தமிழகத்தில், துப்புரவு பணியாளர்கள் பெயர் மாற்றம்.. முதல்வர் அசத்தல் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இனிமேல் துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் துப்புரவு பணியாளர்கள் என்று அழைக்கப்பட மாட்டார்கள். அதற்கு பதிலாக தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.
கடந்த 9ம் தேதி முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டசபை விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், 12,552 ஊரக சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்றார்.

ஸ்மார்ட் மீட்டர்கள்
மேலும், கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.330 கோடியில் சுற்றுவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும், தொழில்நுட்ப வணிக இழப்புகளை குறைக்க ஸ்மார்ட் மீட்டர்கள் செயல்படுத்தப்படும். இதன்படி, சென்னையில் 42 லட்சம் மின்சார நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த ரூ. 4,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதைவடம்
தூத்துக்குடி, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 கி.மீ பாதையில் ரூ. 300 கோடியில் புதைவடை மின் தடம் அமைக்கப்படும், முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதைவட கம்பிகள் அமைக்கப்படும், கால்நடைகளை பாதுகாக்க ரூ. 258 கோடியில் 9,000 மாட்டுக்கொட்டகைகள் 6,000 ஆட்டுக்கொட்டகைகள் கட்டித்தரப்படும்.
|
தூய்மை பணியாளர்கள்
விளைநிலங்களை அதிகரிக்கும் வகையில் 1000 கிணறுகள் ரூ. 99 கோடி மதிப்பில் அமைக்கப்படும், மக்கள் நலன், பொது சுகாதாரத்தை பேணும் வகையில் பணியாற்றிடும் துப்புரவு பணியாளர்களின் செயல்பாடுகளை கௌரவிக்கும் வகையிலும், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடவும், அனைத்து துப்புரவு பணியாளர்களும் இனி "தூய்மை பணியாளர்கள்" என அழைக்கப்படுவர். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பெயர் மாற்றம்
இலவசம் என்று கூறினால், மதிப்பு குறைவு என்பதால், விலையில்லா திட்டங்கள் என அதற்கு பெயர் சூட்டினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஊனமுற்றோர் என்று கூறுவது சரியான வார்த்தை கிடையாது என்பதால் மாற்றுத் திறனாளிகள் என்ற வார்த்தை பயன்பாடு எல்லா இடங்களிலும் கொண்டு வரப்பட்டது. அதேபோல துப்புரவு என்பதை விடவும், தூய்மை என்ற வார்த்தை நன்றாக இருப்பதுதான் இந்த பெயர் மாற்றத்திற்கு காரணம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications