்கிறது.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    போராட்டம்

    போராட்டம்

    ஆனால் எந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் எல்லா கட்சிகளும் சேர்ந்தே எதிர்க்கின்றன, சேர்ந்தே குரல் கொடுக்கின்றன, போராடுகின்றன. அதனால் யார்தான் இந்த திட்டங்களை கொண்டு வருகிறார்கள், யார்தான் மத்திய அரசுக்கு துணை போகிறார்கள் என்பது நமக்கு தெரியவே மாட்டேங்குது.

    மீத்தேன்

    மீத்தேன்

    இப்போது பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் ஒரு சமாச்சாரத்தை கொண்டு வந்துள்ளார். மீத்தேன் விவகாரத்தில், திமுக மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதற்காக ஒரு வீடியோ ஆதாரத்தையும் தேடி வந்துள்ளார். அந்த வீடியோ இப்போது எஸ்வி சேகருக்கு கிடைத்துவிட்டது போலும். ட்வீட் செய்து வீடியோ ஆதாரத்தையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், டி.ஆர். பாலு செய்தியாளர்களிடம் பேசுகிறார். மீத்தேன் திட்டம் கொண்டு வந்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்க, அதற்கு திமுகதான் கொண்டு வந்தது என்று பதிலளிக்கிறார்.

    வீடியோ

    வீடியோ

    இதனை பதிவிட்ட எஸ்விசேகர், "#ரொம்பா நாளா தேடிட்டுருந்த வீடியோ! #மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்த பெருமை என்னை மட்டும் சேராது!எங்களின் #திமுக கட்சியையே சாரும்,இதே போல இன்னும் பல திட்டங்களை தஞ்சை மாவட்டத்திற்கு கொண்டு வருவோம்-டிஆர் பாலு! #மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்து போட்ட திமுக உதிர்த்த வார்த்தைகள்!" என்ற வரிகளையும் பதிவிட்டுள்ளார்.

     முக ஸ்டாலின்

    முக ஸ்டாலின்

    அதாவது மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தது திமுகதான் என்பதை ஆதாரப்பூர்வமாக சொல்ல வருகிறார் எஸ்வி சேகர். ஆனால் இந்த நேரத்தில் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. கடந்த 2016, மே மாதம் 10-ம் தேதி, மன்னார்குடியில் டிஆர்பி ராஜாவுக்கு முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியபோது சொன்னதாவது:

    ஏன் ரத்து செய்யவில்லை?

    "மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த நான்தான் காரணம் என்று ஜெயலலிதா கூறி வருகிறார். இந்த திட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மட்டும்தான் நான். இதற்கு அனுமதி கொடுக்க வேண்டியது மத்திய அரசுதான். இந்த திட்டத்தால் பாதகம் வரும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து அத்திட்டத்தை நாங்கள் கைவிட்டுவிட்டோம். ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

     ஜெயலலிதா

    ஜெயலலிதா

    இப்போது எஸ்.வி.சேகர் வீடியோவுக்கு போட்டியாக திமுக தரப்பு ஜெயலலிதா தொடர்பான ஆதாரத்தை எடுத்து வருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    BJP Member Sve Shekher has accused the DMK of bringing the Methane Plan to Tamilnadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X