3 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. இந்த 16 மாவட்டங்களிலும் செம்ம மழை வரப்போகுதாம்.. எங்கேன்னு பாருங்க
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் வெயில் கடுமையாகவே நிலவி வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் உட்பட பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வெப்பத்தின் தாக்கத்தை இந்த கோடை மழை குறைக்க தற்சமயம் உதவியுள்ளது.. அதற்கேற்றவாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

மழைக்கு சான்ஸ்
அதன்படி, இன்று முதல் 4 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.. அந்த அறிக்கையில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று ஏப்ரல் 3ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

வானிலை
இதனால் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல நாளைய தினம், அதாவது, 4,5ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது..

வார்னிங்
மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்று கூறியிருந்த வானிலை மையம், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் கூடுதலாக அறிவித்திருந்தது.

மெயின் ஏரியா
இந்நிலையில், இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.. இதனால் தமிழகத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது. அதன்படி இன்று செங்கல்பட்டு, சென்னை, கோவை, காஞ்சி, தேனி, திருப்பூர், நெல்லை, தென்காசி, கடலூர், குமரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட்












Click it and Unblock the Notifications