Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சின்னத்தம்பி" வந்தாச்சு.. துள்ளி குதித்த ரஜினிகாந்த்.. "சௌந்தர்யா" சொன்ன ஹேப்பி நியூஸ்.. பூரிப்பு

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் வீட்டில் இருந்து சந்தோஷமான செய்தி ஒன்று வந்துள்ளது.. ரஜினி மீண்டும் தாத்தாவாகி உள்ளார்.. இளைய மகள் சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ரஜினிகாந்த்தை பொறுத்தவரை, ஆரம்ப காலத்தில் சில சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும்கூட, தனக்கென
தென்னக திரையுலகின் முக்கிய புள்ளியாகவும், தமிழகத்தின் மிக முக்கிய விஐபியாகவும் கருதப்பட்டு வருகிறார்.

வெறும் நடிகராகவே மட்டும் தன்னை முன்னிறுத்தி கொண்டிருந்தால், ரஜினியின் இமேஜ் இன்றுவரை உச்சத்திலேயே தொடர்ந்து நீடித்திருந்திருக்கும்.

"மேலிட" பிரஷர்

ஆனால், அரசியலுக்கு வரப்போவதாக சொல்லி, அவர் முன்னெடுத்த வியாபார யுக்திதான், அவரது மதிப்பையே மக்களிடம் குலைக்க வைத்துவிட்டது.. ரசிகர்களையும் களைத்து போகவைத்துவிட்டது. போதாக்குறைக்கு "மேலிட" அரசியல் அழுத்தங்கள், இன்னொருபக்கம் உடல்நல பிரச்சனை என பல இன்னல்களில் ரஜினி அவஸ்தைக்குள்ளாகி வருவதையும் மறுக்க முடியாது.. வீட்டிற்குள்ளேயேகூட, தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினரால் ஏற்பட்ட மனவருத்தமும் அதிகமாகவே இருந்து வந்துள்ளது..

அபெக்ஸ்

அபெக்ஸ்

இத்தனை சிக்கல்கள் வீட்டிற்குள் உள்ளேயும், வீட்டிற்கு வெளியேயும் இருந்தாலும், அவருக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தரக்கூடிய விஷயம், இரண்டாவது மகள் சௌந்தர்யாதான். அபெக்ஸ் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகனுக்கு தனது இரண்டாவது மகள் சௌந்தர்யாவை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். மிக அழகான அந்தஸ்தான குடும்பத்தில் சம்மந்தம் வைத்துக் கொண்டதில் ரஜினிக்கு ஏக சந்தோஷம் உண்டு.

 பூரிப்பு + குஷி

பூரிப்பு + குஷி

மகளின் வாழ்க்கை அழகாக இருப்பதில் ரஜினிக்கு அளவுக்கடங்கா மகிழ்ச்சியும்கூட.. இதனை பலமுறை சௌந்தர்யாவிடமே சொல்லி சொல்லி ஒரு அப்பாவாக ஆனந்தவயப்படுவாராம் ரஜினி. இப்படிப்பட்ட சூழலில்தான், மகிழ்ச்சியான செய்தி ரஜினி வீட்டில் இருந்து வெளிவந்துள்ளது.. ஆம்... நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சௌந்தர்யாவுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை ஒன்று உள்ளது..

 சின்னதம்பி

சின்னதம்பி

இப்போது இன்னொரு ஆண் குழந்தை பிறந்துள்ளதால், ரஜினி மற்றும் வணங்காமுடி ஆகிய இரு குடும்பத்தினரும் ஆனந்தத்திலும், குஷியிலும் இருக்கின்றனர்.. இதுகுறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் தமது ட்விட்டர் பக்கத்தில், இறைவன் அருள் மற்றும் பெற்றோரின் ஆசீர்வாதத்தால் ஆண் குழந்தை பிறந்ததாகவும், தன்னுடைய மூத்த மகனுக்கு சின்னத்தம்பி வந்து விட்டதாகவும் மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+