Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகத்துக்கே அல்வா கொடுக்கும் திருநெல்வேலிக்கு.. இது இனிப்பான செய்தி.. நெல்லைன்னாலே கெத்துதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகத்துக்கே அல்வா கொடுத்து தித்திப்பை தரும் திருநெல்வேலி மக்களே, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தான் தெற்கு ரயில்வே மூலம் இயக்கப்படும் ரயில்களிலேயே அதிக வருவாய் ஈட்டிய ரயில் என்பது தெரியவந்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் எத்தனை பேர் சென்னையில் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தால் நிச்சயம் ஆச்சர்யமான உண்மை தெரியவரும். ஆம் ஒவ்வொரு ஊரில் ஏராளமானோர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கிறார்கள். பல வீடுகளில் வீட்டுக்கு ஒருவர் சென்னையில் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

சென்னை என்பது அவர்களுக்கு மிக சர்வசாதாரணம்.. நைட்டு ஏறினால் காலையில் இறங்கிவிடுவார்கள். தொழில் காரணமாகவும், வாழ்வதாரத்திற்காகவும் பிறந்த மண்ணை விட்டு விட்டு, திருநெல்வேலி , தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் பேர் சென்னையில் வாழ்கிறார்கள். இதன் காரணமாக சென்னையில் சில நாட்களும், சொந்த ஊரில் சில நாட்களும் என அடிக்கடி ஊருக்கு போய் வருகிறார்கள் நெல்லை சீமை மக்கள்.

Sweet News: Nellai Express Train is Highest grossing train In Southern Railway

இதனால் நெல்லையை மையப்படுத்தி விடப்படும் எல்லா ரயில்களுமே முன்பதிவில் ஹவுஸ்புல் தான். எப்போதுமே நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் கிடைக்காது. எப்போதுமே நெல்லை எக்ஸ்பிரஸ் முன்பதிவு மின்னல் வேகத்தில் முடிந்து விடும். தக்கலில் நெல்லை எக்ஸிபிரஸ் ரயிலில் டிக்கெட் எடுத்தால் அவர்களுக்கு அதுநிச்சயம் லைப் டைம் செட்டில்மெண்ட் என்பதாகவே இருக்கும். ஏனெனில் அது சாத்தியமே இல்லாத ஒன்று.

முன்பதிவு பெட்டிகளில் இப்படி என்றால், முன்பதிவு செய்யாத பெட்டிகளில் நிலைமை நினைத்துக்கூட பார்க்க முடியாது. நெல்லை எக்ஸ்பிரஸ்க்காக காத்திருக்கும் மக்கள் கூட்டத்தை ரயில் நிலையங்களில் பார்த்தாலே புரியும். இவ்வளவு தூரம் சொல்லக்காரணம் தெற்கு ரெயில்வே மூலம் இயக்கப்படும் ரயில்களில் அதிக வருவாய் ஈட்டி தரக்கூ டியது நெல்லை அதிவேக ரயிலாகும்.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் நெல்லை எக்ஸ்பிரஸ் முதலிடத்தில் உள்ளது. எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் இயக்கப்படும் இந்த ரயில் எப்போதும் முழு பயணிகள் கொள்ளளவுடன் செல்லும் என்பதால் அதிக வருவாய் ஈட்டி இருக்கிறது, முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்புவதுடன் முன்பதிவில்லாத பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பியே இருக்கும் என்பதால் தெற்கு ரயில்வே நெல்லைக்கே பொதுவாக சிறப்பு ரயில்களை அறிவிக்கும். நெல்லை எக்ஸ்பிரஸ் என்று இல்லை, திருநெல்வேலி, எழும்பூர் இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரசிலும் இடங்கள் விரைவாகவே நிரம்பிவிடும்.

Sweet News: Nellai Express Train is Highest grossing train In Southern Railway

இதனால் தான் தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து செல்லக்கூடிய ரயில்களில் நெல்லை எக்ஸ்பிரஸ் வருவாய் ஈட்டுவதில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த 4 மாதத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.23 கோடி கிடைத்ததாக கூறப்படுகிறது. அதிக பயணிகள் பயணம் செய்த ரெயிலாகவும் நெல்லை சூப்பர் பாஸ்ட் இருக்கிறது.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்ட பிறகு பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிக அளவு உயர்ந்துள்ளது. பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் இதில் இடமே கிடைக்காது. 3, 4 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால் மட்டுமே இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. தென்மாவட்ட மக்களின் இதயமாக இருக்கும் நெல்லை எக்ஸ்பிரஸ் தான் தெற்கு ரயில் அளவில் பார்க்கும், வணிக ரீதியாக அதிக லாபம் ஈட்டி உள்ளது. தெற்கு ரயில்வே இதனைகருத்தில் கொண்டு நெல்லை பகுதிக்கு கூடுதலான ரயில்கள் (அதிக கட்டண ரயில்கள் வேண்டாம்) விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+