"அடிமடியிலேயே".. லட்டு மாதிரி "டாக்டரை" தூக்கிருச்சே திமுக.. காரணம் யார் தெரியுமா.. விழிக்கும் பாஜக

கொங்கு பாஜகவில் இருந்து டாக்டர் கணேசன் திமுகவில் இணைந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் அடிமடியிலேயே பாஜக கை வைத்தால், பாஜகவுக்கே ஷாக் தந்து கொண்டிருக்கிறது கொங்கு திமுக.. என்ன நடந்தது?

கடந்த ஒரு வருட காலமாகவே, தமிழக கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு பாஜக வலையை விரித்துள்ளது.. அப்செட்டில் உள்ளவர்கள், சீட் கிடைக்காமல் ஒதுங்கி இருப்பவர்கள், போதுமான அங்கீகாரம் தராமல் ஒதுக்கப்பட்டவர்கள், போஸ்டிங் கிடைக்காதவர்கள், இப்படியானவர்களுக்கு தூண்டிலை வீசி வருகிறது.

எனினும், சொல்லி கொள்ளும் அளவுக்கு அதிமுக, திமுக தரப்பில் இருந்து பாஜக பக்கம் யாரும் தாவவில்லை என்பதே உண்மை. இன்னும் சொல்லப்போனால், திமுக மீது அதிருப்தி கொண்டு, பாஜக பக்கம் தாவிய சீனியர்கள் சிலர், மறுபடியும் திமுகவுக்கே வரப்போகிறார்களாம் கு.க.செல்வத்தை போல.

 ஹாட் நியூஸ்

ஹாட் நியூஸ்

போதாக்குறைக்கு, தமிழக பாஜகவுக்குள்ளேயே சறுக்கல்களும், சர்ச்சைகளும், பூசல்களும் வெடித்து கிளம்பி உள்ள நிலையில், அக்கட்சியில் சேருவதற்கு யாரும் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்றே சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, சமீபகாலமாக நடந்து வரும் பாஜக பூசல்களினால், காயத்ரி ரகுராம், டெய்ஸி போன்ற பெண் நிர்வாகிகளையும், தங்கள் கட்சி பக்கம் இழுக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் முயன்று வருவதாகவும் தகவல்கள் வட்டமடிக்கின்றன.. ஆனாலும், மாற்று கட்சியில் உள்ளவர்களை இழுக்க பாஜக தன் முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறது.. அதுக்காக, கூட்டணியில் உள்ள அதிமுகவின் அடிமடியிலேயே கையை வைத்து விடும் என்று யாரும் நினைக்கவில்லை.

ஷாக்கிங்

ஷாக்கிங்

அதிமுகவை சேர்ந்த நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் நேற்றைய தினம் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துவிட்டார்.. "பாரதப் பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று, பாஜக மூத்த தலைவர்களின் முன்னிலையில் அன்பழகன் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்" என்று அண்ணாமலையும் தெரிவித்திருந்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகளையே, தங்கள் கட்சியில் சேர்க்கும் நடவடிக்கையில் அண்ணாமலை ஈடுபட்டு வருவது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 1 2 3 4 டீம்கள்

1 2 3 4 டீம்கள்

அதேபோல, அதிமுகவின் சூழல், பாஜகவை தவிர திமுகவுக்கும் சாதகமாகி கொண்டிக்கிறது.. காரணம், அக்கட்சி இப்போது 4 ஆக பிரிந்து கிடக்கிறது.. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், டிடிவி தினகரன், சசிகலா தலைமையில் ஒரு அணியும் இருந்து வருகிறது... பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேரும் மனநிலையில் இருக்காத நிலையில், தொண்டர்களும், நிர்வாகிகளும் பல்வேறு கட்சிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்... அந்தவகையில் பெருத்த லாபம் திமுகவுக்கே கிடைத்து வருகிறது.

ஆறுகுட்டி

ஆறுகுட்டி

சமீபத்தில் அதிமுக மாஜி எம்எல்ஏ ஆறுகுட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்து கொண்டனர். 2 நாட்களுக்கு முன்பு, முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் ஆதரவாளர்களுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்... இப்படி பல்வேறு நிர்வாகிகள் அதிமுகவை விட்டு வெளியேறி வருவது குறித்து, எடப்பாடி பழனிசாமிக்கோ, ஓபிஎஸ்ஸுக்கோ கவலையே இல்லை என்று தொண்டர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

 மேஜர் புள்ளி

மேஜர் புள்ளி

இந்நிலையில், பாஜகவின் முக்கிய புள்ளி ஒருவரை திமுக தட்டி தூக்கி உள்ளது.. பாஜக மாநில கூட்டுறவு அணி மாநில செயலாளர் டாக்டர் கணேசன், பாஜகவில் இருந்து விலகி உள்ளார்.. இன்றைய தினம், தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.. ஏற்கனவே பாஜக மகளிர் அணி உட்பட ஏராளமானவர்களை செந்தில் பாலாஜி திமுக பக்கம் கொக்கி போட்டு இழுத்து வருவதாக, தமிழக பாஜக கடுப்பில் உள்ளது.. அதுவும் கொங்குவிலேயே குறி வைத்து, நிர்வாகிகளை தூக்குவதாக பாஜக எரிச்சலில் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு புள்ளியையும் தங்கள் பக்கம் இழுத்து, மறுபடியும் கொங்கு பாஜகவுக்கே ஷாக் தந்துள்ளார் செந்தில்பாலாஜி..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+