மிஸ் பண்ணாதீங்க.. இந்த ஆவணங்கள் இருக்கா? இனி ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. வருகிறது புது திட்டம்
ஆவணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும், புதிய சேவையை மத்திய அரசு கொண்டு வரப்போகிறதாம்
சென்னை: ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உட்பட ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா? அனைத்து ஆவணங்களிலும் ஒரே மாதிரியான திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமா? இதோ புதிய சேவையை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நம் எல்லாரிடமும் டிரைவிங் லைசென்ஸ், ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை என பல்வேறு ஆவணங்கள் இருக்கும்.. இவை ஒவ்வொன்றுமே மிக முக்கியமான ஆவணங்கள் ஆகும்.
எனினும் இந்த ஆவணங்கள் தொடர்பாக பலருக்கு ஏதாவது குழப்பம், சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கும்.. குறிப்பாக டிரைவிங் லைசென்ஸ், ஒரு முகவரியில் இருக்கிறதென்றால், ரேசன் கார்டில் வேறு முகவரி இருக்கும்... இதனால் பல குழப்பங்கள் முளைத்துவிடும்..

ஹேப்பி நியூஸ்
இப்படி அட்ரஸ் மட்டுமல்ல, ஒவ்வொரு ஆவணத்திலும் முகவரி தவிர, மற்ற விவரங்களும் மாறி குழப்பமாக இருக்க வாய்ப்பு உள்ளது... இதனால் சம்பந்தப்பட்ட ஆவணங்களை திருத்த வேண்டி வரும்.. ஆனால், எல்லா ஆவணங்களிலும் ஒரே மாதிரியான விவரங்களை திருத்தி கொண்டு வருவது மிக மிக சிரமமான காரியம்.. ஏனென்றால், ஒவ்வொரு விவரங்களையும் மாற்றுவதற்காக, ஒவ்வொரு ஆவணத்திற்கும், ஒவ்வொரு இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும்.. இதற்காகவே நாட்களை ஒதுக்கி அலைச்சலை மேற்கொள்ள வேண்டி வரும்.. அப்படியும், சில பிழைகள் ஆவணங்களில் வந்துவிடக்கூடும்.

செம்ம அறிவிப்பு
அதனால்தான், இப்படியான குழப்பத்துக்கு விரைவில் மத்திய அரசு ஒரு முடிவு கட்டப்போகிறதாம். குழப்பங்களை தீர்ப்பதுடன், ஆவணங்களில் உள்ள பிழைகளை சரி செய்து கொள்ளவும், பொதுமக்களின் வேலையை எளிமைப்படுத்தவுமே அந்த புது திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாம்... அதன்படி, விரைவில் ஒரு புதிய சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், அந்த புதிய அமைப்பை வடிவமைத்து வருவது குறித்து எகனாமிக் டைம்ஸில் செய்தியும் வெளியிட்டுள்ளது.

டிரைவிங் லைசென்ஸ்
இதன் மூலம், ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால், அந்த மாற்றங்கள் தானாகவே மற்ற ஆவணங்களிலும் புதுப்பிக்கப்படும்.. அதாவது, ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால், அந்த மாற்றங்கள் தானாகவே மற்ற ஆவணங்களிலும் புதுப்பிக்கப்படும். உங்களது விவரங்களை ஆதார் அட்டையில் அப்டேட் செய்தால் ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் அவை புதுப்பிக்கப்படும்.. இதற்காக நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. எல்லா ஆவணங்களும் ஒரே மாதிரியான விவரங்களை கொண்டதாக இருக்கும்..

சூப்பர் ஸ்கீம்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் போக்குவரத்து, ஊரக மேம்பாடு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இந்த புதிய அமைப்பை உருவாக்குவது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை வழங்கும் துறைகளிடம் முதலில் ஐடி துறை ஆலோசித்து முடிவெடுக்கும்... அதற்கு பிறகு, இந்த புதிய சேவைகள் பாஸ்போர்ட் போன்ற பிற ஆவணங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications